சுஜி அப்பம்---சமையல் குறிப்புகள்,
என்னென்ன தேவை? மைதா - ஒன்றே கால் கப், பம்பாய் ரவை - 1 கப், சர்க்கரை - ஒன்றே கால் கப், பொடியாக நறுக்கிய முந்திரி - சிறிது, தண்ணீர் - இ...
https://pettagum.blogspot.com/2012/08/blog-post_6212.html
என்னென்ன தேவை?
மைதா - ஒன்றே கால் கப்,
பம்பாய் ரவை - 1 கப்,
சர்க்கரை - ஒன்றே கால் கப்,
பொடியாக நறுக்கிய முந்திரி - சிறிது,
தண்ணீர் - இரண்டரை கப்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - பொரிப்பதற்கு.
எப்படிச் செய்வது?
மைதாவுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, போதிய அளவு தண்ணீர் விட்டு, நெகிழ்வாக மாவு பிசைந்து, அரை மணி நேரம் மூடி வைக்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் ரவையை வறுத்து வைத்துக் கொள்ளவும். சர்க்கரையையும் தண்ணீரையும் சேர்த்துக் கரையும் வரை சூடாக்கவும். அத்துடன் நெய் சேர்த்து, கலவை கொதிக்கும்போது, தீயைக் குறைத்து, வறுத்தெடுத்த ரவையை, சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலந்து கிளறவும்.
அல்வா பதத்துக்கு கெட்டியாக வரும் போது, நெய் சேர்த்து, இறக்கி, வறுத்த முந்திரி சேர்த்துக் கலந்து ஆறவிடவும். இந்தக் கலவையை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும். சிறிது மைதா மாவை எடுத்து, ரவை உருண்டையை வைத்து, மூடி, உருண்டையாக்கவும். எண்ணெய் தடவிய வாழை இலை அல்லது பாலிதீன் ஷீட்டில், ஸ்டஃப் செய்த உருண்டையை வைத்து, சிறிய சைஸில், சிறிது கனமாகத் தட்டிக் கொள்ளவும்.
ஒவ்வொரு அப்பத்தையும், நடுத்தரத் தீயில், சூடான எண்ணெயில் இரண்டு பக்கங்களும் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். எண்ணெயை வடியவிட்டு, ஒரு அகலத்தட்டில் தனித்தனியே வைக்கவும். ஆறியதும், டப்பாவில் எடுத்து வைத்து, அதே நாள் உபயோகித்து விடவும்.

Post a Comment