மடிக்கணினிக்கு மடியைக் கொடுக்காதீர்! -- ஹெல்த் ஸ்பெஷல்,

ம டிக்கணினிக்கும் மடியில் மழலை தவழ்வதற்கும் தொடர்பு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? இதோ இந்தச் ச...


டிக்கணினிக்கும் மடியில் மழலை தவழ்வதற்கும் தொடர்பு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? இதோ இந்தச் சம்பவத்தைப் பாருங்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்காட் ரீட் - லாரா தம்பதிக்குக் கருத்தரிப்பில் பிரச்சனைகள் உண்டாகி இருக்கிறது. இது தொடர்பாக டாக்டரிடம் அவர்கள் ஆலோசனை செய்தபோது, 'உங்கள் கணவர் அதிகம் மடிக்கணினி பயன்படுத்துவாரா?’ என்று லாராவை டாக்டர்கள் கேட்டுள்ளார்கள். அவர் 'ஆமாம். அதற்கென்ன?’ என்று அலட்சியமாகக் கேட்க, 'இனி, மடிக்கணியை மடி மேல் வைத்து அவர் பயன்படுத்தக் கூடாது!’ என்று மருத்துவர்கள் சொல்ல அதிர்ந்துபோனார் அவர். ஆனால், அடுத்த மூன்றே மாதங்களில் லாரா கருத்தரித்தார். இன்று அவர்களுக்கு மகன் பிறந்து பத்து மாதங்கள் ஆகின்றன.
மடிக்கணினிக்கும் மலட்டுத்தன்மைக்கும் தொடர்பு இருக்கும் என்பதை தன் மனைவி கருவுறும்வரை ஸ்காட் முழுமையாக நம்பவில்லை. ''லேப் டாப்பை நீண்ட நேரம் மடியில் வைத்துப் பயன்படுத்துவதால் இப்படி ஒரு பாதிப்பு வரும் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவே இல்லை. டாக்டர் சொன்ன பிறகுதான் மடிக்கணினி விதைப்பையை வெப்பமாக்கி விந்தணுக்களைப் பலவீனப்படுத்தும் என்று அறிந்தேன்' என்கிறார்.
இது ஒரு பக்கமிருக்க, 'ஃபெர்டிலிட்டி அன்ட் ஸ்டெர்லிட்டி’ என்ற பன்னாட்டு நல்வாழ்வு நிறுவனம் ஒன்று அண்மையில் நடத்திய ஆய்வில் 29 இளைஞர்களைத் தேர்வுசெய்து அவர்களை நீண்ட நேரம் மடிமேல் மடிக்கணினியைப் பயன்படுத்தச் செய்தனர். அவர்களின் விதைப்பையில் நுண்ணிய சென்சார்களைப் பொருத்தி வெப்ப மாறுதலைக் கண்டறிந்தார்கள். முடிவில் மடிக்கணினியை நீண்ட நேரம் மடிமேல் வைத்துப் பயன்படுத்துவது உஷ்ணத்தை உண்டாக்கி விந்தணுக்களைச் சிதைக்கிறது என்பது தெரியவந்தது. இதில் ஆச்சர்யப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் மடிக்கணினியின் சூட்டைக் குறைக்கப் பயன்படுத்தும் 'கூலர் பேட்கள்(Cooler Pad)’ எவ்விதத்திலும் விந்தணுக்கள் பாதிப்படைவதைத் தடுக்கவில்லை என்பதுதான்.  'ஸ்க்ரோட்டல் ஹைப்பர்தெர்மியா(Scrotal Hyperthermia)  என்னும் இந்தப் பாதிப்புக்கு அவ்வளவு அஞ்சத் தேவை இல்லை!’ என்று மருத்துவர்கள் கூறுவது கொஞ்சம் ஆறுதலான செய்தியாக உள்ளது. மடிக்கணியை மடியில் வைத்து பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து நிரந்தரமாகக் கருத்தரிக்கும் வாய்ப்பை அழிக்காது என்கின்றனர். 
இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மற்றும் குழந்தைப் பேறின்மை மருத்துவர் சரத் பட்டினாவிடம் பேசினோம்.
'பொதுவாகவே  விதைப்பை குளிர்காலங்களில் சுருங்கியும் வெயில் காலங்களில் சற்றுத் தளர்வான நிலையிலும் இருந்து, வெப்பநிலையைச் சமன் செய்யும் ஆற்றல் பெற்றவை. வெப்பநிலை அதிகமானால் அந்த உஷ்ணத்தைத் தாங்காமல் விந்தணுக்களில்  டிஎன்ஏ ஃப்ராக்மென்டேஷன் (DNA Fragmentation) ஏற்படும் அளவு உயர்கிறது. நீண்ட நேரம் மடிக்கணினியை மடியில் வைத்துப் பயன்படுத்துவோர் மட்டுமின்றி, லாரி ஓட்டுநர்கள், அடுப்பின் அருகில் எந்நேரமும் இருக்கும் சமையல் காரர்கள், அனல் மிகுந்த இடங்களில் பணிபுரிபவர்கள் அனைவருக்குமே இந்தப் பிரச்னை வரலாம்.  அதிக நேரம் மடிக்கணினியைப் பயன்படுத்தும் பெண்களுக்குத் தொடைப்பகுதியில் நிரந்தரமாகத் தோல் கருத்துப் போகலாம். தோல் தொடர்பான பிரச்னைகள் வரவும் வாய்ப்புகள் உண்டு. மேற்குறிப்பிட்டுள்ள ஆராய்ச்சியில் கூலர் பேட்களோ, மடி மீது தலையணை வைத்து அதன் மேல் மடிக்கணினியை இயக்குவதோ பயன் தராது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மடிக்கணினியை மேசை மீது வைத்து இயக்குவதே சாலச் சிறந்த முறையாகும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மடிக்கணினியை மடி மேல் வைத்துதான் பயன்படுத்த வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டால், கால்களை நன்கு அகட்டி வைத்துக்கொண்டு மடிக்கணினியைப் பயன்படுத்தினால் பாதிப்பு குறையும்' என்றார்.
முடிந்தவரை மடிக்கணினியை மடியில் வைத்துப் பயன்படுத்தாமல் மேஜையின் மீது வைத்துப் பயன்படுத்தி, சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். நிறையத் தண்ணீர் குடியுங்கள். போதுமான உடற்பயிற்சி செய்யுங்கள். சந்தேகம் இல்லை. ஆரோக்கியமான விந்தும் ஆரோக்கியமான சந்ததியும் சாத்தியமாகும்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 797770003400702482

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item