இஞ்சித் தேன் --இயற்கை உணவு
என்னென்ன தேவை? இஞ்சி - 150 கிராம், தேன் - 150 மி.லி., ஏலக்காய் தூள் மற்றும் கிராம்புத் தூள் - தலா 5 கிராம். எப்படிச் செய்வது? இஞ்ச...

இஞ்சி - 150 கிராம்,
தேன் - 150 மி.லி.,
ஏலக்காய் தூள் மற்றும் கிராம்புத் தூள் - தலா 5 கிராம்.
எப்படிச் செய்வது?
இஞ்சியைத் தோல் சீவி, தண்ணீர் விடாமல் இடித்துச் சாறு எடுத்து, ஒரு சிறிய கிண்ணத்தில் அசையாமல் வைக்கவும். 10 நிமிடம் கழித்து, கீழே மாப்படிவு படிந்திருக்கும். மேலே தெளிந்த சாறு இருக்கும். அதனைச் சாய்த்து எடுத்துத் தேன் சேர்த்து, அடுப்பில் வைத்து, பாகு பதம் வரும் வரை கிளறி, ஏலக்காய் தூள், கிராம்புத் தூள் சேர்த்துக் கிளறி, இறக்கி, பாத்திரத்தில் மூடி வைக்கவும். இதை தினம் 2 டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் கலந்து உண்டு வந்தால், நெஞ்செரிச்சல், மசக்கை குணமாகும்.
Post a Comment