இயற்கையில் இருக்கு எல்லாமே...! இய‌ற்கை வைத்தியம்,

இயற்கையில் இருக்கு எல்லாமே...! ந ம்மைச் சுற்றி உள்ள சில மூலிகைகளும் சரும நோய்க்கான சிறந்த மருந்தாக விளங்குவதை அறிந்திருக்கிறோமா? செயற...

இயற்கையில் இருக்கு எல்லாமே...!
ம்மைச் சுற்றி உள்ள சில மூலிகைகளும் சரும நோய்க்கான சிறந்த மருந்தாக விளங்குவதை அறிந்திருக்கிறோமா? செயற்கையான வாசனைத் திரவியங்கள், வேதியல் பொருட்களைப் போல் அல்லாமல் இவற்றில் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லை என்று பட்டியலிட்டார் 'சோலையில்’ நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் நவீன் ஷர்மா.

வெள்ளரிக்காய்
வெள்ளரி விதை, வெள்ளரிப் பிஞ்சு ஆகியவற்றைச் சருமத்தின் மீது பூசிக்கொள்ளச் சிகப்பழகு பெறுவதுடன் பட்டுப் போன்ற மென்மையும் தரும். இதன் மருத்துவக் குணம் தீப்புண், வெயில் ஆகியவற்றால் ஏற்படும் சரும எரிச்சலைக் குளிரவைக்கும். இதன் சாறு உடலைக் குளிரவைப்பதுடன் சருமத்தை அழகுபடுத்தும். சருமத்துக்கு இதமானது என்பதுடன் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும். வெப்பக் காற்றுப்பட்டு வறண்டுபோகும் சருமத்தைக் குளிர்விப்பதால்தான், விஷயம் அறிந்த பெண்கள் வெள்ளரி சோப்பைப் பயன்படுத்துகின்றனர்.
கற்றாழை
ஆரோக்கியம், புத்துணர்ச்சி ஆகியவற்றுடன் முதுமையைத் தடுக்கும் ஆற்றலும்கொண்டது கற்றாழை. சருமப் பிரச்னைகளுக்காகவே கற்றாழை பெரும்பாலும் பயன்படுகிறது. தோல் அலர்ஜி, அக்கி, அம்மை, அரிப்பு, வெட்டு, சிராய்ப்பு, தீக்காயம் ஆகியவற்றுக்குச் சிறந்த மருந்து கற்றாழை.
கற்றாழையின் தண்டில் சிறப்பான கூட்டுப் பொருட்கள் இருக்கின்றன. இதில் உள்ள வீக்க எதிர்ப்புச் சத்துக்கள் வலியைக் குறைப்பதுடன், தீப்புண், எரிச்சல் மற்றும் அரிப்பைக் குறைக்கின்றன. மிக முக்கியமாக இதில் உள்ள முதுமை எதிர்ப்பிகள் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதுடன், சருமத்துக்குப் பட்டுப் போன்ற மென்மை, ஈரத் தன்மை, பாதுகாப்பு,   புத்துணர்ச்சி ஆகியவற்றையும் தருகின்றன. கற்றாழை ஜெல் உயிரணுக்கள் வளர்ச்சியை  ஊக்கப்படுத்துவதுடன் சேதமடைந்த சருமத்தையும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருகிறது. இதில் உள்ள நீர்ச்சத்து சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் குளிர்ச்சியைத் தருகிறது.
வல்லாரை
வல்லாரையிலும் முதுமை எதிர்ப்பிகள் அதிகம் இருப்பதால் காஸ்மெடிக்ஸ் தயாரிப்பில் முக்கிய அங்கம் வகிக்கிறது.  சீழ்ப்புரை, குழந்தை பிறந்த பிறகு வயிறு சுருங்குவதால் ஏற்படும்  கோடுகளையும் தீர்க்கவல்லது. எரிச்சல், அரிப்பு ஆகியவற்றை நீக்கிச் சருமத்தைச் சுத்தப்படுத்தி மிருதுவாக வைத்திருக்கும்.
கிருஷ்ண துளசி
ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்த மருந்து துளசி. குறிப்பாக முகப்பரு, முதுமை, பேன், பொடுகு, பூச்சிக் கடி ஆகியவற்றுக்குச் சிறந்த நிவாரணி. கொசுவை விரட்டும் தன்மை இருப்பதால் கொசு விரட்டிகளில் இது பயன்படுத்துகிறது.
மஞ்சள்

ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன், சருமத்துக்குப் புத்துணர்ச்சி ஊட்டி, ஆரோக்கியத்துடன் இயற்கையாக ஒளிரவைக்கும். வீக்கம், பாக்டீரியா மற்றும் முதுமை எதிர்ப்பிகள் இருப்பதால் முகப்பரு, தடிப்பு, கருந்திட்டுகள் மற்றும் சரும நோய்களுக்கான சிறந்த மருந்தாகும். உலர் சருமத்தை மென்மையாக்கிச் சருமம் விரைவில் முதுமை அடைவதைத் தடுக்கிறது.
சந்தனம்
ஆயுர்வேத மருத்துவத்தில் சந்தனத்தின் பயன்பாடு மிக அதிகம். அரிப்பு, சிராய்ப்பு, வறட்சி, சொறி, முகப்பரு உள்ளிட்ட பெரும்பாலான சருமப் பிரசினைகளுக்குத் தீர்வாகும். வெளிப்புறப் பயன்பாட்டில் எண்ணெய்யாகவும், பேஸ்டாகவும், லோஷனாகவும், சோப்பாகவும் பயன்படுத்தலாம்.  கடுமையான வெயிலில்கூட உடலைச் சில்லெனக் குளிர்விக்கும்.

Related

இய‌ற்கை வைத்தியம் 180958433463761610

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Thursday - Nov 28, 2024 5:29:15 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,416

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item