தலைவலி குறைய சில டிப்ஸ் --- கை மருந்துகள்,

கற்பூரவல்லி இலையை சுத்தம் செய்து இடித்துச் சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றுடன் நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்க...

கற்பூரவல்லி இலையை சுத்தம் செய்து இடித்துச் சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றுடன் நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.

மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.

வேப்பம் பட்டை, கடுக்காய், கோரைக் கிழங்கு, நிலவேம்பு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு பாதியளவு வரும் வரை சுண்டக்காய்ச்சி அதனுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.

செண்பக இலையை எடுத்து நன்கு சுத்தம் செய்து அதன் மீது நெய்யை தடவ வேண்டும். பின்பு ஓமத்தை பொடி செய்து அந்த பொடியை இலையின் மேல் தூவ வேண்டும். இந்த இலையை தலையில் வைத்து கட்டி வந்தால் வெப்பத்தினால் ஏற்படும் தலைவலி குறைந்து உடல் குளிர்ச்சி ஏற்படும்.

மிளகாய், மிளகு ஆகியவற்றை எடுத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியை இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடித்து அதனுடன் பால், நல்லெண்ணெய் கலந்து பதமாய் காய்ச்சி ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளித்து வரவேண்டும்.எவ்விதமான தலைவலியும் குறையும்.
 வெற்றிலையை இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் கிராம்பை நன்றாக அரைத்து எடுத்து இரண்டு பொட்டுப் பகுதிகளிலும் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குறையும்.

கீழாநெல்லிச்சாறு, உத்தாமணிச்சாறு, குப்பைமேனிச்சாறு ஆகியவற்றை சமனளவு எடுத்து நல்லெண்ணெயில் கலந்து எரித்து மூக்கில் நசியமிட தலைவலி குறையும்.

கீழாநெல்லி, உத்தாமணி, குப்பைமேனி ஆகியவற்றை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் சமனளவு எடுத்து நல்லெண்ணெயில் கலந்து எரித்து மூக்கில் நசியமிட தலைவலி குறையும்.

மஞ்சள், பூண்டு இரண்டையும் தாய்ப்பால் விட்டு அரைத்து தலையில் பற்றுப்போட்டு வந்தால் தலைவலி குறையும்.

கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் தலைவலி குறையும்.

கிராம்பை எடுத்து சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து தலைவலியின் போது சிறிது எடுத்து நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

குங்குமப்பூவை தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.

டீ அல்லது காப்பியில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குறையும்.

 தர்ப்பூசணி விதைகள் மற்றும் வெட்டிவேர் இரண்டையும் தனித்தனியாக இடித்து பொடி செய்து பிறகு சம அளவு இரண்டு பொடியையும் எடுத்து கலந்து 2 கிராம் அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.

அவுரி இலையுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நசுக்கி வடிகட்டி தலைக்கு தேய்த்து வந்தால் தலைவலி குறையும்.

சுக்கு தூளை தாய்ப்பால் விட்டு நன்றாக குழைத்து நெற்றி பொட்டில் சிறிது பூசி வந்தால் தலைவலி குறையும்.
தாய்ப்பால் கிடைக்காமல் போனால் பசும்பால் பயன்படுத்தலாம். இருப்பினும் தாய்ப்பால் மிகவும் சிறந்தது.

சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். இதனுடன் நில ஆவாரை, கடுக்காய் தோல் மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக இடித்து ஒரு மண் பாத்திரத்தில் போட்டு 1 லிட்டர் தூய நீர் விட்டு சுமார் 300 மி.லி அளவுக்கு சுண்டியதும் இறக்கி விடவும்.
உபயோகிக்கும் முறை:

காலை 5 மணி அளவில் 100 மி.லி கஷாயத்தை மட்டும் வடிகட்டி குடித்து சிறிது வெந்நீர் குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும். மலச்சிக்கலால் ஏற்படும் தலைவலி குறையும்.



சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். தோல் நீக்கிய சுக்கை நன்றாக இடித்து கொள்ளவும். ஒரு மண் பாத்திரத்தில் 1 லிட்டர் தூய நீர் விட்டு கொதிக்க விட்டு சுக்கு தூளை கொட்டி மூடி 5 நிமிடங்கள் கழித்து கற்பூரத்தை போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். இந்த சுக்கு நீரை இளஞ்சூட்டில் தலை, முகம் ஆகியவற்றை கால, மாலை என தொடர்ந்து கழுவி வந்தால் தலைவலி குறையும்.

சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். மிளகை இளம் வறுவலாக வறுத்து கொள்ளவும். வெள்ளைப்பூண்டை தோல் நீக்கி கொள்ளவும். மூன்றையும் சிறிது பசும்பால் விட்டு மை போல அரைத்து சிறிதளவு எடுத்து நெற்றியின் இரண்டு பக்கத்திலும் தடவி பற்று போட்டு சிறிது நேரம் கழித்து வெந்நீரால் கழுவி வந்தால் தலைபாரம், அஜீரண தலைவலி ஆகியவை குறையும்.

