பாதிக்குப் பாதி லாபம்... அள்ளித்தரும் ஊறுகாய் பிஸினஸ்! ஸ்டெப்ஸ் -- வீட்டிலிருந்தே சம்பாதிக்க,
''எ னக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. ரெண்டுபேரும் தலைக்கு மேல வளர்ந்துட்டாங்க. அவங்களோட படிப்பு, எதிர்கால...
கணவருக்கு துணையா வருமானத்துக்கு ஏதாச்சும் வழி பார்க்கலாமேனு தோணுச்சு. 'அம்மா, வீட்டுலயே போடுற ஊறுகாய் இருந்தா... ஒரு பிடி சாதம் அதிகமா உள்ள போகும்'னு என் பசங்க அடிக்கடி பாராட்டுறது ஞாபகம் வந்துச்சு. கணவரும், பிள்ளைகளும் கொடுத்த ஊக்கத்தால... ஊறுகாய் பிஸினஸ் ஆரம்பிச்சேன். இன்னிக்கு மாசம் கைநிறைய சம்பாதிக்கிறேன்கிறதை என்னாலேயே நம்ப முடியல!''
பிறகு, 10 ஆயிரம் ரூபாயை முதலீடா போட்டு, தொழிலை விரிவு படுத்தினேன். ஒரு மாசத்துக்கு அப்புறம் அது 15 ஆயிரம் ரூபாயா வளர்ந்து நின்னுச்சு. அதுவே ஒரு உத்வேகம் கொடுக்க... மாங்காய், இஞ்சி, நார்த்தங்காய், எலுமிச்சை, மாந்தொக்கு, ஆவக்காய்னு வகை வகையா ஊறுகாய்கள் போட ஆரம்பிச்சேன். அதுக்காக என்னோடு ஐந்து பெண்களையும் சேர்த்துக்கிட்டேன். ஒரே மாசத்துல லாபம் பல மடங்கு உயர ஆரம்பிச்சுடுச்சு.
ஊறுகாய் செய்ய நான் யார்கிட்டயும் பயிற்சி எடுத்துக்கல. சொந்த அனுபவத்தை வெச்சேதான் செய்தேன். ஆனா, தொக்கு வகைகள் செய்யறதுக்கும், பதப்படுத்தறதுக்கும் எனக்கு தெரியாதுங்கறதால... முறையா பயிற்சி எடுத்துக்கிட்டு செய்ய ஆரம்பிச்சேன்.
வெற்றி மேல வெற்றி வந்து சேர ஆரம்பிச்சுது'' என்றவர், தான் தயாரிக்கும் ஊறுகாய் வகைகளைப் பட்டியலிட்டார்.
ஆரம்பத்துல 10 ஆயிரம் முதல் போடவே யோசிச்ச நான்... இப்போ தைரியமா முதலீடு செய்றேன். இந்தத் தொழில்ல பாதிக்கு பாதி லாபம். உதாரணத்துக்கு நீங்க ஒரு லட்சம் முதலீடு போட்டா... 50 ஆயிரத்தை லாபமா அள்ளலாம்'
Post a Comment