வீட் பனங்கற்கண்டு பாயசம் --- சமையல் குறிப்புகள்,
தேவையானவை: கோதுமைக் குருணை - ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், பனங்கற்கண்டு - ஒரு கப், முற்றிய தேங்காய் - ஒன்று, ஏலக்காய் - 5, முந்தி...
https://pettagum.blogspot.com/2013/03/blog-post_28.html
தேவையானவை: கோதுமைக் குருணை - ஒரு
கப், பாசிப்பருப்பு - அரை கப், பனங்கற்கண்டு - ஒரு கப், முற்றிய தேங்காய் -
ஒன்று, ஏலக்காய் - 5, முந்திரிப் பருப்பு, திராட்சை - தலா 20 கிராம், நெய்
- 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: கோதுமைக் குருணை,
பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து நெய்விட்டு வறுக்கவும். அதனுடன் 4 கப்
தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவிட்டு, நாலு விசில் வந்ததும் இறக்கவும்.
தேங்காயை அரைத்துப் பால் எடுக்கவும்.
அடுப்பிலேயே குக்கரை திறந்து வைத்து, அடுப்பை
'சிம்’மில் வைத்து, பனங்கற்கண்டு சேர்த்துக் கிளறிக்கொண்டே, ஐந்து
நிமிடங்களுக்குப்பின் தேங்காய்ப் பால், பொடித்த ஏலக்காய், நெய்யில் வறுத்த
திராட்சை, முந்திரி சேர்த்து, கொதித்தபின் இறக்கவும்.-
வீட் - பனங்கற்கண்டு பாயசம்: பாயசத்தைக் கொதிக்கவிடும்போது, நெய்யில் வறுத்த கடலை மாவு சிறிதளவு சேர்த்தால், வாசனை மிகவும் நன்றாக இருக்கும்.
Post a Comment