கோவை ஸ்பெஷல் புளிக்குழம்பு.....சமையல் குறிப்புகள்,
இது " கோவை ஸ்பெஷல் புளிக்குழம்பு ' செய்முறை நேரம்! தேவையானவை: கத்தரிக்காய்-3 (அ) முருங்கைக்காய்-2, சின்ன வெங்காயம்- ஒரு கப், தக...
தேவையானவை: கத்தரிக்காய்-3 (அ) முருங்கைக்காய்-2, சின்ன வெங்காயம்- ஒரு கப், தக்காளி-2, புளி-எலுமிச்சம்பழ அளவு, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு.
தாளிக்க: கடுகு-அரை டீஸ்பூன், வெந்தயம்- அரை டீஸ்பூன், எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்.
அரைக்க: சின்ன வெங்காயம்-6, தேங்காய் துருவல்- ஒரு டேபிள் ஸ்பூன், பூண்டு-4 பல், காய்ந்த மிளகாய்-8, தனியா-ஒரு டேபிள் ஸ்பூன், சீரகம்-அரை டீஸ்பூன், பொட்டுக் கடலை-2 டீஸ்பூன், மல்லித்தழை சிறிதளவு, எண்ணெய்-2 டீஸ்பூன்.
செய்முறை: வெங்காயத்தை தோல் நீக்கி இரண்டாக நறுக்குங்கள். கத்தரிக்காய் (அ) முருங்கைக்காயை சிறு துண்டுகளாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களில், மிளகாய், தனியா, சீரகம் மூன்றையும் முதலில் சிறிது எண்ணெய் விட்டு தனியாக வறுத்தெடுங்கள். மீதமுள்ள எண்ணெயில் மற்ற பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
வறுத்த மிளகாய், தனியா, சீரகம் ஆகியவற்றை முதலில் நன்கு அரைத்துக் கொண்டு, பிறகு அத்துடன் மற்ற பொருட் களையும் சேர்த்து அரைக்க வேண்டும். (கொங்கு நாட்டுப் பகுதியில் இந்தக் கலவையை ஆட்டுக் கல்லில் போட்டு அரைத்தெடுப்பர். குழம்பின் ருசியே அதில் தான்) புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். அரைத்து வைத்திருக்கும் விழுதை இந்தப் புளிக் கரைசலில் போட்டு கரைத்துக் கொள்ளுங்கள். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, வெந்தயம் தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். பிறகு காயைப் போட்டு வதக்கி, அத்துடன் தக்காளி சேர்த்து, தேவையான உப்புப் போட்டு வதக்கி, புளிக்கரைசலை சேருங்கள். பச்சை வாசனை போகக் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
Post a Comment