"கிரவுண்ட்நட் கட்லி' -- சமையல் குறிப்புகள்,
" கிரவுண்ட்நட் கட்லி ' தேவையானவை: வேர்க்கடலை, சர்க்கரை தலா-ஒரு கப், தண்ணீர்-ஒரு கரண்டி, ஏலக்காய்த்தூள்- ஒரு டீஸ்பூன், நெய்-2 ...
தேவையானவை: வேர்க்கடலை, சர்க்கரை தலா-ஒரு கப், தண்ணீர்-ஒரு கரண்டி, ஏலக்காய்த்தூள்- ஒரு டீஸ்பூன், நெய்-2 டீஸ்பூன் (தேவைப்பட்டால் சில துளி எஸன்ஸ் சேர்க்கலாம்.)
செய்முறை: வேர்க்கடலையை வறுத்து தோலை எடுத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து கம்பிப்பதத்தில் பாகு காய்ச்சவும். வேர்க்கடலைப் பொடியை சிறிது சிறிதாகப் பாகில் சேர்த்துக் கிளறிக் கொண்டே வரவும். சிறிது நுரைத்து கொப்பளித்து வரும்போது ஏலக்காய்த்தூள் தூவி கிளறி இறக்கவும். ( விருப்பப் பட்டால் எஸன்ஸ் சேர்க்கலாம்) ஒரு தட்டில் நெய் தடவி கிளறிய கலவையைக் கொட்டி சமப்படுத்தவும். சிறிது நேரத்தில் கெட்டியாகி விடும். பிறகு, கத்தியில் டைமன் அல்லது சதுர துண்டுகள் போடவும். இதே பேல முந்திரி, பாதாம் பருப்பிலும் செய்யலாம்.
Post a Comment