கை, கால் அழகு பெற...ஹெல்த் ஸ்பெஷல்,
கை, கால் அழகு பெற... * அவசரமாக வெளியில் செல்ல வேண்டியிருக்கும் போது, நகத்தில் தீட்டிய நெய்ல் பாலீஷ் காயாமல் தொல்லை கொடுக்கிறா? கவலையை வ...

* அவசரமாக வெளியில் செல்ல வேண்டியிருக்கும் போது, நகத்தில் தீட்டிய நெய்ல் பாலீஷ் காயாமல் தொல்லை கொடுக்கிறா? கவலையை விடுங்க. ஜில்லுன்னு கொஞ்சம் ஐஸ்வாட்டர் எடுத்து, அதற்குள் நகங்களை சில நொடிகளுக்கு முக்கி எடுங்க. நெயில் பாலிஷ் அழியாமல் இருக்கும்.
* கை விரல்களில், பாதாம் ஆயில் மூலம் மசாஜ் செய்து வந்தால், விரல்களில் ஏற்படும் வெடிப்பு சரியாகி விடும்.
* பாதமெல்லாம் பளபளப்பாய் இருக்க, சிலருக்கு முட்டிகள் மட்டும் காய்ந்து கறுத்துப் போய் இருக்கும். இதைப் போக்க, அரை மூடி எலுமிச்சையின் மேல், பாலாடைத் தடவி, அதை காய்ந்த பகுதிகளில் அழுந்தத் தேயுங்கள். மூன்று நாட்களுக்கு ஒரு முறை என்று ஒரு மாதம் போல இப்படி செய்து வர, முட்டியும் மினுமினுக்கும்.
Post a Comment