'பத்து'வம்! ...

'பத்து'வம்!


மும்மனசு
சின்ன மனசு -
மனிதர்களைப் பற்றி விவாதிக்கும்;
சராசரி மனசு -
நிகழ்வுகளைப் பற்றி விவாதிக்கும்;
பெரிய மனசு -
திட்டங்களைப் பற்றி விவாதிக்கும்!

எதனால்..?
நமக்கு ஏற்படும் துன்பங்களில் பாதி அறியாமையால் வந்தவை; மீதி? அறிந்தமையால் வந்தவை!

நீங்களும் அவர்களும்...
உங்களை உங்கள் மூளையால் கையாளுங்கள்; மற்றவர்களை உங்கள் இதயத்தால் கையாளுங்கள்!

விபத்து
வாழ்க்கையில் ஒரு விநாடியைக் கூட இழக்க விரும்பாதவராக இருந்து என்ன பயன்... ஒரு விநாடியில் வாழ்க்கையையே இழந்துவிட்டால்?

விழிப்பு உணர்வு
சிறப்பானவற்றை எதிர் பார். ஆனால், மோசமானவற்றுக்குத் தயாராக இரு!

ஆறாம் சுவை
நகைச்சுவை உணர்வு நிரம்பிய
மனிதன், மென்மையான இலவம்பஞ்சு அடைத்த தலையணை போல. அவனும் லேசாக இருப்பான்;
அடுத்தவருக்கு இதமாகவும் இருப்பான்!

வசதி!
நமக்கு எது வசதி என்பதில், எது சரி என்பதை மறந்து விடுகிறோம்.

கண்ணியத் தோல்வி!
பொய்களால் ஜெயிப்பதை விட, உண்மையால் தோற்பது ஒன்றும் கேவலத்துக்குரியது அல்ல!

இலக்கு எங்கே?
மற்றவர்கள் தொடமுடியாத இலக்கைத் தொடுபவன் திறமைசாலி; மற்றவர்கள் பார்க்கவே முடியாத இலக்கையும் தொடுபவனே மேதை!

பயத்துக்கு அப்பால்...
தைரியம் என்பது பயமின்றி இருப்பதல்ல; பயந்த பின், அந்த நிகழ்வை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பது!
Post a Comment