இடுப்பு வலி குறைய உடற்பயிற்சி! உடற்பயிற்சி!!
விரிப்...

விரிப்பில் 'V' வடிவத்தில் முடிந்த வரையில் கால்களை விரித்து உட்காருங்கள். இரண்டு கைகளையும் கோத்து உள்ளங்கைகள் நன்றாக தரையில் பதியச் செய்யுங்கள். இப்போது மூச்சை உள் இழுத்தபடி கைகளைத் தலைக்கு மேல் உயர்த்துங்கள்.
அப்படியே இடது பக்கமாக உடம்பை சாய்க்க வேண்டும். மூச்சை மெல்ல வெளியே விட்டபடி மீண்டும் நேராக உட்கார்ந்து கையை மீண்டும் தரையில் வையுங்கள். இடது பக்கமாகச் செய்த இந்தப் பயிற்சியை இப்போது வலது பக்கமாகச் சாய்ந்து செய்ய வேண்டும்.
இதுபோல இடது வலது என்று மாற்றி மாற்றி 20 முறை இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இந்த பயிற்சியை 10 முறை செய்தால் போதுமானது. பின்னர் நன்கு பழகிய பின்னர் 20 அல்லது அதற்கு மேலும் செய்யலாம்.
உள்ளங்கையை உடலில் இருந்து எவ்வளவு தள்ளி வைத்து இதைச் செய்ய முடியுமோ அவ்வளவு தள்ளி வைத்துச் செய்ய வேண்டும். இந்த பயிற்சி செய்வதால் பெருங்குடல், சிறுகுடல் ஆகியவற்றின் வேலையைச் சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனைகளைக் குறைக்கும்.
இடுப்பு, தொடை பின்பக்கப் பகுதிகளில் உள்ள தசைகளை இறுக்கமடையச் செய்து, இடுப்பு வலியைக் குறைக்கும். மேலும் வயிறு மற்றும் இடுப்பு எலும்புகளைச் சுற்றி இருக்கும் தசைப்பகுதிகள் நன்றாக இழுக்கப்பட்டு அதன் சுருங்கி விரியும் தன்மை அதிகமாகும்.
Post a Comment