இறைவனுக்கு நன்றி கூறி காலைப்பொழுதை தொழுகையோடு துவக்குவோம்! வரலாற்றில் ஒரு ஏடு!!

இறைவனுக்கு நன்றி கூறி காலைப்பொழுதை தொழுகையோடு துவக்குவோம்! நாம் கேட்காமலே அருளப்பட்ட இந்த வாழ்க்கைக்காக, ஒரு உண்மையான முஃமின் இறைவனுக...

இறைவனுக்கு நன்றி கூறி காலைப்பொழுதை தொழுகையோடு துவக்குவோம்!

நாம் கேட்காமலே அருளப்பட்ட இந்த வாழ்க்கைக்காக, ஒரு உண்மையான முஃமின் இறைவனுக்கு நன்றி செலுத்துபவராக மட்டுமில்லாமல், இறைவனும் அவனுடைய தூதரும் கற்றுத்தந்த வகையில் பயனுள்ளதாகவும் மாற்றிக்கொள்ள வேண்டும். சூரியோதயம் மற்றும் அஸ்தமனம் ஆகிய இரு நிலைகளின் மூலமாக இறைவன் தன்னுடைய அடியானுக்கு, அவனின்அருட்கொடைகளை ஞாபகப்படுத்துகிறான். அதிகமனோர் நன்றி செலுத்தாதவர்களாக இருக்கிறார்கள் என்றும் கூறுகிறான்.

“நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான்; ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை” (40:61)

ஆரோக்கியமான உடல்நிலயை தந்து, உடல் உறுப்புக்கள் நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில் தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தவுடன் இறைவனுக்கு நன்றி செலுத்தவில்லை எனில் நம்மைவிட நன்றிமறந்தவர்கள் யாராக இருக்க முடியும். இறைவனிடம் மிகப்பெரும் நன்றியுள்ள அடியாராகிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன் “சிறிய மெளத்துக்குப்பிறகு மீண்டும் உயிர் கொடுத்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்” என்று கூறி அன்றைய காலைப்பொழுதை இன்முகத்துடன் வரவேற்பவராக இருந்துள்ளார்கள் என்பதை ஹதீஸ்களில் காண்கிறோம்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் வாழ்நாள் முழுவதும், மழைக்காலங்களிலும் போர்க்காலங்களிலும், பஜ்ருடைய முன் சுன்னத் 2 ரக் அத்தையும் பர்ளு தொழுகையையும் தொடர்ந்து தொழுது வந்ததையும் ஹதீஸ்களில் காண முடிகிறது. இங்கே நம்முடைய நிலையை சீர்தூக்கிப்பார்க்கும் நிலையில் உள்ளோம். இரவில் தாமதமாக உறங்கி, காலையில் தாமதமாக எழும்போது, அவசர கதியில் இறைவனை புகழ்வதும் இல்லை, தொழவேண்டும் என்ற சிந்தனையும் வருவதில்லை.

தொழுகையில் அதன் நேரத்தில் தொழவேண்டும் என்ற குர்ஆன் வசனம், தாமதமாக உறங்கி தாமதமாக எழுபவன் ஷைத்தான், தொழாதவனின் காதில் ஷைத்தான் சிறுநீர் கழிக்கிறான், தொழாதவன் அன்றைய பொழுதை சோம்பலுடன் கழிக்கிறான் போன்ற ஹதீஸ்களை நன்கு அறிந்திருந்தும், தொழுகையில் பொடுபோக்காக இருப்பதை என்னவென்று சொல்வது. இறைவனிடத்திலே நன்றியுள்ள அடியானாக மாறுவதற்கு பதிலாக, இறைவனிடத்திலே சபதமிட்டு வந்த ஷைத்தான் வெற்றி அடைவதற்கு உதவி செய்வதுபோல் உள்ளது நமது செயல்பாடுகள்.

இரவில் முந்நேரம் உறங்கி, காலையில் சீக்கிரம் எழுந்து, இறைவனைப்புகழ்ந்து, பஜ்ர் தொழுகையை நேமமாக தொழுது, இறைவனின் அருளைப்பெற்று, அன்றைய காலைப்பொழுதை சுறுசுறுப்புடன் அடையப்பெற்றவர்களாக நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக.

Related

கைகள் இல்லை... கால்கள் இல்லை... கவலையும் இல்லை! இயற்கை தந்த சவால்களை எதிர்கொண்டு, சாதனையாளராக உயர்ந்து நிற்கும் நிக் உஜிசிக்!

கைகள் இல்லை... கால்கள் இல்லை... கவலையும் இல்லை! ஆஸ்திரேலியாவில் வசித்துவந்த ஒரு தம்பதியினருக்கு 1982-ம் ஆண்டில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இரண்டு கைகளும் இல்லாமல், இரண்டு கால்களும் இல்லாமல் பிறந...

திராவிட இயக்கத் தலைவர்களின் இசை முரசு! பாடகர் நாகூர் ஹனிபா சென்னையில் காலமானார்!!

திராவிட இயக்கத் தலைவர்களின் இசை முரசு! வாணியம்பாடி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர் யார்? என்பதை அறிந்து கொள்ளும் ஆவலுடன் அறிவாலயத்தில் குழுமியிருந்தனர் செய்தியாளர்கள். வ...

மைசூர் சிங்கம் மன்னர் ஹைதர் அலி ! வரலாற்றில் ஒரு ஏடு!!

மைசூர் சிங்கம் மன்னர் ஹைதர் அலி ஹைதர் அலிவீரம், மானம், தியாகம் இவையெல்லாம் வர்க்கங்களுக்கு அப்பாற்பட்டவை. வர்க்கங்களுக்கிடையேயான போராட்டங்கள் உலகின் போக்குகளை மாற்றியிருக்கின்றன. பல நேரம் ...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Tuesday - Jan 21, 2025 10:11:44 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item