உடல் எடையைக் குறைக்க 12 வழிகள்.

உடல் எடையைக் குறைக்க 12 வழிகள். உடல் எடையைக் குறைக்க 12 வழிகள்.   ஓவர் வெயிட் உயிருக்கு ஆபத்து. உங்கள் இடுப்புப் பெல்ட...

உடல் எடையைக் குறைக்க 12 வழிகள்.

உடல் எடையைக் குறைக்க 12 வழிகள்.


 overweight.jpg
ஓவர் வெயிட் உயிருக்கு ஆபத்து. உங்கள் இடுப்புப் பெல்ட் பெருக்கப் பெருக்க உங்கள் ஆயுள் குறைகிறது என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி. உடல் எடையைக்குறைக்க 100 ஆண்டுகள் வாழ 200 ஆலோசனைகள் என்ற நூலில் இருக்கும் தகவல்கள் இதோ !
 
 
 
 
01. உப்பு உடலை உப்ப வைக்கும், உப்பை அளவோடு சாப்பிடுங்கள்.
02. நொறுக்குத் தீனி சாப்பிடுவதை அறவே விட்டுவிடுங்கள்.
03. தினமும் குறைந்தது நாலு கி.மீ. நடவுங்கள்.
04. கொழுப்பு சத்துள்ள உணவை தவிருங்கள்.
05. இனிப்பு, மாவு, மசாலா, எண்ணெய்ப் பொருட்களை சாப்பிட வேண்டாம்.
06. பசிக்காத போது சாப்பிட வேண்டாம்.
07. உணவை அளவோடு சாப்பிடுங்கள். சுவை கருதி உணவை ஒரு பிடி பிடித்துவிடாதீர்கள்.
08. குளிர்ந்த நீர், மோர் என்பவற்றைக் குடியுங்கள்.
09. எடை கூடிவிட்டதே என்று கவலைப்படாதீர்கள்.
10. உங்கள் எடையைவிட 10 சதவீதம் அதிகமாக இருந்தால் ஆயுளில் 13 சத வீதம் குறையும்.
11. பட்டினி கிடப்பதால் உடல் எடை குறையாது, உடலுக்கு கெடுதலே வரும்.
12. ஒழுங்கு முறையாக தேகப்பயிற்சி செய்யுங்கள்.
உங்கள் உடலில் நோய் அதிகமாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்க சித்தர்கள் கூறும் பரிசோதனை முறை வருமாறு. காலையிலேயே சிறு நீரை கண்ணாடி பாத்திரத்தில் எடுங்கள். அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விடுங்கள். அதன் பின் அது எப்படி செயற்படுகிறது என்று கவனியுங்கள். எண்ணெய்த்துளி பாம்பு போல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடம்பில் வாதம் உள்ளது. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய் உள்ளது. முத்துப்போல நின்றால் உங்களுக்கு கப சம்மந்தமான நோய் வந்துள்ளது. மேலும் எண்ணெய்த் துளி வேகமாகப் பரவினால் நோய் விரைவில் குணமாகும், மெதுவாகப் பரவினால் காலதாமதமாகும், அப்படியே இருந்தால் நோய் குணமாகாது. எண்ணெய்த்துளி சிதறினாலோ, அல்லது அமிழ்ந்துவிட்டாலோ நோயைக் குணப்படுத்த இயலாது. இப்பரிசோதனை எளிமையான சித்த மருத்துவமாகும். வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றுமே நோய்களின் ஆதாரங்களாகும்.
ஆதாரம் : 100 ஆண்டுகள் வாழ 200 ஆலோசனைகள் என்ற நூலில் இருந்து.

உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்


உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்

உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்
இந்த வழிமுறைகளை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றி பாருங்கள். உங்களின் எடை தானாக குறையும். ஒரு வாரத்திற்கு, அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை எடை குறைந்தால், சரியான வழியில் எடையைக் குறைக்கிறீர்கள் என்று அர்த்தம்.1 ஒழுங்கான இடைவேளைகளில், குறைந்த அளவில் சாப்பிடுங்கள். ஒருபோதும் பட்டினி கிடக்காதீர்கள். முக்கியமாக, காலை உணவை தவிர்த்தால், அதிகப் பசியெடுத்து, அடுத்த வேளை உணவை ஒரு பிடி பிடிக்க நேரிடும்.
2 தினமும் நடைபயிற்சி செய்யுங்கள். இது உடல்பயிற்சியை விட சிறந்தது. நடைபயிற்சியும் யோகாவும் ஒன்று.
3 தின்பண்டங்களுக்கு பதிலாக தினமும் மூன்று வகை பழங்கள் சாப்பிடுங்கள். அதில் ஒன்று ஆரஞ்ச், சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைப் பழமாக இருக்கட்டும்.4 அவரை, கொத்தவரை, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், காலி ப்ளவர், முருங்கைக்காய், சௌ சௌ, பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், நூல்கோல், அத்திக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளில் ஏதேனும் ஒன்றையாவது தினமும் உணவில் இரண்டு கப் (400 கிராம்) சேருங்கள். உருளை, சேனை போன்ற கிழங்கு வகைகளை தவிர்த்து விடுங்கள்.
5 வாரத்தில் மூன்று நாட்கள் கீரையும், தட்டாம்பயறு, பச்சைப்பயிறு, கறுப்பு சுண்டல் கடலை, கொள்ளுப்பயறு போன்ற பயறு வகைகளும் அவசியம் சேருங்கள். அதோடு, நார்ச்சத்துள்ள கைக்குத்தல் அரிசி, கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
6 அதிக கொழுப்பில்லாத பாலில் (அதாவது 3% அளவே கொழுப்பு சத்துள்ள ‘டோன்டு பாலில்) தயாரித்த காபி, டீ, தயிர் சாப்பிடுங்கள்.7 தினமும் இரண்டிலிருந்து மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள்.
8 அசைவத்தில் மீன், தோல் நீக்கப்பட்ட சிக்கன், முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை வேகவைத்து சாப்பிடலாம். கிரேவி வேண்டாம்.
9 நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை ஒரு நாளைக்கு மூன்று டீஸ்பூன் உபயோகிக்கவும்.
கட்டாயம் தவிர்க்க வேண்டியவை:
இனிப்புகள், சர்க்கரை, எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகள், மைதா கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள்(கேக், பப்ஸ், பரோட்டா, பிஸ்கெட்) , மக்காச்சோழ மாவு, வெண்ணெய், நெய், சீஸ், குளிர் பானங்கள்(கோக், பெப்ஸி) மற்றும் மில்க் ஷேக்குகள். அசைவத்தில் மட்டன், பீஃப், போர்க், முட்டையின் மஞ்சள் கரு.இந்த வழிமுறைகள் உடல் எடையைக் குறைக்க சொல்லப்பட்டாலும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மிக ஏற்றவை.
ஒரு நாளைக்கான உணவுப் பட்டியல்
நேரம் சாப்பிட வேண்டிய உணவு
காலை 6 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1டம்ளர் (200 மி.லி)
காலை 8 மணி இட்லி – 2 (அ) இடியாப்பம் – 2 (அ) எண்ணெய் இல்லாத தோசை – 1. தொட்டுக் கொள்ள சாம்பார் (அ) காய்கறி சட்னி (வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி வேண்டாம்.) இவற்றுடன் ஏதாவது ஒரு பழம்.
முற்பகல் 11 மணி சர்க்கரை இல்லாத, அப்போது பிழியப்பட்ட எலுமிச்சை ஜூஸ் (அ) மோர் – 1 (அ) 2 டம்ளர்.
நண்பகல் 1 மணி அரை கப் சாதம், சாம்பார் (அ) பருப்புக் கூட்டு – அரை கப், பொரியல் – 1 கப், தயிர் பச்சடி – 1 கப், சுட்ட அப்பளம் -1. (வடகம், பொரித்த அப்பளம் வேண்டாம்.)
மாலை 4 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1 டம்ளர் (200 மி.லி)
மாலை 5.30 மணி ஏதாவது பழங்கள் இரண்டு
இரவு 8.00 மணி எண்ணெய் இல்லாத சப்பாத்தி – 2, பருப்பு (அ) பசலைக்கீரை (அ)
காய்கறிக் கலவை கூட்டு. இதனுடன் முளைக் கட்டிய பயறு – 1 கப் (அ) கேழ்வரகு தோசை – 1. சாம்பார், காய்கறி சாலட் – 1 கப், மோர் (அ) கோதுமை ரவை உப்புமா(காய்கறிக் கலவையுடன்) – ஒரு கப், ஏதேனும் ஒரு காய் தயிர் பச்சடி – 1 கப்.
படுக்கப்போகும்போது ஏதேனும் ஒரு பழம் (அ) சர்க்கரை இல்லாத பால் – 1 டம்ளர். இரவு உணவிற்கும், படுக்கப்போவதற்கும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது இடைவெளி வேண்டும்.

உடல் எடையைக் குறைக்க 

சாப்பிடும் உணவு சிறிய அளவில் இருந்தால்போதும்,ஆனால் அந்த உணவுகள் தரமான உணவுகளாக இருக்க வேண்டும்! இப்படிச் சாப்பிட்டு வந்தால் சாப்பிட்ட திருப்தியும் அதே நேரத்தில் குறைந்த அளவே உடலில் சேரும் உணவுகளால் உடல் எடையும் பராமரிக்கப்படும்.


தரமான உணவுகளை வேளை தவறாமல் குறைவாகச் சாப்பிட்டாலும் தினமும் உடற்பயிற்சியும் அவசியம் தேவை.

