தவா சிக்கன்--சமையல் குறிப்புகள்-அசைவம்!,
அசைவ உணவுகளில் ஒன்றான சிக்கனை பல வகைகளில் சமை க்கலாம். அதிலும் சிக்கனை நன்கு கார மாக சாப்பிட வேண்டும் என்று தான் பலர் விரும்புவார்கள். ...
https://pettagum.blogspot.com/2013/01/blog-post_20.html
அசைவ உணவுகளில் ஒன்றான சிக்கனை பல வகைகளில் சமை க்கலாம். அதிலும் சிக்கனை நன்கு கார மாக சாப்பிட வேண்டும் என்று தான் பலர் விரும்புவார்கள்.
அத்தகைய
சிக்கன் ரெசிபியில் ஒன்றான தவா சிக்கனை இதுவரை ரெஸ்ட்டாரண் ட்டில் தான்
சாப்பிட்டிருப்போம். ஆனால் தற்போது அந்த தவா சிக்கனை வீட்டிலே யே சூப்பராக
சமைத்து சாப்பிடலாம். அதன் செய்முறையைப் பார்ப் போமா!!!
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 500 கிராம் (சிறிய துண்டுகளாக வெட்டி, நன்கு கழுவியது)
வெந்தயம் – 1 டீஸ்பூன்
வர மிளகாய் – 2
வெங்காயம் – 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
ஃப்ரஷ் க்ரீம் – 1 டேபிள் ஸ்பூன்
குடை மிளகாய் – 1 (நறுக்கியது)
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் தவாவை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய் ந்ததும்,
வெந்தயம் மற்றும் வர மிள காய் போட்டு தாளிக்க வேண்டும். பின் அதில்
நறுக்கிய வெங்காயத் தை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். அடுத்து
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர்
அதில் சிக்கன் துண்டுக ளை போட்டு மஞ்சள் தூள், மிளகா ய் தூள், கரம் மசாலா
தூள் சேர்த்து ஒரு 5 நிமிடம் கிளற வேண்டும். பின்பு தக்காளி மற்றும் உப்பு
சேர் த்து, தக்காளி நன்கு வதங்கும் வரை சுமார் 3-4 நிமிடம் கிளற வேண் டும்.
இந்த நேரத்தில் எலுமிச்சை சாறு மற்றும் ஃப்ரஷ் க்ரீம் சேர்த்து, கலந்து 1
கப் தண்ணீரை விட்டு மூடி வைக்க வேண்டும். ஒரு 10 நிமிடம் தீயை குறைவில்
வைத்து, வேக வைக்க வேண்டும்.
பின்னர்
மற்றொரு கப் தண்ணீர் விட்டு, மீண்டும் 8-10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
இப்போது தண்ணீர் சுண்டி, சிக்கன் நன்கு வெந்திருக்கும். இந்த சமயம்
மூடியைத் திறந்து, அதில் நறுக்கிய குடைமிளகாய் மற்றும் கொத்தமல்லியை தூவி,
மற்றொரு 5 நிமிடம் தீயை குறைத்து வேக வைத்து, பின்பு இறக்க வேண்டும். இதோ
தவா சிக்கன் தயாராகிவிட்டது. இதனை சாதம் மற்றும் ரொட்டியுடன் சாப்பிட்டால்
சூப்பராக இருக்கும்.
Post a Comment