மூச்சு முக்கியம் பாஸ்... 'இன்ஹேலர்' எச்சரிக்கை --- உபயோகமான தகவல்கள்,

  ''நா ற்பது மாணவிகள் உள்ள என் வகுப்பில், பதினைந்து பேருக்கும் மேல் இன்ஹேலர் பயன்படுத்துகின்றனர்'...

 ''நாற்பது மாணவிகள் உள்ள என் வகுப்பில், பதினைந்து பேருக்கும் மேல் இன்ஹேலர் பயன்படுத்துகின்றனர்''- ஒரு கல்லூரிப் பேராசிரியர் அதிர்ச்சி கலந்த வேதனையுடன் சொன்ன வார்த்தை இது.   
கல்லூரிப் பெண்களின் பைகளில் அழகு சாதனங்கள் மட்டும் அல்ல... இன்று 'இன்ஹேலர்’ என்ற ஆஸ்துமா சாதனமும் இருக்கிறது.
''சுற்றுச்சூழல் கடுமையாக மாசடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில், ஆஸ்துமாப் பிரச்னையால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் போகிறது. மூச்சுத்திணறலைக் கட்டுப்படுத்த, ஒரு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் இன்ஹேலர். இந்தப் பிரச்னைக்காக, மாத்திரைகளை உட்கொண்டால், அது ரத்தத்தில் கலந்து, நுரையீரல் சென்றடைவதற்குள் மூச்சிறைப்பு வந்துவிடும். ஆனால், இன்ஹேலரைக் கொண்டு மூச்சை உள்ளே இழுக்கும்போது, அதில் இருந்து வெளிப்படும் 'ஏரோசால்’ நேரடியாக நுரையீரலில் இருக்கும் வாயுக் குழாய்களைத் தளர்த்தி மூச்சுத்திணறலைக் கட்டுப்படுத்தும். இதில் பின்விளைவுகள் இல்லை. ஆனால், சுலபமாக உபயோக்கிக்க முடிகிறது என்பதற்காக இதனைப் பலரும் அடிக்கடி, குறிப்பாக இளம் பருவத்தினர் அதிகமாக உபயோகிக்கின்றனர். இதுவும் தவறுதான்!'' என்கிற ஆஸ்துமா நிபுணர் டாக்டர் ஜரீன் முகம்மது, இன்ஹேலரை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்பது பற்றிய டிப்ஸ்களை சொன்னார்.
>>இன்ஹேலரை அடிக்கடி பயன்படுத்தும்போது, ஏரோசாலில் உள்ள சால்பியூட்டமால் (Salbutamol) அளவு அதிகமாகி, கை நடுக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இன்ஹேலர் வாங்கும்போது அது காலாவதி ஆகவில்லை என்பதை உறுதி செய்த பிறகு வாங்குவது அவசியம்.
>> ஏரோசால் என்பது பிரிக்கப்பட்ட நிலையில் உள்ள திரவம் போன்றது. எனவே, இன்ஹேலரை உபயோகிக்கும் முன்பு நன்றாகக் குலுக்கவும். அப்போதுதான் சரியான சதவிகிதத்தில் மருந்து நுரையீரலைச் சென்றடையும்.
>>முதல்முறையாக இன்ஹேலர் பயன்படுத்தும்போது, அதை உடனே வாயில் வைத்து அழுத்தாமல் கொஞ்சம் தள்ளி நின்று வெளியே அடித்துப்பாருங்கள். இதனால், எவ்வளவு அழுத்தம் கொடுத்தால் எவ்வளவு ஏரோசால் வெளியே வருகிறது என்று தெரியும்.
>> இன்ஹேலரை இழுக்கும் முன், நன்றாக மூச்சை முழுவதுமாக வெளியே விட்டுவிட வேண்டும். பிறகு ஏரோசாலை மூச்சிழுத்து ஒரு 10 விநாடி அப்படியே வைத்திருக்கவும். பிறகு மெதுவாக, மிக மெதுவாக மூச்சை வெளிவிட வேண்டும்.
>> இன்ஹேலரைப் பயன்படுத்திய பிறகு நன்றாக வாயைக் கொப்பளிக்க மறந்துவிடக்கூடாது. ஏரோசால் வாயினுள் தங்கியிருக்கத் தேவையில்லை.