10 கிராம் அளவு சுக்கை எடுத்து தோல் நீக்கி இடித்து கொள்ளவும். சம அளவு கருந்துளசி எடுத்து நன்றாக அரைத்து கொள்ளவும். ஒரு மண் பாத்திரத்தில் அரை லிட்டர் தூய நீர் விட்டு பின் கொதிக்க வைத்து கொதி வந்ததும் சுக்கு தூளையும், கருந்துளசியையும் போட்டு மூடி வைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து இறக்கி தாங்கும் அளவு இளஞ்சூட்டுடன் முகத்தை காலை, மாலை 3 நாட்கள் கழுவி வந்தால் தலைக்கனம் குறையும்.

கீழாநெல்லி இலை, வேலிப்பருத்தி இலை, குப்பைமேனி இலை ஆகியவற்றை பிழிந்து சம அளவு சாறு எடுத்து நல்லெண்ணெயில் கலந்து நன்றாக காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால் ஓயாத தலைவலி, சளி, மூக்கில் நீர் வடிதல் மற்றும் மூக்கடைப்பு ஆகியவை குறையும்.

கண்வலிப்பூ செடியின் கிழங்கை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி வேப்பெண்ணெயில் காய்ச்சி கிழங்குகள் மிதக்கும் போது எண்ணெயை எடுத்து ஆற விட்டு தலைவலி, கழுத்து வலி ஏற்படும் போது இந்த எண்ணெயை தடவி வந்தால் வலி குறையும்.

சிவப்பு சந்தனத்தை எடுத்து தேன் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.
அதிக காய்ச்சல் காரணமாக ஏற்படும் தலைவலி குறையும்.

 ஒரு டம்ளர் பாலை எடுத்து அதனுடன் 1 முட்டையின் மஞ்சள் கரு மட்டும் கலந்து நன்கு சூடுப்படுத்தி வெது வெதுப்பான சூட்டில் உடனே குடித்து வந்தால் தலைவலி குறையும்.

மகிழம் இலைகளை உலர்த்தி காய வைத்து பொடி செய்து தலைவலி ஏற்படும் போது இந்த பொடியை மூக்கால் முகர்ந்து பார்த்து வந்தால் தலைவலி குறையும்.

கொடிவேலி வேர்ப்ப*ட்டையை அரைத்து ப*சும்பாலில் 21 நாள்க*ள் சாப்பிட்டு வ*ந்தால் த*லைப்பாரம் குறையும்.

ஐயம்பனா இலைகளை ஆமணக்கு எண்ணெயில் வாட்டி முன் நெற்றியில் வைத்து வந்தால் தலைவலி குறையும்.

ஒரு இரும்பு பாத்திரத்தை எடுத்து நெருப்பின் மேல் வைத்து சூடு ஏறியவுடன் அதன் மேல் எலுமிச்சை பழச்சாற்றை விட்டு, வேறோரு இரும்பு துண்டினால் அந்த சாற்றை உரைத்து அதை எடுத்து பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.



தேவையான அளவு மிளகை எடுத்து, பாலில் அரைத்து பசும்பாலுடன் கலக்கி சிறிதளவு தலையில் தடவி வைத்திருந்து பிறகு குளித்து வந்தால் தலைவலி குறையும்.

கருஞ்செம்பைப் பூ, சிறிது கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி சேர்த்து காய்ச்சி இளஞ்சூட்டுடன் தலையில் வைத்து அரை மணி நேரம் கழித்து குளிக்க தீராத தலைவலி குறையும்.

கடுகுத்தூள், அரிசிமாவு இவைகளை சரிபாதியாக எடுத்து வெந்நீர் கலந்து களிபோல் கிளறி அதை நெற்றியில் பற்றுப் போட த*லைவ*லி குறையும்.

செவ்வந்திப் பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.


நெல்லிக்காயை அரை லிட்டர் சாறு எடுத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காயவைத்து பின் தேங்காய் எண்ணெயை சேர்த்து கொதிக்க வைத்து ஆவி பிடிக்க* தலைவலி குறையும்.


தும்பைப் பூவையும், ஒரு மிளகையும் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி, தலைபாரம், நீர்க்கோர்வை குறையும்.

த*லைவலிக்கு இஞ்சியைத் தட்டி வலியுள்ள இடத்தில் சிறிது தடவ தலைவலி குறையும்.

வேப்பிலையோடு மிளகு, கற்பூரம் சேர்த்து அரைத்து நெற்றியில் பூசி வர தலை வலி குறையும்.


