தோள்பட்டைக்கான பயிற்சிகள்---உடற்பயிற்சி,
உடலுக்கு தேவையான வடிவத்தை தருபவை தோள்கள்தான். தோல்பட்டை வலிகளை நீக்க நம் கை விரல்களைக் கொண்டே மசாஜ் செய்யலாம். வலது கைவிரல்களைக் கொண்டு இ...

அதேபோல் இடது கை விரல்களைக் கொண்டு வலது தோள்களில் மெதுவாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் வலி குறையும். கைகளுக்கு எளிய பயிற்சிகளை கொடுப்பதன் மூலம் தோள்பட்டை இணைப்புகள் உறுதிபடுவதுடன், வலுவடைகின்றன.
முதலில் நின்றுகொண்டு கையை உயர்த்தி பின்னர் வலது புறமாக 10 முறை சுற்றலாம். இதேபோல் இடது புறமாக 10 சுற்றலாம். இதனால் தசைகள் ரிலாக்ஸ் ஆகும். இந்த பயிற்சியை நின்று கொண்டோ, நடந்து கொண்டோ செய்யலாம். உட்கார்ந்த நிலையிலும் கைகளை மேலே உயர்த்தி பயிற்சி செய்யலாம்.
ஆரம்பத்தில் 10 முறைகள் ஆரம்பித்து பின் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம். முதலில் செய்ய ஆரம்பிக்கும் போது வலது கையை சுழற்றவும். பின்னர் இடது கையை சுழற்றவும். கடைசியாக இரு கைகளையும் சுழற்றவும். இந்த முறையில் தான் பயிற்சி செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் தோள்பட்டை உறுதியாகும் என்கின்றனர் யோகா ஆசிரியர்கள். சூரிய நமஸ்காரத்தில் கழுத்து, தோள்பட்டை போன்றவைகளுக்கு நன்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் அழகான, ஆரோக்கியமான தோள்களும், கழுத்தும் கிடைக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.
Post a Comment