ஓட்ஸ் கொழுக்கட்டை---சமையல் குறிப்புகள்,
தேவையான பொருட்கள்....... ஓட்ஸ் - 1 கப் வெங்காயம் - 1 ப.மிளகாய் - 1 இஞ்சி - சிறிய துண்டு எண்ணெய் - 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, கடலை ப...

https://pettagum.blogspot.com/2013/03/blog-post_744.html
தேவையான பொருட்கள்.......
ஓட்ஸ் - 1 கப்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 1
இஞ்சி - சிறிய துண்டு
எண்ணெய் - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு - தலா 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை....
• ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்து பொடித்துக் கொள்ளவும்
• வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
• கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை போட்டு சிறிது வதக்கி உப்பு, பொடித்த ஓட்ஸை போட்டு சிறிது கிளறவும் (சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்)
• 2 நிமிடம் வதக்கிய பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி அந்த மாவை உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வைத்து வேக வைக்கவும் • 10 முதல் 15 நிமிடம் வேக வைத்தால் போதுமானது.
• இந்த ஓட்ஸ் கொழுக்கட்டை மிகவும் சத்தானது
• டயட்டில் இருப்பவர்கள் ஓட்ஸ் கஞ்சி, உப்புமா மட்டும் செய்யாமல் இப்படியும் ஓட்ஸை செய்து சாப்பிடலாம்.
Post a Comment