பவன முக்தாசனம் --- ஆசனம்,
செய்முறை: விரிப்பில் நேராகப் படுத்துக் கொள்ளவும். இடது காலை மடித்து இடது கால் முட்டி வயிற்றில் படும்படி அமுக்கி, வலது காலை வளைக்காம...

விரிப்பில் நேராகப் படுத்துக் கொள்ளவும். இடது காலை மடித்து இடது கால் முட்டி வயிற்றில் படும்படி அமுக்கி, வலது காலை வளைக்காமல் நேராக வைத்து, தலையைத்தூக்கி முகவாய்க் கட்டை இடது கால் முட்டியில் படும்படி வைக்கவும். 20 விநாடிகள் இருக்கவும். பின் காலை பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு வலது காலில் செய்யவும். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்யவும்.
பலன்கள்:
இந்த ஆசனம் செய்வதால் முதுகு வலி, வாயுக் கோளாறு, நீரிழிவு நீங்கும். பெண்களுக்கு மாதவிடாய்க்காலத்தில் ஏற்படுகின்ற வயிற்று வலி நீங்கும். இளமையின் ரகசியம் இந்த ஆசனம்.
Post a Comment