சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு! கழிச்சலை விரட்டும் வெண்டை!

'அமீபியாஸிஸ் என்டமீபா ஹிஸ்டலிட்டிகா’ என்ற குடல்வாழ் தொற்றுக் கிருமியால், வயிற்றுப்போக்குடன் ரத்தம் க...


'அமீபியாஸிஸ் என்டமீபா ஹிஸ்டலிட்டிகா’ என்ற குடல்வாழ் தொற்றுக் கிருமியால், வயிற்றுப்போக்குடன் ரத்தம் கலந்து வெளியேறுவதை, 'கழிச்சல்’ அல்லது 'ரத்த சீதபேதி’ என்கிறோம்.
 காரணங்கள்:
சுகாதாரமற்ற சூழலில் வசித்தல், மனிதக் கழிவுகள் உணவுப் பொருட்களில் கலத்தல், பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய கிருமித் தொற்றுள்ள பொருட்களைப் பயன்படுத்துதல் போன்றவற்றால், கழிச்சல் ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
வயிற்று வலியுடன் மலம் கழித்தல், நாளன்றுக்கு 3 முதல் 8 முறை மலம் கழித்தல், மலத்துடன் சளி மற்றும் ரத்தம் கலந்து வெளிப்படுதல், சோர்வு, ஆசன வாய்ப் பகுதியில் வலி ஏற்படும். நோய் தீவிரமான நிலையில் ரத்தத்துடன் நீர் நீராக 10 முதல் 20 முறை கழிதல், காய்ச்சல், வாந்தி போன்றவையும் ஏற்படும்.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
அவரை இலைச் சாற்றுடன் கற்கண்டு சேர்த்துக் கிளறி கொட்டைப்பாக்கு அளவு உண்ணலாம்.
லவங்கைப் பட்டை, சுக்கு, ஏலரிசி சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் கால் ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.
கீழாநெல்லியின் இலைக் கொழுந்தை அரைத்து கொட்டைப் பாக்களவு மோரில் கலந்து உண்ணலாம்.
  கால் டம்ளர் கொள்ளு இலைச்சாறுடன், காசுக் கட்டி இரண்டு கிராம் சேர்த்து அருந்தலாம்.
கோரைக் கிழங்கையும், இஞ்சியையும் தேன்விட்டு அரைத்து, சுண்டைக்காய் அளவு சாப்பிடலாம்.
  அசோகப்பூவின் பொடி கால் ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.
  அத்திப் பிஞ்சு, வேலம் பிஞ்சு, மாம்பட்டை கைப்பிடி அளவு எடுத்து, வாழைப்பூச் சாறு இரண்டு டம்ளர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்
காட்டத்திப்பூ, வில்வ வேர், யானைத் திப்பிலி, இவற்றைப் பொடித்து, கால் ஸ்பூன் மோரில் கலந்து உண்ணலாம்.
  அதிவியம், கடுக்காய்ப்பூ, சிறுநாகப்பூ, போஸ்தக்காய் - இவற்றை அரைக் கைப்பிடி அளவு எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி அரை டம்ளராக வற்ற வைத்து அருந்தலாம்.
  இலந்தை இலையை அரைத்து, சர்க்கரை கலந்து சுண்டைக்காய் அளவு உண்ணலாம்.
  விளாம் பிசினைப் பொடித்து, அதில் கால்ஸ்பூன் தேன் கலந்து உண்ணலாம்.
வில்வப் பிஞ்சை அரைத்து, கால் ஸ்பூன் எடுத்துத் தயிரில் கலந்து உண்ணலாம்.
மாம்பருப்பைப் பொன்னிறமாக வறுத்துப் பொடித்து, கால் ஸ்பூன் எடுத்து மோரில் உண்ணலாம்.
  மாதுளம் பிஞ்சு, ஏலக்காய், கசகசா, குங்கிலியத்தூள் சம அளவு எடுத்து பொடித்து கால் ஸ்பூன் எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம்.
  புளியம்பட்டைத் தூள் ஒரு பங்கு சீரகம், 3 பங்கு சேர்த்து சம அளவு பனங் கற்கண்டு சேர்த்து, அரை ஸ்பூன் உண்ணலாம்.
  வெண்டைக் காய்ப் பிஞ்சு 100 கிராம் எடுத்து வெட்டி ஒரு டம்ளர் நீர் சேர்த்து, அரை டம்ளராக வற்ற வைத்து, சர்க்கரை கலந்து உண்ணலாம்.
  பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து கொட்டைப் பாக்கு அளவு உண்ணலாம்.
உணவு சேர்க்க வேண்டியவை:
அன்னாசிப் பழம், பப்பாளி, பீட்ரூட். கேரட், பூண்டு, தர்பூசணி விதை, எலுமிச்சை, ஆரஞ்சு, மோர், தயிர்
தவிர்க்க வேண்டியவை:
காபி, மது பானங்கள், மாவுப் பொருட்கள், காரமான உணவுகள், சுகாதாரமற்ற அனைத்து உணவுகள்.

Related

பாட்டி வைத்தியம் 5347515992686211124

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item