முருங்கைப்பூ முட்டை சாதம் -நிறைமாத கர்ப்பிணி பெண்களுக்கு--சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்கள்: முருங்கைப்பூ - ஒரு கைபிடியளவு கொழுந்து முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடியளவு நறுக்கிய நாட்டு வெங்காயம் - 2 மேஜைக்கரண்டி ...
https://pettagum.blogspot.com/2012/08/blog-post_4603.html
தேவையான பொருட்கள்:
முருங்கைப்பூ - ஒரு கைபிடியளவு
கொழுந்து முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடியளவு
நறுக்கிய நாட்டு வெங்காயம் - 2 மேஜைக்கரண்டி
நறுக்கிய நாட்டு பூண்டு - 2 மேஜைக்கரண்டி
நாட்டுக் கோழி முட்டை - 1
முழு சீரகம் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
வேகவைத்த சாதம் - பாதி கோப்பை
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு.
தேவையான பொருட்களை தயார் செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.
ஒரு வாண்லியில் நல்லெண்ணேய் விட்டு சிறிது காய்ந்தவுடன் சீரகம் போட்டு பொரியவும் , நறுக்கிய நாட்டு பூண்டு,நறுக்கிய நாட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
மிதமான நெருப்பில் நன்கு வதங்கட்டும் சிவற வேண்டாம்.
அத்துடன் சுத்தம் செய்து கழுவிய முருங்கைப்பூ,கொழுந்து முருங்கைக்கீரை சேர்த்து நன்கு வதக்கவும்.
நாட்டு முட்டை ஒன்றை தேவைக்கு மிளகு, உப்பு சேர்த்து அடித்து கொள்ளவும்.
க்லந்த முட்டையை சேர்க்கவும். குறைவான தணலில் வேக விடவும்.
வெந்து வரும் பொழுது பிரட்டி விடவும்.
வடித்த அரைக்கோப்பை சாதத்தை சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்த்து பிரட்டிகொள்ளவும்.
சுவையான சத்தான முருங்கைப்பூ முட்டை சாதம் ரெடி.அப்படியே சூடாக எடுத்து பரிமாறவும்.இது ஒரு நபருக்கான அளவு.சாப்பிட்டு விட்டு வெது வெதுப்பான நீர் சாப்பிடலாம்.
முருங்கைப்பூ கிடைத்தால் பேறுகாலம் நெருங்கி வரும் நாட்களில் கர்ப்பிணி பெண்களுக்கு குறைந்தது மூன்று நாட்களாவது இந்த சத்தான் சாதத்தை செய்து கொடுக்கவும். அண்ட வாயுவை ஒதுக்கி வலி எடுத்து சுகப் பிரசவம் ஆகும்.
வலி லேசாக இருக்கும் பொழுது தெம்புக்கு இந்த சாதம் செய்து கொடுத்தோ அல்லது பூண்டு கஞ்சி வைத்து கொடுத்தோ மருத்துவமனைக்கு பேறுகாலத்திற்கு அழைத்து செல்லலாம்.வலி வந்த பின்பு ஒன்றும் சாப்பிட முடியாது. மருத்துவமனையில் தெம்பிற்கு குளுக்கோஸ் (ட்ரிப்) ஏத்துவாங்க.சாப்பிட ஏதும் தரமாட்டாங்க.முக்கி சுகப் பிரசவம் ஆக தெம்பு வேண்டாமா? இது மாதிரி மருத்துவ குணமுள்ள உணவை கொடுத்து அழைத்து செல்வது நல்லது.இதுவென்று இல்லை மற்ற உணவுகள் கூட ஏதாவது கொடுத்து அழைத்து செல்லவும்.இரண்டு இட்லியாவது கொடுங்க.வெறும் வயிறாக மட்டும் பேறுகாலத்திற்கு கூட்டிட்டு போகாதீங்க.
கர்ப்பிணி பெண்கள் மட்டுமல்ல மற்றவர்களும் இந்த சத்தான சாதம் செய்து ருசித்திடலாம். இது எங்க வீட்டு பாட்டி வைத்தியம்.
சைவப் பிரியர்கள் முட்டை சேர்க்காமல் செய்து சாப்பிடலாம்.
2 comments
மிக்க நன்றிங்க...
நண்பரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்! A.S. முஹம்மது அலி
Post a Comment