அகில் கட்டையைச் சிறி சிறு துண்டுகளாக நறுக்கி 300 கிராம் அளவு எடுத்து 2 லிட்டர் தண்ணீரில் போட்டு ஒரு லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி ஆற வைத்து,ஒரு லிட்டர் பசும்பால், ஒரு லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்து மீண்டும் காய்ச்சி சுண்டும் நேரம் அதிமதுரம் தூள் 30 கிராம், தான்றிக்காய் தூள் 30 கிராம் போட்டுப் பதமாகக் காய்ச்சி வடிகட்டி தடவி வந்தால் தலைவலி குறையும்.

முருங்கை இலைக் கொழுந்தை,தாய்ப்பால் விட்டரைத்து நெற்றியில் பற்றுப் போட தலைச்சுற்று குறையும்.


கிராம்பை மைப்போல் அரைத்து அதனை வெற்றிலைச்சாறுடன் குழைத்து பற்றுப்போட தலை வலி குறையும்.

நிலவேம்பு கஷாயத்தை தினமும் இருவேளை அருந்தி வந்தால் தலைவலி குறையும்.

சுக்கை அரைத்து நெற்றியிலும், சிறிது தலை உச்சியிலும் பற்றுப் போட்டு வந்தால் தலைக்கனம் குறையும்.

தாளிசப்பத்திரி இலைகளை அரைத்து நெற்றிப் பொட்டில் பூசத் தலைவலி குறையும்.

பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனகற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தலைவலி குறையும்.

நொச்சி இலைகளைத் தலையணை போல அடைத்து படுத்து வந்தால் தலைவலி குறையும்.

அதிக வேலை செய்வதால் மற்றும் அதிக வெப்பத்தால் அடிக்கடி வரும் தலைவலி குறையும்.

மணத்தக்காளி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

கொடிப்பசலைக் கீரையை நீரில் போட்டு அலசினால் கொழகொழப்பான திரவம் கிடைக்கும். இதை தலை, நெற்றியில் தடவ தலைவலி குறையும்.

துலுக்க சாமந்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

பருப்புக் கீரை இலைகளை அரைத்து சாறு எடுத்து நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

புதினா இலைகளை இடித்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

மலைவேம்பு இலைகளை நன்கு அரைத்து தலையில் பற்றுப்போட்டு வந்தால் தலை வலி குறையு


நொச்சி இலைகளை எடுத்து அதனுடன் சுக்கு சேர்த்து அரைத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

புளியாரை இலைகளுடன் பூண்டு சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பூசினால் தலைவலி குறையும்.
பித்தத்தால் எற்படும் தலைவலி குறையும்.

எலுமிச்சை, திராட்சை, முருங்கை, புதினா, துளசி, கேரட், பேரீட்சை, தேன், ஆரஞ்சு, மாதுளை, பூண்டு, வெங்காயம் இவைகளை சாறு எடுத்து குடித்திட அதிக வேலையினால் ஏற்படும் தலைவலி குறையும்.

கைப்பிடி முருங்கை இலையுடன் நாலைந்து மிளகு சேர்த்து நன்கு அரைத்து நெற்றிப்பொட்டில் பூசினால் தலைவலி குறையும்.

ஆடாதோடை இலைகளை பிழிந்து சாறு எடுத்து,அரை லிட்டர் நல்லெண்ணெயில் கால் லிட்டர் சாறு சேர்த்து ,காய்ச்சித் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைவலி குறையும்.கண்கள் குளிர்ச்சி பெறும்.

ஆதண்டை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசிட தலைவலி குறையும்

ஆடாதோடை இலை, வேர்ப்பட்டை, கண்டங் கத்திரி, இவற்றை காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் தலைவலி, தொண்டைவலி, வறட்டு இருமல் போன்றவை குறையும்.

துளிர் இலைகளை அரைத்து உருட்டிக் காய வைக்கவும்.பின்பு அரை லிட்டர் நல்லெண்ணெயில் அந்த உருண்டையைப் போட்டு காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.வாரம் இருமுறை இந்த எண்ணெயைத் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் நல்ல தூக்கம் வரும்.தலை வலி குறையும்.

குப்பைமேனி இலைகளை பறித்து அவற்றை இடித்து சாறு பிழிந்து ,சுக்கு சிறிதளவு எடுத்து நன்றாக அரைத்து இரண்டையும் கலந்து தலையில் இரண்டு பக்கத்திலும் போட்டால் தலை வலி குறையும்.

மஞ்சள், பூண்டு, இரண்டையும் தாய்ப்பால்விட்டு அரைத்து பற்று போட தலைவலி குறையும்.

தினசரி 15 பச்சை திராட்சையை பகல் உணவுக்கு பின் சாப்பிட்டு வர தலைவலி வராமல் தடுக்கலாம்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 585972373378320290

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item