கேழ்வரகு புதினா குணுக்கு--சிறுதானிய சமையல்!!
சிறுதானிய சமையல் ஒரு காலத்தில் சிறுதானியங்கள் மட்டுமே இங்கே பெரும் உணவாக இருந்தன. இன்றைக்கோ... சிற்றுண்டியாகக்கூட சிறுதானியங்களைப் பா...

https://pettagum.blogspot.com/2013/12/blog-post_2164.html
சிறுதானிய சமையல்
இந்த இதழில் பரிமாறுபவர்... சுதா செல்வகுமார்
கேழ்வரகு புதினா குணுக்கு
தேவையான பொருட்கள்
செய்முறை:
கேழ்வரகு மாவு, பொட்டுக்கடலை மாவுடன் உப்பு, மிளகு, சீரகப் பொடி பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கிய இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து, தண்ணீருக்கு பதில், முழுக்க புதினா-மல்லிச் சாறு (நீர்விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்) சேர்த்துப் பிசைந்து, 15 நிமிடம் வைக்கவும். எண்ணெயைக் காயவிட்டு, கையால் இந்த மாவைக் கிள்ளி போட்டோ உருண்டையாகவோ போட்டு, வெந்ததும் எடுக்கவும்.
சென்னை, நீலாங்கரையைச் சேர்ந்த இயற்கை ஆர்வலரும், திரைப்பட நடிகர் பசுபதியின் மனைவியுமான சூர்யா, சிறுதானியங்கள் குறித்து ரொம்பவே தெம்பாகப் பேசுகிறார்.
மூணுவேளையும் அரிசியை எடுத்துக்கறதால... அதிக உடல் எடை, நீரிழிவு நோய் எல்லாம் வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு. ஆனா, சிறுதானியங்கள்ல இதுமாதிரியான பிரச்னைகளே இல்ல. சிறுதானியங்கள வீட்டுல சமைக்க ஆரம்பிச்சாலே, வீட்ல இருக்கற எல்லாருமே தன்னால சாப்பிட ஆரம்பிச்சுடுவாங்க'' என்று நம்பிக்கையூட்டுகிறார் சூர்யா.
Post a Comment