பூண்டு வெங்காய அப்பளக் குழம்பு---சமையல் குறிப்புகள்,
இது, "பூண்டு வெங்காய அப்பளக் குழம்பு' செய்முறை நேரம். தேவையானவை: புளி-ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, சின்ன பூண்டுப்பல்- 10, சின்...

தேவையானவை:
புளி-ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு,
சின்ன பூண்டுப்பல்- 10,
சின்ன வெங்காயம்-10,
உளுந்து அப்பளம்- இரண்டு,
மிளகாய் வற்றல்-ஒன்று,
சாம்பார் பொடி-2 ஸ்பூன்,
கடுகு-1/4 ஸ்பூன்,
கடலைப் பருப்பு - 1/4 ஸ்பூன்,
வெந்தயம்-1/4 ஸ்பூன்,
நல்லெண்ணெய்-6 ஸ்பூன்,
உப்பு-தேவையான அளவு.
செய்முறை:
புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும்.
பூண்டு, வெங்காயத்தை தோல் உரித்து இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப் பருப்பு, வெந்தயம், மிளகாய் வற்றல் தாளித்து, பிறகு வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
பின்பு அப்பளத்தைப் பிய்த்து துண்டுகளாக்கிப் போடவும்.
இத்துடன் சாம்பார் பொடியையும் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
பின்பு புளித்தண்ணீரை விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
பருப்பே இல்லாமல் வீடே மணக்கும். இந்த பூண்டு வெங்காய அப்பளக் குழம்பு.
Post a Comment