வாருங்கள்... வழிகாட்டுகிறோம் ! பிஸினஸ் கேள்வி - பதில்

சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் கேள்விகளாக கேட்க... அதற்கு தெ...


சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் கேள்விகளாக கேட்க... அதற்கு தெளிவான பதில்களைப் பெற்றுத் தரும் பகுதி இது. இங்கே உங்கள் கேள்விகளுக்கு பெரியார் தொழில் நுட்ப வணிக காப்பகத்தின் திட்ட இயக்குநர் ராமசாமி தேசாய் பதிலளிக்கிறார். ''தற்போது 42 வயதாகும் நான், கிராமப்புறப் பின்னணியில் வளர்ந்தவள். சிறுவயதில் விவசாயத்தில் ஈடுபட்டவள். இன்று நகரத்தில் இருந்தாலும், விவசாய நிலம் வாங்கி, விவசாயம் செய்ய விரும்புகிறேன். பெண்கள் அல்லது ஆண்கள் விவசாய நிலம் வாங்கி, பயிர்த்தொழில் செய்வதற்கு வங்கிகளில் கடன் கொடுக்கிறார்களா?''
- கவிதாபாரதி, சென்னை
''சாதாரணமாக, நிலம் வாங்குவதற்கு வங்கிகளில் கடன் பெறுவது சற்றுக் கடினமே. வியாபார நோக்கில் இல்லாமல், சொந்தமாக பயிர் செய்ய நினைக்கும் சிறு, குறு விவசாயிகள், சொந்தத்தில் நிலம் வாங்கி பயிர் செய்வதற்கு கடன் உள்ளிட்ட உதவிகளை வங்கிகள் செய்து கொண்டிருக்கின்றன. இந்த விஷயத்தில், பொதுமக்களுக்கு உதவி வருகிறது 'தேசிய விவசாய கிராமப்புற மேம்பாட்டு வங்கி'யான 'நபார்டு' (NABARD-National Bank for Agriculture and Rural Development).இதற்காகவே, 'விவசாயிகள் நிலம் வாங்கும் திட்டம்’ என்கிற திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது நபார்டு. இதன் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகள் நிலம் வாங்க உதவி செய்கிறார்கள். 2 முதல் 10 லட்ச ரூபாய் வரை கடன் பெற சாத்தியம் உண்டு.
நபார்டு வங்கியானது, நேரடியாக கடன் தருவதில்லை. நாடு முழுக்க ஆங்காங்கே இருக்கும் வங்கிகள் மூலம் தான் இந்தக் கடனை வழங்கிவருகின்றது. இந்தக் கடனைப் பெற விரும்பும் நபர், சிறு அல்லது குறு விவசாயி என்கிற வரையறைக்குள் இருக்க வேண்டும் (2.5 ஏக்கருக்கு கீழே நிலம் வைத்திருப்பவர்கள்தான் சிறு, குறு விவசாயிகள் என்று வரையறுக்கப்படுகின்றனர்), வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவராக இருக்க வேண்டும் என பல நிபந்தனைகள் உள்ளன. நிலமற்ற விவசாயிக்கும் இந்தக் கடன் வழங்கப்படும்.
தாழ்த்தப்பட்ட/மலைவாழ் இனத்தைச் சேர்ந்தவராக இருந்தால், 'தாட்கோ' (TAHDCO - Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation Limited) மூலமாக நிலம் வாங்க சிறப்புத் திட்டத்தையும் நடைமுறையில் வைத்திருக்கிறது நபார்டு.
இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெற, உங்களின் வருட வருமானம் ஒரு லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும்; வயது 18 - 55 வரை இருக்கவேண்டும்; உங்கள் குடும்பத்தில் யாரும் அரசாங்கத்திடமிருந்து வேறு எந்த வகையிலும் மானி யம் பெற்றவராக இருக்கக் கூடாது; வேறு இனத்தவரிடம் நிலத்தை வாங்க வேண்டும்; 5 ஆண்டுகள் வரையில் நிலத்தை வேறு பெயருக்கு மாற்றவோ, விற்கவோ கூடாது; நிலத்தை வாங்கியதும் விவசாயத்தைத் தொடங்க வேண்டும்; நிலத்தில் விவசாயம் மட்டுமே செய்ய வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகள் இதற்கு உண்டு. இந்த வகையில், நிலத்துக்கு அரசு நிர்ணயித்துள்ள வழி காட்டி மதிப்பைப் பொறுத்தே கடன் தொகை கிடைக்கும்; அதிகபட்சமாக 7.5 லட்ச ரூபாய் வரை கடன் பெறலாம். இதற்கு 30% மானியம் உண்டு. அதிகபட்சமாக 2.25 லட்ச ரூபாய் வரை மானியம் கிடைக்கும். மேற்சொன்ன நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிலம் வாங்க நினைக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்கள், 'தாட்கோ' நிறுவனத்துக்கு 'ஆன் லைன்' மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அந்த நிறுவனம், விண்ணப்பத்தை பரிசீலித்து, கடன் தரச்சொல்லி, வங்கிகளுக்கு பரிந்துரை செய்யும். அதனடிப்படையில், வங்கிகளிடமிருந்து கடனைப் பெறலாம்.
உங்களிடம் சொந்த நிலம் இருக்கும்பட்சத்தில், குறுகியகால பயிர்க் கடன் வழங்கப்படுகிறது. இது, விளைபொருட்களுக்கு தகுந்தபடி மாறுபடும். நெல், கரும்பு, வாழை என ஒரு ஏக்கருக்கு இவ்வளவு ரூபாய் என்று வங்கிகள் நிர்ணயம் செய்து வைத்துள்ளன. அதன் அடிப்படையில் இந்தப் பயிர்க்கடன் வழங்கப்படும். நிலத்தின் மதிப்பில் 80% முதல் 90% வரை, நிலத்தை மேம்படுத்துவதற்காகவும் கடன் வழங்கப்படுகிறது. கிணறு வெட்டுதல், போர் அமைத்தல், சொட்டுநீர் பாசன வசதி செய்தல் உள்ளிட்டவற்றுக்கு இந்தக் கடன் தொகையைப் பயன்படுத்தலாம்.
நாட்டின் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களில் சுமார் 30 சதவிகித பொருட்கள், போதுமான கிடங்கு, சந்தை, பதப்படுத்தல் போன்றவை இல்லாமையால், வீணாகி குப்பைக்குச் செல்கின்றன. இதற்காகவே உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கு தனி அமைச் சகம் அமைக்கப்பட்டு, அத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு 25% வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்தச் செய்தியையும் மனதில் குறித்துக் கொள்ளுங்கள்!''

Related

உபயோகமான தகவல்கள் 4125827387925978167

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item