அருகம்புல்லின் அருமை! --- இயற்கை வைத்தியம்,
அருகம்புல்லின் அருமை! * அருகம்புல் வேரை, நிழலில் உலர்த்தி, இடித்து, கஷாயம் செய்து கொள்ளவும். இத்துடன், பால், சர்க்கரை சேர்த்து, காபி போ...

* அருகம்புல் வேரை, நிழலில் உலர்த்தி, இடித்து, கஷாயம் செய்து கொள்ளவும். இத்துடன், பால், சர்க்கரை சேர்த்து, காபி போல சாப்பிட, மார்பு வலி நீங்கும், உடல் இளைக்க உதவும், உறக்கம் தரும், பல் மற்றும் ஈறு நோய்கள் நீங்கும், வயிற்று புண், கர்ப்பப்பை கோளாறுகள், மாதவிலக்கு தொல்லைகள் நீங்கும். மசாஜ் செய்து விட்டதைப் போல, உடம்பு உற்சாகமாக இருக்கும்.
* அருகம்புல்லையும், ஆல இலையையும் சமமாக எடுத்து, அரைத்து, உச்சந்தலையில் பற்றுப் போட்டால், தலைவலி குணமாகும்.
* தூதுவளை வேரையும், அருகம்புல்லையும் கசக்கி, துணியில் வைத்து, பல்வலி இடது புறமிருந்தால், வலது காதிலும்; வலது புறமிருந்தால், இடது காதிலும் மூன்று சொட்டுகள் மட்டுமே பிழிந்து விட்டால், வலி உடனே நீங்கும்.
Post a Comment