அளவோடு சேர்க்கலாம் மயொனைஸ்... மார்கரீன்! 'ஒ ன் மீடியம் மார்க்ரின் பீட்சா வித் டபுள் சீஸ்... அண்ட் மயொனைஸ் பெப்பர் மிட்...’ என்று ப...
அளவோடு சேர்க்கலாம் மயொனைஸ்... மார்கரீன்!
'ஒன்
மீடியம் மார்க்ரின் பீட்சா வித் டபுள் சீஸ்... அண்ட் மயொனைஸ் பெப்பர்
மிட்...’ என்று பீட்ஸா, பர்கர் ஷாப்களில் ஸ்டைலாக நுனிநாக்கு ஆங்கிலத்தில்
ஆர்டர் கொடுத்துவிட்டுக்
காத்திருக்கின்றனர் இன்றைய டீன் ஏஜ் இளைஞர்கள். சுவைக்காக என்று
சாப்பிட்டாலும், வயிற்றுக்கு நிறைவைத் தராததுடன் உடலுக்கு தீங்கையே அதிகம்
விளைவிக்கின்றன இத்தகைய உணவுகள்.
இளம் தலைமுறையினரின் செல்ல உணவாகிவிட்ட 'ஜங்க் ஃபுட்’
வகைகளில் அதிகம் சேர்க்கப்படும் பொருள் மயொனைஸ், மார்க்ரின், சீஸ்
போன்றவை. இவற்றை நாம் அன்றாடம் உணவில் அதிகம் சேர்ப்பதனால், விளைவுகள்
என்னவாகும் என்று ஊட்டச்சத்து நிபுணர் குந்தளா ரவியிடம் கேட்டோம்.
மயொனைஸ் (MAYONNAISE)
வெளிநாடுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த மயொனைஸ்,
இந்தியாவுக்குப் புதிது. சைவ உணவு உட்கொள்பவர்கள்கூட, மயொனைஸ் எதில்
தயாரிக்கப்படுகிறது என்பது தெரியாமல் வெளுத்துக் கட்டுகின்றனர். இதில்
முட்டைதான் முக்கியமான மூலப் பொருள். எண்ணெயில் முட்டையை சிறிது சிறிதாகச்
சேர்த்து, மெதுவாக கலக்கினால் வருவதுதான் மயொனைஸ். கொழுப்பும் புரதமும்
இதில் அதிகம். அதிலும், புரதத்தைவிட கொழுப்பின் அளவு சற்று அதிகம்.
பெரியவர்கள் இதைத் தவிர்த்துவிட«வண்டும். குழந்தைகள்
சாப்பிடலாம். ஆனால், உடல்பருமனுடன் இருக்கும் குழந்தைகளுக்குக் கொடுக்கக்
கூடாது. உடல் எடை குறைவாக உள்ளவர்கள் எப்போதாவது ஒருமுறை
எடுத்துக்கொள்ளலாம்.
ஃப்ரெஞ்ச் ஃப்ரை, சாண்ட்விச் போன்ற உணவுப் பொருட்களை,
தொடர்ந்து மயொனைஸைத் தொட்டுச் சாப்பிட்டு வந்தால், உடல் பருமனாகி உடம்பில்
உள்ள கெட்ட கொழுப்பு அதிகரித்துவிடும். இளம் வயதிலேயே இதய நோய் வர அதிக
வாய்ப்பு உண்டு.
சீஸ் (CHEESE)
பசுவின் பாலை 30 டிகிரி வெப்பத்தில் சுடவைத்து
எலுமிச்சம்பழச் சாறு அல்லது சிட்ரிக் அமிலம் சேர்த்தால், அதன் நொதித்தல்
தன்மையின் இறுதி வடிவமே சீஸ். பாலில் கிடைக்கும் அனைத்து சத்துக்களும்
இதிலும் இருக்கிறது. இதிலும் கொழுப்பின் அளவும், புரதச் சத்தும் சற்று
அதிகம்.
பொதுவாக சீஸ்களில் உப்பு சேர்க்கப்பட்டது,
சேர்க்கப்படாதது என இரண்டு வகை உண்டு. உப்பு சேர்க்காத சீஸ் உடலுக்கு
உகந்தது. ஆனாலும், பருமனாக இருப்பவர்கள், வயோதிகர்கள் தவிர்க்கவும்.
ஒல்லியாக, எடை குறைந்தவர்கள் சீஸ் சேர்த்துக் கொள்வதன் மூலம் புரதம்,
கலோரி, கொழுப்புச் சத்துக்கள் அதிகரித்து உடல் எடை கூடும். எனினும் சீஸ்
வகைகளை குறைவாகச் சாப்பிடுவது நல்லது.
மார்கரீன் (MARGARINE)
பிறந்த நாள், திருமண நாள் போன்ற விசேஷங்ககளில் அனைவரும்
கேக் வெட்டிக் கொண்டாடுவார்கள். அதில் உள்ள கிரீமை ஒருவர் மேல் ஒருவர்
பூசி விளையாடுவார்கள். அதுதான் மார்கரீன். ஆயிலுக்குப் பதிலாக பேக்கரிகளில்
பயன்படுத்தப்படும் இந்த மார்கரீனில் கெட்ட கொழுப்பான நிறைவுற்ற கொழுப்பும்
(SATURATED FATTY ACIDS), உயர் அடர்த்தி கொழுப்பும் (TRANS FATTY ACIDS)
அதிகம் இருப்பதால் இதய நோய், ரத்தக்குழாய் அடைப்பு போன்ற பாதிப்புகள்
நேரலாம். எனவே, இதை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுவது நல்லது.
Post a Comment