ஜவ்வரிசி இட்லி ---வாசகிகள் கைமணம்
ஜவ்வரிசி இட்லி தேவையானவை: அரிசி ரவை - ஒரு கப், ஜவ்வரிசி - அரை கப், பச்சை மிளகாய் - 2, பெரிய வெங்காயம் - ஒன்று, கடுகு - ஒரு டீஸ்பூன்...
https://pettagum.blogspot.com/2013/07/blog-post_30.html
ஜவ்வரிசி இட்லி
தேவையானவை:
அரிசி ரவை - ஒரு கப், ஜவ்வரிசி - அரை கப், பச்சை மிளகாய் - 2, பெரிய
வெங்காயம் - ஒன்று, கடுகு - ஒரு டீஸ்பூன், தயிர் - 2 கப், எண்ணெய் - 2
டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு
செய்முறை: வெறும்
கடாயில் ஜவ்வரிசியை கைபொறுக்கும் அளவுக்கு சூடு செய்யவும். அதை அரிசி
ரவையுடன் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, நறுக்கிய பச்சை
மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் தாளித்து, ஜவ்வரிசி - அரிசி ரவை
கலவையுடன் சேர்க்கவும். தயிரை கொஞ்சம் தண்ணீர் விட்டு கடைந்து அதில் ஊற்றி,
உப்பு போட்டு கலந்து வைக்கவும். இதை 7 மணி நேரம் ஊறவிடவும். தயிரை
முழுவதுமாக இழுத்துக் கொண்டால், மேலும் கொஞ்சம் தயிரோ, தண்ணீரோ கலந்து,
இட்லி மாவு பதத்துக்கு கரைக்கவும். இதை எண்ணெய் தடவிய இட்லித் தட்டில்
ஊற்றி, பதினைந்தில் இருந்து இருபது நிமிடம் ஆவியில் வேக வைத்து
எடுக்கவும்.
இந்த இட்லி, ஆறினாலும் நன்றாக இருக்கும். இதற்கு தேங்காய் சட்னி சரியான காம்பினேஷன்..
Post a Comment