...
சௌசௌ
காயை நறுக்கும்போது கை பிசுபிசுப்பாகிவிடும். இதைத் தவிர்க்க... காயை நீள
வாக்கில் இரண்டாக வெட்டி, ஒன்றோடு ஒன்றைத் தேய்த்தால் நுரை வரும். பிறகு
தண்ணீரில் கழுவிவிட்டு நறுக்கினால் பிசுபிசுப்பே படியாது.
வீட்டின் ஜன்னல்,
ஷோ கேஸ் போன்ற கண்ணாடி பொருட்களில் கீறல் விழுந்துவிட்டதா? கீறல் விழுந்த
இடத்தில் ஏதேனும் ஒரு கலர் பெயின்ட்டை அடியுங்கள். கீறல் தெரியாமல்,
கண்ணாடியும் கலர்ஃபுல் லாக இருக்கும்.
ஃபிரிட்ஜ்
கதவு எப்போதும் பளிச்சென்று இருக்க... லிக்விட் (அ) சோப் பவுடருடன் சில
துளிகள் சொட்டு நீலத்தை விட்டு, நுரை வரும் வரை கலக்குங்கள். இந்த நுரையை
மட்டும் எடுத்து துடைத்தால் போதும். பளபளவென்று இருக்கும்.
வெயில் காலத்தில் இரவே பாலை உறை ஊற்றும்போது, தயிர்

புளித்துவிடும்.
இதற்கு... மூன்று அடுக்கு டிபன் கேரியரில் நடு அடுக்கில் உறை ஊற்றிய
பாலையும், மேலும் கீழும் உள்ள அடுக்குகளில் குளிர்ந்த நீரையும் நிரப்பி
வைத்தால்... அதிகம் புளிக்காமல் இருக்கும்.
வீட்டில்
இருக்கும் எமர்ஜென்ஸி லைட் பயன்படுத்தப்படாமலே இருக்கிறதா? ஏதாவது ஒரு
அறையில் இருக்கும் சாதாரண லைட்டுக்குப் பதிலாக, எமர்ஜென்ஸி லைட்டை மட்டும்
எரிய விடுங்கள். மற்ற நேரங்களில் ரீ-சார்ஜ் செய்து தயார் நிலையில் வைத்தால்
நீண்ட நாட்கள் உழைக்கும்.
துணிகளில்
கறை ஏற்பட்டுவிட்டால், மறுநிமிடமே அந்த இடங்களில் கிளிப் (அ) சேஃப்டி
பின்னை குத்தி வையுங்கள். துவைக்கும்போது, அந்த இடத்தை எளிதில்
கண்டுபிடித்து தனியாக அலசலாம்.
முற்றிய
தேங்காயை துண்டுகள் போடுவது சிரமமாக இருக்கும். தேங்காயை ஃபிரீசரில்
பதினைந்து நிமிடங்கள் வைத்து, தண்ணீரில் கழுவி, கத்தியால் கீறிவிட்டால்,
சுலபமாக வந்துவிடும்.
காலையில் வாங்கும்
பூக்கள் இரவுக்குள் வாடிவிடுகிறதே என்று முகம் வாட வேண்டாம். ஸ்பாஞ்சை
தண்ணீரில் நனைத்து, அதன் மேல் பூக்களை வைத்து, ஈரத் துணியால்
மூடிவிடுங்கள். பூக்கள் வாடாமல் இருக்கும்.
Post a Comment