வயிற்றுக் கோளாறுகளைக் குணப்படுத்தும் சுக்கு -- கை மருந்துகள்,
சுக்கு உடலுக்குப் பலத்தையும், நம்புகளுக்கு உற்சாகம் மற்றும் சக்தியையும் தருகிறது. அஜீரணம் மற்றும் வயிற்றுக் கோளாறுகளை குணப்படுத்தும். மல...

* நீரில் சுக்கை உரசி நெற்றிப் பொட்டில் தடவ தலைவலி குணமாகும்.
* சுக்கை பொடி செய்து அதனுடன் பூண்டுச் சாறு கலந்து சாப்பிட சூலை நோய் குணமாகும்.
* சுக்கை பசு மோர் விட்டு அரைத்துச் சாப்பிட பேதி நிற்கும்.
* சுக்குத் தூளுடன் நீர் கலந்து வெல்லம் கலந்து சாப்பிட பித்தம் வெளியேறும்.
* சுக்கு, மிளகு, வெற்றிலை ஆகியவற்றை சேர்த்து அரைத்து சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.
* ஐந்து வீதம் சுக்கு, ஜாதிக்காய், சீரகம், இவைகளை எடுத்து இடித்து உணவுக்கு முன்பு சாப்பிட அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
* சுக்குப் பொடியுடன், பெருங்காயப் பொடி கலந்து சாப்பிட வயிற்றுவலி குணமாகும்.
* 10 கிராம் வீதம் ஓமம், சுக்கு ஆகியவற்றை ஒரு டம்ளர் நீரிலிட்டுக் காய்ச்சி இதில் ஒரு துண்டு பெருங்காயத்தை உரைத்துச் சாப்பிட வயிற்றுவலி நீங்கும்.
* சுக்கு, பெருங்காயம் இரண்டையும் பாலில் உரசி நெற்றிப் பொட்டில் பற்றுப்போட தலைவலி குணமாகும்.
* நல்லெண்ணையில் சுக்கு, பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு காய்ச்சி உடல் வலியுள்ள இடங்களில் தடவ உடல் வலி நீங்கும்.
* சுக்குத் தூளை தயிருடன் கலந்து வெல்லம் சேர்த்து காலையில் சாப்பிட பித்தக் கோளாறுகள் அகலும்.
* 5 கிராம் வீதம் சுக்கு, சீரகம், திப்பிலி, மிளகு இவைகளைப் பொடியாக்கி தேன் கலந்து காலை, மாலை சாப்பிட செரியாமை நீங்கிவிடும்.
* சுக்கு, திப்பிலி, வால் மிளகு இவைகளை வகைக்கு 5 வீதம் எடுத்து வறுத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட குரல் இனிமையாகும்.
* ஒரு துண்டு சுக்கு, அதிமதுரம் இரண்டையும் இலேசாக இடித்து வாயில் ஒதுக்கிக் கொண்டு சாறை உறிஞ்சிக் கொண்டேயிருக்க தொண்டைக்கட்டு இருமல் பேன்றவை குணமாகும்.
* சுக்கை உலர வைத்து இடித்து பொடியாக அரைத்து தினசரி காலையில் இந்தப் பொடியால் பல் துலக்கி வர பல் வலி, ஈறு வீக்கம், பல் ஈறில் இரத்தம் வருதல் போன்ற நோய்கள் குணமாகும்.
Post a Comment