சுண்டல் செய்வதில் பல விதம்! சமையல் குறிப்புகள்-சைவம்!
* சுண்டல் செய்வதற்கு கொண்டைக் கடலையை ஊற வைக்க மறந்து விட்டால் ஒன்றும் பதறத் தேவையில்லை. கொண்டைக் கடலையை எண்ணெய் விடாமல் நன்றாக வறுத்த பி...

கொண்டைக் கடலையை எண்ணெய் விடாமல் நன்றாக வறுத்த பிறகு குக்கரில் வேகவைத்தால் நன்றாக வெந்து விடும்.
* கடலைப் பருப்பு சுண்டல், பாசிப்பருப்பு சுண்டல் செய்யும்பொழுது இரண்டு மணி நேரத்திற்கு முன்பே ஊற வைத்து செய்தால் சுலபமாக வெந்துவிடும்.
* சுண்டல் செய்யும் தானியங்களை முளை கட்ட வைக்க நனைத்து ஊறிய தானியங்களை ஒரு துணியில் போட்டு முடிச்சு போட்டு ஒரு கிண்ணத்தில் வைத்து வலைத்தட்டு ஒன்றினால் மூடி வைத்தால் சீக்கிரமாக முளை வரும்.
* பயத்தம் பருப்பு சுண்டல் குழையாமல் இருக்க, அதை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவேண்டும். பின், அடுப்பில் வெந்நீரை நன்றாகக் கொதிக்க வைத்து, அடுப்பை அணைத்துவிட்டு ஊற வைத்த பருப்பைப் போட்டு மூடி பதினைந்து நிமிடம் கழித்து நீரை வடித்து தாளித்தால் பருப்பு உதிரி உதிரியாக வரும்.
* எந்த வகைச் சுண்டல் செய்தாலும் கறிவேப்பிலையை அரைத்து அதனுடன் இஞ்சியையும் சேர்த்து விழுதாக்கி கலந்து கிளறி இறக்கினால் சுவையாகவும் இருக்கும். உடலுக்கும் நல்லது.
Post a Comment