உடல் எடையைக் குறைக்கவும் அதே நேரத்தில் ஒல்லியான கச்சிதமான தோற்றத்தைப் பராமரிக்கவும் கீழ்க்கண்ட பத்து உணவுகள் மிகச்சிறந்த உணவுகளாக சத்துணவு நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.சேனைக்கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு!இந்த இரண்டும் மெதுவாக சீரணிக்கப்படுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. உடலில் சேர்ந்துள்ள கொழுப்பு உட்பட அனைத்துப் பகுதிகளிலும் வளர்சிதை மாற்றம் மிகச் சரியாக நடக்க இந்த உணவுகள் உதவுவதால் உடல்எடை குறையும்.கொழுப்பு சேமிப்பாகாமல் தடுக்கும்.சேனைக்கிழங்கு ஆண்டு முழுவதும் கிடைக்கும். வள்ளிக்கிழங்கை சீசனில் பயன்படுத்தலாம்.ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை பழங்களில் மற்ற பழங்களில் உள்ளதைவிட எளிதில் கரையக்கூடிய பெக்டின் என்ற நார்ச்சத்து அதிகமுள்ளது நார்ச்சத்து உணவுகள் மெதுவாக ஜீரணமாகும். இதனால் உடலிலுள்ள விஷப் பொருள்களும்,சேமிப்பாக உள்ள அதிகக் கொழுப்பும் கரைக்கப்பட்டு வெளியேற்றப்படும். நார்ச்சத்து அதிகமுள்ள இந்த மூன்று பழங்களும் உணவு நன்றாகச் சாப்பிட்ட திருப்தியையும் எளிதில் வழங்கும்.நன்மை தரும் சாண்ட்விட்சுகள்21 வாரங்களில் 40 பவுண்டு (1 பவுண்டு = 650 கிராம்) எடையைக் குறைக்க (அதுவும் உறுதியாய்) தக்காளி, வெள்ளரிக்காய், முளைவிட்ட தானியங்கள், லெட்டூஸ், வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்து சாலட் போல தயாரியுங்கள்.உங்களை கவர்ந்த சாண்ட்விட்ச்சுகள் இவை. கோதுமை மாவினால் செய்யப்பட்ட பன்வகைகளுடன் இவற்றைச் சேர்த்து சாப்பிடலாம். இந்த உணவுகளிலும் நார்ச்சத்து அதிகம்.தானியங்கள்
கைக்குத்தல் அரிசி, கேழ்வரகு சம்பா கோதுமை, ரவை போன்றவற்றிலும் நார்ச்சத்து அதிகம். இவற்றை பாசிப்பருப்பு, தேங்காய்ச் சட்னி போன்றவற்றின் மூலம் புரதமும் கிடைக்கும்படி சாப்பிடலாம். எப்போதும் பருப்பு வகைகள் சேர்ந்தே மேற்கண்ட தானிய உணவுகளைச் சாப்பிட வேண்டும். இதனால் சாப்பிடும் அளவும் குறையும்.காய்கறி சாலட்
இதில் முக்கியப்பங்காக கீரைவகை இருக்க வேண்டும்.அதன் மேல் தயிரை லேசாக ஊற்றி மூடவும். அதன் மேல் உங்களுக்குப் பிடித்தமான காய்கறித் துண்டுகளைப் போடவும். அசைவம் உண்பவர்கள் எனில் இத்துடன் புரதத்திற்காக அவித்த வஞ்சிரமீன் ஒன்றும் சேர்த்துக் கொள்ளலாம். சைவம் எனில் அவித்த மொச்சை நான்கு தேக்கரண்டிகள் சேர்த்துக் கொள்ளவும்.பாதம் பருப்புக்கள்ஒமேகா 3 என்ற நன்மை செய்யும் கொழுப்பு அமிலம், புரதம், கார்போஹைடிரேட் போல அவசியம் தேவை. எனவே, தினமும் நல்ல கொழுப்பு அமிலம் கிடைக்க ஏழு பாதாம் பருப்புகளைச் சாப்பிட்டு வாருங்கள். பருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டாம்.


கொண்டைக்கடலை மசியல்ஊற வைத்து அவித்த கொண்டைக்கடலையை மிக்சியில் கூழாக்கவும். இதில் எலுமிச்சை சாறு சிறிதளவும்,நல்லெண்ணெயில் வதக்கிய வெள்ளைப்பூண்டுப் பற்களையும் போட்டுக் கலக்கவும். சப்பாத்தியுடன் சேர்த்துச் சாப்பிட புரதம் நிறைந்த கூழ் இது.


தக்காளி, வெங்காயம்


இவற்றை சிறிதாக அரிந்து கலந்து வைத்துக் கொண்டு சாப்பிடவும். இல்லையெனில் பீன்ஸ் கூட்டு, முட்டைக்கோஸ் சூப் சாப்பிடவும்.

மேற்கண்ட அனைத்து உணவுகளும் தரமான உணவுகள் என்பதால் உடல் எடை கட்டுப்பாட்டுடன், ஆரோக்கியமாகத் திகழும். குண்டு மனிதர்கள் 21 வாரங்களில் எடை குறைந்து உடல், மனம் லேசாக இருப்பதை எளிதில் உணரலாம்.


யோகார்ட்


காய்கறி சாலட் போல ஒவ்வொரு வேளை உணவின்போதும் ஒரு கப் யோகார்ட் (தயிர்) சாப்பிடவும். கொழுப்புக் குறைவாக உள்ள அதிசய உணவு இது.சுவை கூட்டப்பட்ட யோகார்ட்,தயிரைப்போல நன்மை அளிக்கக் கூடியதே!

Related

ஹெல்த் ஸ்பெஷல் 4169452202982208391

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item