>> இன்ஹேலரை ஒருமுறை மட்டுமே அழுத்த வேண்டும். அதற்கு மேல் அழுத்தினால் தேவைக்கும் அதிகமாக ஏரோசால் வெளிவந்து வீணாகிவிடும்.
>> இன்ஹேலர் பயன்படுத்திய பிறகு அதை மூடவேண்டும்.
>> இன்ஹேலரை பயன்படுத்தத் தெரியவில்லை என்றால் 'ஸ்பேசர்’ புட்டி ஒன்றை இன்ஹேலருடன் பொருத்தி உபயோகப்படுத்தலாம். மூச்சை இழுக்கும்போது, மருந்தின் வேகத்தை இது குறைக்கும்.
>>ஸ்பேசர் பயன்படுத்துவதற்கு முன் வழக்கம்போல் மூச்சை வெளிவிட்டுவிடவும். இன்ஹேலர் பட்டனை அழுத்தியபின் ஏரோசால் ஸ்பேசருக்குள் சென்றுவிடும், பிறகு, ஐந்து முறை மூச்சை மெதுவாக இழுத்து, பிறகு விடவும், அதன்பிறகு ஒரு முறை நன்றாக மூச்சிழுத்து, 10 விநாடிகள் அப்படியே வைத்திருந்து, பின்னர் மூச்சை மெதுவாக வெளிவிடவும்.
>>மருத்துவர் பரிந்துரைக்காமல் இன்ஹேலர் வாங்குவது தேவையற்றது. அதேபோல் இன்ஹேலர் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி, மருத்துவர் சொன்னபிறகுதான், உபயோகிப்பதை நிறுத்த வேண்டும்.
>>சரியான நிலையில் உட்கார்ந்தபடியே இன்ஹேலரைப் பயன்படுத்த வேண்டும். படுத்துக்கொண்டோ, சாய்ந்துக்கொண்டோ பயன்படுத்தினால் மருந்து முழுவதுமாக உள்ளே செல்லும் வாய்ப்பு குறைந்துவிடும்.
>> குழந்தைகளுக்கு ஏரோசால் கசப்பாக இருப்பதுபோல் தோன்றும். அவர்களுக்காக விதவிதமான ஃபிளேவர்களில் ஏரோசால் கிடைக்கிறது. அதையும் அடிக்கடி பயன்படுத்தாமல், தேவையானபோது மட்டும் உபயோகிக்கவேண்டும்.
>> இன்ஹேலர் ஒன்றின் விலை 200 முதல் 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது.  அதை வாங்கும் வசதி இல்லாதோர் ஸிஷீtணீலீணீறீஷீக்ஷீஐ பயன்படுத்தலாம்.
>> மிகவும் அவசியமான தருணங்களில் மட்டுமே இன்ஹேலர் பயன்படுத்த வேண்டும். மூன்று நான்கு மாடி படிகள் ஏறிவிட்டு இன்ஹேலர் பயன்படுத்தினால் மனதளவில் சோர்ந்து போய்விடும்.  அதுமட்டும் அல்லாமல் இன்ஹேலர் பயன்படுத்துவது ஒரு வழக்கமாகிவிடும்.
இன்ஹேலரை முறையாகப் பயன்படுத்துங்கள்.  மூச்சுத் திணறலை தவிர்த்திடுங்கள்! 

Related

முத்துக்கள் பத்து! .....உபயோகமான தகவல்கள்,

முத்துக்கள் பத்து! விண்ணைத் தாண்டி மேலே சென்று கொண்டிருக்கும் விலைவாசி, அதிர்ச்சியில் ஆழ்த்தும் கல்விக் கட்டணங்கள்... இவற்றை தங்கள் வருமானத்தைக் கொண்டு பெரும்பாலானவர்...

வாய் துர்நாற்றத்தை போக்க வழிகள் பத்து:

வாய் துர்நாற்றத்தை போக்க வழிகள் பத்து: 1. உடனடியாக வாய் துர்நாற்றத்தைப் போக்க நறுமணப்பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம். தற்போது சூயிங்கம், mouth Freshnner ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். 2....

எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள்:

1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Thursday - Nov 28, 2024 5:29:14 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,416

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item