'வளரும் குழந்தைகளுக்கு 'பச்சை முட்டை’ கொடுத்தால் உடல் வலுப்பெறும் என்கிறார்களே அது உண்மையா? மருத்துவ டிப்ஸ்
'வளரும் குழந்தைகளுக்கு 'பச்சை முட்டை’ கொடுத்தால் உடல் வலுப்பெறும் என்கிறார்களே அது உண்மையா? மேலும் பூப்படைந்த பெண்களுக்கு 'ப...

https://pettagum.blogspot.com/2014/04/blog-post_4880.html
'வளரும் குழந்தைகளுக்கு
'பச்சை முட்டை’ கொடுத்தால் உடல் வலுப்பெறும் என்கிறார்களே அது உண்மையா?
மேலும் பூப்படைந்த பெண்களுக்கு 'பச்சை முட்டை’ தருவது எந்த அளவுக்குச்
சிறந்தது? நாட்டுக் கோழி முட்டைக்கும், லகான் கோழி முட்டைக்கும் ஏதேனும்
வித்தியாசம் இருக்கிறதா? எந்த முட்டையைக் கொடுப்பது சிறந்தது?'
டாக்டர் மைக்கேல் ஜெயராஜ்,
சித்த மருத்துவர், திருநெல்வேலி
எடுத்துக் கொள்ளக்கூடாது. அதில், சில கிருமித் தொற்றுகள் இருக்கலாம்.
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகவே இருக்கும்.
முட்டையில் ஏதேனும் கிருமித் தொற்று இருந்து, அதைப் பச்சையாகக்
கொடுக்கும்போது, அது அவர்களுக்கு மிக விரைவில் நோய் பாதிப்பை
ஏற்படுத்திவிடும்.
எனவே, வெந்நீரில் சில நிமிடங்கள் முட்டையை வேக வைத்து
அரை வேக்காடாகக் கொடுக்கலாம். அதனுடன் சிறிது மிளகுத் தூள் சேர்த்துக்
கொடுப்பது மிகவும் நல்லது.
பெண்களுக்கு மாதவிலக்கு நேரத்தில் அதிக அளவு
புரதச்சத்து இழப்பு ஏற்படும் என்பதால்தான் பூப்பெய்தியவுடனும், மாதவிலக்கு
நேரத்திலும் முட்டையும், உளுந்தங்களியும் கொடுப்பார்கள். இது உடனடியாக
உடலுக்குத் தேவையான புரதச்சத்தை அளிக்கும்.
ஹார்மோன் ஊசி மருந்து செலுத்தி, கறிக்கோழிகள்
கொழுகொழுவென வளர்க்கப்படுவதாக புகார்கள் உள்ளன. அதனால் அந்தக் கோழி
இறைச்சியைத் தவிர்ப்பது நல்லது. லகான் கோழி முட்டை தொடர்பாக எதுவும்
கூறப்படவில்லை. இருப்பினும், நாட்டுக்கோழி முட்டை வாங்கிப் பயன்படுத்துவதே
சிறந்தது!'
Post a Comment