வாழைப் பூ --வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!
மல்லிகைப் பூவை நாரில் தொடுத்தபடியே, அம்மணியின் முகத்தை வாசம்பா பார்க்க, பேச்சு வாழைப் பூ பக்கம் தாவியது. ...
https://pettagum.blogspot.com/2013/08/blog-post_5129.html
மல்லிகைப் பூவை நாரில் தொடுத்தபடியே, அம்மணியின் முகத்தை வாசம்பா பார்க்க, பேச்சு வாழைப் பூ பக்கம் தாவியது.
''புளிப்பு, தித்திப்பு என்றால் நாக்கை சப்புக்கொட்டிச்
சாப்பிடறாங்க... வாரத்துக்கு ஒரு தடவையாவது வாழைப் பூ சமைச்சு சாப்பிடற
வழக்கமே இன்னிக்கு இல்லாமப்போச்சு. அப்படியே சமைச்சாலும், வாழைப் பூவை
அலசி, நெறையத் தண்ணிவிட்டு நல்லாப் பிழிஞ்சிடுறாங்க. துவர்ப்பு இருந்தால்
சுவை இருக்காதுன்னு எண்ணம்தான். எல்லா வியாதிகளையும் குணப்படுத்துற தன்மை
துவர்ப்புச் சுவையான வாழைப் பூவுக்குத்தான் உண்டு வாசம்பா. குடும்பத்துல
ஒருத்தருக்காவது சர்க்கரை நோய் வர்ற அளவுக்கு எண்ணிக்கை அதிகரிச்சிட்டே
இருக்கிற இந்தச் சமயத்துல, வாழைப்பூவை சாப்பிடறது ரொம்பவே நல்லது.
வாழைப் பூவை நல்லா சுத்தம் செஞ்சு, சின்னச் சின்னத் துண்டுகளா நறுக்கி, எண்ணெயில் கடுகு, சின்ன வெங்காயம்,
பூண்டு, மிளகு தாளிச்சு பொரியல் செஞ்சு சாப்பிடலாம். வாரம் ரெண்டு தடவை
வாழைப் பூவை உணவுல சேர்த்துக்கிட்டா, ரத்த மூலம் குணமாயிரும்.'' - வாழைப்
பூவின் மருத்துவக் குணத்தைப் பற்றி அம்மணி அடுக்கினார்.
''சரி அம்மணி, விசேஷ நாட்கள்ல ஏன் வாழை மரத்தை வாசல்ல கட்டுறாங்க?''
''நம்ம முன்னோர்கள், வாழையை 'பெண் தெய்வமா’ ஆண்டாண்டு
காலமா, வழிபட்டுட்டு வந்தாங்க. திருமணமாகிப் போற பெண்டுக, புகுந்த
வீட்டுக்காரங்க எல்லாரையும் எப்படி அரவணைச்சுப்போறாங்க. அந்தப் பெண்ணால,
குடும்பத்துல அத்தனை பேருக்கும் பெருமை சேருது. அதுபோலதான் வாழையும். காய்,
கனி, இலை, பூ, தண்டு, பட்டைனு எல்லாத்தையும் தந்து, தழைச்சு வளரும்.'
''ஓஹோ... இதைத்தான் 'வாழையடி வாழை’னு சொல்றாங்களா!
வாழையை 'பெண்’ணுன்னு சொல்றியே... அது எந்தவிதத்துல நமக்கு உபயோகமா இருக்கு
அம்மணி?''
''மாதவிலக்காகிறப்ப, சில பெண்களுக்கு அதிகமா
ரத்தப்போக்கு இருக்கும். வாழைப் பூவுக்கு உள்ள இருக்கிற வெள்ளையான
பாகத்தைப் பாதியளவு எடுத்து நசுக்கிச் சாறு எடுத்து, கொஞ்சம் மிளகுத்தூள்
சேர்த்துக் கொதிக்கவைச்சு, கூடவே பனங்கற்கண்டும் கலந்து குடிச்சிட்டு
வந்தா, ரத்தப்போக்கு சட்டுனு நிக்கும். அதோட உடல் அசதி, வயித்து வலி, சூதக
வலி குறைஞ்சிடும்.
வாழைப் பூவை ரசம் வைச்சுக் குடிச்சா, வெள்ளைப்படுறது
கட்டுப்படும். உடம்பு சூடு அதிகமாச்சுன்னா, வாழைப் பூவோட பாசிப்பருப்பு
சேர்த்து வேகவெச்சுக் கூட்டு மாதிரி செஞ்சு நெய் சேர்த்து, வாரம் இரண்டு
தடவை சாப்பிடணும்.''
''ஆமா அம்மணி, உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? 'வேண்டாத
மனைவி கைபட்டா குத்தம், கால் பட்டா குத்தம்’னு, வயக்காட்டுல வேலை செய்ற
நம்ம அருக்காணியோட மகளை, புகுந்த வீட்டுக்காரங்க ஒதுக்கிவெச்சிட்டாங்களாமே.
கல்யாணம் முடிஞ்சு ரெண்டு வருஷமாகியும் குழந்தையில்லையாம். ஆனா, அவ
புருஷன் மட்டும் மனைவியை வந்து பார்த்திட்டுப் போறானாம்.''
'' 'பருவத்தே பயிர் செய்’னு பெரியவங்க சும்மாவா
சொன்னாங்க. மவளுக்கு 28 வயசாகியும் கல்யாணம் கட்டாம
இழுத்தடிச்சிட்டிருந்தா. இப்ப குழந்தை பாக்கியம் இல்லேன்னா என்ன செய்ய?''
''வாழையடி வாழையா வம்சத்தைத் தழைக்கவைக்க வாழைப் பூ
இருக்கே வாசம்பா. வாரம் ரெண்டு நாள் வாழைப் பூவை சமைச்சுச்
சாப்பிட்டா, குழந்தை இல்லையேங்கிற கவலை போய், பூ மாதிரி புள்ளை பிறக்கும்.
அவ புருஷனையும் சாப்பிடச் சொல்லலாம். ஆனா ஒண்ணு, குலையிலிருந்து பறிச்ச
ரெண்டு நாளுக்குள்ள சமைச்சு சாப்பிட்டுடணும்.''
''வாழைப் பூக் குருத்தை பச்சையாவே சாப்பிடலாம். உடல்
சூடு குறையும். குடல் புண் ஆறும். வாழைப்பூவுல உப்பு போட்டு அவிச்சு,
அந்தச் சாறைக் குடிச்சா, வயித்துவலி உடனே சரியாயிரும்'' என்றபடியே எழுந்த
வாசம்பாவின் கையைப் பிடித்து உட்காரவைத்த அம்மணி, ''என்ன கடுக்காய்
கொடுக்கப் பார்க்கற? பூவைக் கட்டிட்டுதான் இந்த இடத்தைவிட்டு நகரணும்''
என்றாள்.
Post a Comment