முத்துக்கள்! பெட்டகம் சிந்தனை!!
மற்றவர்கள் முடியாது என்று நினைக்கிற ஒரு விஷயத்தை முடித்துக் காட்டுவதுதான், நல்ல தலைமைப் பண்பின் அடையாளம். உயர்பதவி என்பது நிரந்தர சிம...

உயர்பதவி என்பது நிரந்தர சிம்மாசனம் அல்ல. அது நமக்குச் சரிப்படாவிட்டால், மற்றவர்களுக்கு இடம் தந்து விலகிவிட வேண்டும்.
உங்களிடம் பணி புரிகிறவர்களை, மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்துங்கள். அவர்கள்தான் உங்களுடைய மிகப் பெரிய சொத்து.
உலகம் வெகுவேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு விஷயத்தை முடியவே முடியாது என்று சொல்லி முடிப்பதற்குள், வேறொருவன் அதைச் செய்து முடித்து, உங்கள் வாக்கைப் பொய்யாக்கி விடுகிறான்.
தயாராக இருக்கிறவர்களுக்குத்தான் வாய்ப்புகள் கிடைக்கின்றன!
எப்போதும், எதற்காகவும் உங்களுடைய அக சந்தோஷத்தை விட்டுக் கொடுக்காதீர்கள்.
கோழையின் அச்சம்கூட சில சமயங்களில் அவனை வீரனாக்கிவிடுவது உண்டு.
இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.
நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள், ஒவ்வொரு கண்ணும்தங்களையே பார்ப்பதாக எண்ணுவர்.
உள்ளத்தின் ஒழுங்குமுற்றிலும் குலைந்திருந்தால், நாம் புறத்தில் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது.
உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும்.
உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்.
நன்மையென்றும் தீமையென்றும் எதுவும் இல்லை. அவ்விதம் ஆக்குவது அவரவர் மனமே.
உங்களைத் தவிர வேறு எந்த மனிதரையும் கண்டு நீங்கள் எச்சரிக்கையாக இருக்கத் தேவையில்லை.
பிறரைச் சீர்திருத்தும் முயற்சியைவிட, தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதற்கடமை.
ஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தாலும் மதிப்பு கிடையாது.
சிலர் அளவுக்கதிகமான செல்வத்தில் திளைக்க, மற்றவர்கள் வறுமையில் வாடும்படியாக இருக்கும் நாடு சீர்குலைந்து அழிந்துவிடும்.
நூறு விதமாக கூறினாலும், விவாதித்தாலும், விளக்கினாலும் மதம் ஒன்றுதான்
நமக்குப் பாரமாய் இருக்கும் மனிதர்களை மன்னித்துவிடலாம். நாம் பிறருக்கு பாரமாய் இருப்பதுதான் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
அதிகம் ஊக்கம் உடையவர்களாகவும் குறைந்தவேலை உடையவர்களாகவும் இருக்கும் மனிதர்களே பெரும்பாலும் சண்டைக்காரர்களாகவும் இருக்கிறார்கள்.
வாழ்க்கை என்பது ஒரு சிறு மெழுகுவத்தி அல்ல. அது ஒரு அற்புதமான தீபம். பிரகாசமாக அதை எரிக்கச் செய்து, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
நல்லொழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக்கொள்ளும் நன் மதிப்பாகும்.
திட்டமோ கவனமோ இல்லாமல் ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குபவர்கள்தான் தடுமாறுகிறார்கள்.
நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் நம்மையறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும் மூலகாரணமாகவும் இருக்கிறார்.
Post a Comment