அப்பளத்தில் பணமும் ருசிக்கும்---வீட்டிலிருந்தே சம்பாதிக்க
வருடத்தின் எல்லா நாட்களிலும் தேவையாக இருக்கிற பொருள் அப்பளம்! அவசர சமையலுக்கு கை கொடுப்பதிலாகட்டும், விருந்து சாப்பாட்டை முழுமையாக்குவதில...
https://pettagum.blogspot.com/2012/08/blog-post_7155.html
வருடத்தின் எல்லா நாட்களிலும் தேவையாக இருக்கிற பொருள் அப்பளம்! அவசர சமையலுக்கு கை கொடுப்பதிலாகட்டும், விருந்து சாப்பாட்டை முழுமையாக்குவதில் ஆகட்டும்... அப்பளத்தின் பங்கு மகத்தானது.
‘‘இப்ப வர்ற அப்பளமெல்லாம் சுவையா இருக்கிறதில்லை. பரந்து பொரியறதில்லை. வெள்ளையா இருக்கிறதில்லை...’’ - இப்படி ஏகப்பட்ட ‘இல்லை’ புகார்களைக் கேட்கிறோம் சமீபகாலமாக! அப்பளம் தயாராகிற சூழலைப் பற்றியும் அவ்வப்போது சர்ச்சைகள் கிளம்புவதுண்டு. ‘‘கொஞ்சம் மெனக்கெட்டா நாமளே சுகாதாரமான முறையில வீட்லயே தயாரிக்கலாம். செலவும் குறைவு. ருசியும் அதிகம்’’.
‘அப்பளம், வடாம் போடறதெல்லாம் அத்தை, பாட்டி காலத்து வேலையாச்சே’ என நினைக்கிறவர்களும், இதை சுலபமாக செய்யலாம்
என்னென்ன தேவை
‘‘அரிசி, ஜவ்வரிசி, உப்பு, மிளகு, சீரகம் உள்ளிட்ட மளிகைச் சாமான்கள், அச்சு, சப்பாத்திக் கல், குழவி, கொஞ்சம் பாத்திரங்கள்...
எத்தனை வெரைட்டி என்ன ஸ்பெஷல்
‘‘அரிசி அப்பளம், மரவள்ளிக் கிழங்கு அப்பளம், டபுள் அப்பளம், பப்படம், மிளகு அப்பளம்னு அப்பளத்துலயும், ஓமப்பொடி, ரிப்பன், தட்டை, ஜவ்வரிசி, வெங்காயம், குழம்புன்னு வடகத்துலயும் ஏகப்பட்ட வெரைட்டி இருக்கு. கடைகள்ல வாங்கறது ஒரே மாதிரியான உப்பு, காரத்தோடதான் கிடைக்கும். ஆனா வீடுகள்ல பண்ணும்போது, ஆர்டர் கொடுக்கறவங்களுக்கு எவ்வளவு உப்பு, காரம் தேவையோ அப்படிச் செய்யலாம். கடை அப்பளங்கள்ல சோடா உப்பு சேர்ப்பாங்க. வீட்டுத் தயாரிப்புல அது கிடையாது. தேவைக்கேத்தபடி தயாரிக்கிறதால, பழைய ஸ்டாக்கை கஸ்டமர் தலையில கட்ட வேண்டிய அவசியமிருக்காது.’’
விற்பனை வாய்ப்பு லாபம்
‘‘வாய்வழி விளம்பரமே போதும். அக்கம்பக்கத்து வீடுகள், தெரிஞ்ச ஆபீஸ், ஸ்கூல் மாதிரி இடங்கள்ல தொடர்ந்து ஆர்டர் எடுத்தாலே மாசம் முழுக்க விற்பனை இருக்கும். கடைகளுக்குக் கொடுக்க வேண்டிய அவசியமே இருக்காது. ஒரு நாளைக்கு ஒருத்தர் மட்டுமே 10 கிலோ வரைக்கும் செய்யலாம். 100 அப்பளம் போடலாம். 30 சதவீத லாபம் நிச்சயம்.’’

Post a Comment