கற்போம் யோகா!---ஆசனம்,
'யு ஜ்’ என்ற வடமொழிச் சொல்லில் இருந்துதான் 'யோகா’ என்ற சொல் பிறந்தது. 'யுஜ்’ என்றால் ...

கிருஷ்ணமாச்சார்யாவின் நேரடி சிஷ்யை இவர். யோகக் கலையை இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாட்டினருக்கும் உணரச் செய்த கிருஷ்ணமாச்சார்யாவின் மகன் தேசிகாச்சார்யாவின் மனைவி.
யோகா பயிற்சி நிலையங்கள் வீதிக்கு வீதி க்யூ கட்டும் நிலையில், எது சரியான யோகா என்பதை இதழ்தோறும் பேச இருக்கிறார் மேனகா தேசிக்காச்சார்...
'உடலையும் மனத்தையும் ஒருமுகப்படுத்துவது யோகாசனம். நோய்களைத் தீர்க்கும் சிகிச்சை முறையாகவும் யோகா பயனளிக்கிறது. உதாரணத்துக்கு ஆஸ்துமா. யோகாவினால் ஆஸ்துமாவை எப்படிக் குணப்படுத்த முடியும் என்பதை இந்த இதழில் பார்ப்போம்.
ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தாங்கள் மேற்கொள்ளும் சிகிச்சை முறைகளைத் தொடர்ந்துகொண்டே, கூடுதலாக யோகாவும் செய்து வந்தால், உடல் நலத்தில் விரைவான முன்னேற்றம் காணலாம்.
வயதானவர்களால், எளிதாக யோகா பயிற்சிகளைப் பின்பற்ற முடியாது. முக்கியமாக மூச்சை இழுத்து விடுவது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். அத்தகைய நோயாளிகள் தேர்ந்த யோகா ஆசிரியர்கள் சொல்லும் சில நுட்பமான மாற்றங்களைக் கருத்தில் எடுத்துக்கொண்டு அதன்படி ஆசனங்களைச் செய்ய வேண்டும்.
யோகக் கலையின் முக்கியத்துவமே மூச்சுப் பயிற்சியில்தான் அடங்கி இருக்கிறது. நம்முடைய சுவாசம் சீராகும்போது உடலின் இயக்கங்கள் சீராகும். இதனால், உடலின் அனைத்து உறுப்புகளும் வலிமை பெறும். மூச்சுப் பயிற்சி என்பது குறிப்பிட்ட கால அவகாசத்தில் மூச்சை உள்ளே இழுத்து, பின் வெளியே விடுவது. மூச்சை ஒரு நிமிடம் உள்ளே இழுத்தால், வெளியே விடும்போது கூடுதலாக இரண்டு நிமிடங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். யோகா ஆசிரியரிடம் முறையாகப் பிரணாயாமம் கற்றுக்கொண்டு செய்வதே நலம். ஆஸ்துமா நோயாளிகள் குறைந்தது தினம் 10 நிமிடமாவது மூச்சுப் பயிற்சி மேற்கொண்டால், ஆஸ்துமா நோய் கட்டுப்படும்.
ஆஸ்துமா நோயாளிகள் மேலும் சில விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இரவில் குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடக் கூடாது. குளிர்ச்சியான உணவு நுரையீரலின் சுவாசப் பாதையைச் சுருங்க வைக்கும். அதனால், மூக்கடைப்பு ஏற்படலாம்.
ஆஸ்துமா நோயாளிகள் வளர்ப்புப் பிராணிகளிடம் நெருங்கக் கூடாது. வீட்டில் தூசி அதிகம் இருத்தல், போர்வை தலையணையில் அழுக்கு இருத்தல் போன்றவையும் அடுப்புப் புகை, சிகரெட் புகை போன்றவையும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். மனச் சோர்வுகூட ஆஸ்துமாவுக்கு முக்கியக் காரணம்.
ஆஸ்துமா பிரச்னையால் அவதிப்படுபவர்கள் வீரபத்ராசனம் செய்யலாம். அதாவது, இடது காலை முன்வைத்து நேராக நிற்க வேண்டும். மூச்சை மெதுவாக உள் இழுத்தவாறு கைகளைத் தூக்கியபடி தரையில் உட்காருவது போல நினைத்துக் கொண்டு கால் முட்டியை முடிந்தவரை மடக்க வேண்டும். அதன் பிறகு மூச்சை வெளியே விட்டபடி கைகளைக் கீழே இறக்கியபடி, கால் முட்டியை நேராகப் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும். இப்படி 6 முறைகள் செய்வது பலன் தரும்.
ஆஸ்துமா இருப்பவர்கள் பொதுவாக கூன் போட்டுத்தான் உட்காருவார்கள். கூன் நிமிர்வதற்கும் நெஞ்சு விரிவதற்கும் ஆசனங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும். ஆஸ்துமா நோயாளிகள் த்விபாதபீடம் மற்றும் மஹாமுத்ரா ஆகிய இரண்டு ஆசனங்களைச் செய்யலாம். இவை உதாரணத்துக்காக மட்டுமே சொல்லப்பட்டவை. இதனுடன் தொடர்புடைய மேலும் சில ஆசனங்களைத் தகுந்த ஆசிரியரிடம் முறையாகப் பயின்று தினமும் செய்துவந்தால் ஆஸ்துமாவில் இருந்து விடுதலை பெறலாம்.''
மாடல்: மானஸி
Post a Comment