குளிர்ச்சி தரும் நன்னாரி! கோ டை வந்ததும், நம் உணவில் இடம்பிடிக்கும் சில பொருள்களில் நன்னாரியும் ஒன்று. நன்னாரி சர்பத் அருந்தியவர்ளுக்க...
குளிர்ச்சி தரும் நன்னாரி!
கோடை
வந்ததும், நம் உணவில் இடம்பிடிக்கும் சில பொருள்களில் நன்னாரியும் ஒன்று.
நன்னாரி சர்பத் அருந்தியவர்ளுக்குத்தான் தெரியும், அதன் சுவையும் இதமும்!
அடிக்கும் கொடூரமான வெப்பத்தில் இருந்து நம்மைக் காத்து, உடலுக்குக்
குளிர்ச்சி தரும் ஆற்றல் நன்னாரிக்கு உண்டு. நாட்டு மருந்துக் கடைகளில்
எளிதில் கிடைக்கக் கூடியது நன்னாரி வேர். இனிப்பும், கசப்பும் கலந்த சுவை
கொண்ட இது, நல்ல நறுமணப் பொருளும் கூட. வியர்வை நாற்றம் உள்ளிட்ட பல கோடை
காலப் பிரச்னைகளுக்குத் தீர்வு நன்னாரி வேர்.
மருத்துவப் பயன்கள்:

பசுமையான நன்னாரி வேரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து இடித்துக்கொள்ள
வேண்டும். இதில், இரண்டு டம்ளர் குடிநீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க
வேண்டும். பிறகு வடிகட்டி சிறிதளவு சர்க்கரை சேர்த்து, அரை டம்ளர்
அளவுக்குக் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், எரிச்சலுடன் கூடிய
சிறுநீர் கழிப்பது குணமாகும்.

பசுமையான நன்னாரி வேரை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து, நன்கு காய்ச்சிய

பசும்பாலுடன் கலந்து, தினமும் காலை, மாலை என இருவேளை உட்கொள்ளலாம்.
இதனால், மூலச்சூடு, மூலநோய் மற்றும் சிறுநீர்க்கட்டு குணமாகும். மேலும்
இளநரை, பித்த நரை வருவதைத் தடுத்து, உஷ்ணத்தால் உண்டாகும் வறட்டு
இருமலையும் குணமாக்கும்.

கடும் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க, நன்னாரி சர்பத் அருந்துவது நல்லது.

கோடைக்
காலத்தில் வெறும் நீரிலேயே நன்னாரி வேரைப் போட்டு வைத்துக் குடிக்கலாம்.
ஒரு மண் பானையில் நீர் நிரப்பி, அதில் உலர்ந்த நன்னாரி வேரைப் போட்டு
வைக்கலாம். அந்த நீரைக் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சி
பெறும்.

நன்னாரி
வேரில், உடலுக்கு உடனடி சக்தியளிக்கக்கூடிய இயற்கையான ஸ்டீராய்டுகள்
மிகுதியாக உண்டு. உடலுக்குப் புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

நன்னாரி
வேரை வெயிலில் உலர்த்தி, இடித்துத் தூளாக்கிக்கொள்ள வேண்டும். தனியா,
சோம்பைத் தனித்தனியே இடித்துக்கொள்ள வேண்டும். இந்த மூன்றையும் சம அளவாகச்
சேர்த்துக் கலந்து வைத்து, ஒரு டம்ளர் வெந்நீருக்கு இதிலிருந்து ஒரு ஸ்பூன்
அளவு சேர்த்து உட்கொண்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

நன்னாரி
வேரை நீர் விட்டு அரைத்து விழுதாக்கிக் கொள்ள வேண்டும். அந்த விழுதை
வீக்கம், மூட்டுவலி, வெப்பக்கட்டி, புண் இருக்கும் இடங்களில் பற்றுபோட்டால்
நோய் நீங்கி நிவாரணம் பெறலாம்.
Post a Comment