பருவுக்கும் பொடுகுக்கும் என்ன சம்பந்தம்? ஹெல்த் ஸ்பெஷல்!!
'நான் கல்லூரி மாணவி. என் முகத்தில் பருக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. எனக்குப் பொடுகு இருப்பதால்தான் பருக்கள் வருவதாக என் தோழி கூற...

https://pettagum.blogspot.com/2013/12/blog-post_5678.html
'நான் கல்லூரி மாணவி. என்
முகத்தில் பருக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. எனக்குப் பொடுகு
இருப்பதால்தான் பருக்கள் வருவதாக என் தோழி கூறுகிறாள். பொடுகுக்கும்
பருவுக்கும் சம்பந்தம் உண்டா? பருவைப் போக்க வழி என்ன?'
டாக்டர் கோதண்டராமன்,தோல் மருத்துவர், அரசு மருத்துவமனை, மதுரை.
'சருமத்தில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளின் செயல்பாட்டில்
ஏற்படும் மாற்றங்கள்தான் பொடுகு மற்றும் முகப்பருவுக்குக் காரணம். பொடுகு
ஒருவகை பூஞ்சையால் ஏற்படுகிறது. 'சீபம்’ என்ற எண்ணெய், குறைந்த அளவில்
சுரப்பது அல்லது அதிக அளவில் சுரப்பது, ஊட்டச் சத்து குறைபாடு, மன அழுத்தம்
என பல்வேறு காரணங்களால் பொடுகு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், இது
மரபு ரீதியானது என்றும் கூறப்படுகிறது. பொடுகு வந்துவிட்டால், அதைப் போக்க
முடியாது. ஆனால், கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதற்கு, தலையைச்
சுத்தமாக வைத்திருப்பது அவசியம். பொடுகைக் கட்டுக்குள் வைத்திருக்கும்
செப்டோ ((ZPTO & zinc pyrithiyonone, ketoconozole)) என்னும்
வேதிப்பொருட்கள் அதிகம்
உள்ள
ஷாம்பூக்களைப் பயன்படுத்தலாம். இது கடைகளில் சாதாரணமாகக்
கிடைக்கக்கூடியதுதான். சருமத்தில் எண்ணெய் அதிகமாகச் சுரந்து, சுரப்பிகளில்
அடைப்பு ஏற்படுவதாலும், இளம் வயதில் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகவும்
பருக்கள் தோன்றுகின்றன. பதின் பருவத்தில் எண்ணெய்ப் பசை அதிகமாகச் சுரந்து,
அவை பருக்களாக வெடிக்கும். சுய மருத்துவம் செய்துகொள்ளாமல், உங்களுக்கு
எதனால் முகப்பருக்கள் ஏற்படுகின்றன என்பதை உங்கள் அருகில் உள்ள தோல் நோய்
சிகிச்சை நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. அடிக்கடி முகம் கழுவுதல்,
எண்ணெய்ப் பசை மிகுந்த க்ரீம்களைத் தவிர்த்தல், ஊட்டச் சத்து உணவுகளை
எடுத்துக்கொள்ளுதலின் மூலம் பரு வருவதைத் தவிர்க்கலாம். '
Post a Comment