சமையலுக்கு எந்த வகை எண்ணெய் பயன்படுத்தலாம்?
என் வீட்டில் சமையலுக்கு தினமும் நல்லெண்ணெய் பயன்படுத்துகிறேன். இது நல்லதா? சமையலுக்கு எந்த வகை எண்ணெய் பயன்படுத்தலாம்? சமையல் எண்ணெயை பொறு...
சமையல் எண்ணெயை பொறுத்தவரை, தாளிப்பதற்கு சிறிதளவு உபயோகப்படுத்துவது தவறில்லை. எந்தவகை எண்ணெயாக இருந்தாலும், பொறிக்க பயன்படுத்துவது தவறு. வடை, அப்பளம், முறுக்கு, பூரி, சிப்ஸ் போன்ற பொறித்த உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். எண்ணெயில் ஆலிவ், சூரியகாந்தி, நல்லெண்ணெய், "ரைஸ் பிரான்' பயன்படுத்தலாம். வாரம் ஒருமுறை எண்ணெய் வகைகளை மாற்றுவது நல்லது. இந்தவாரம் நல்லெண்ணெய் உபயோகித்தால், அடுத்த வாரம் ஆலிவ் எண்ணெய்... இப்படி மாற்றி மாற்றி பயன்படுத்த வேண்டும். பொறிப்பதற்கு ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை, எக்காரணம் கொண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. ஒரு டீஸ்பூன் எண்ணெயில் 45 கலோரி உள்ளது. நல்ல உடல்நலம் உள்ளவர்கள், ஒரு நாளைக்கு 5 டீஸ்பூனும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் உள்ளவர்கள் 2 டீஸ்பூன் எண்ணெய் பயன்படுத்தலாம்.
Post a Comment