வெங்காய பகோடா--சமையல் குறிப்புகள்,
வெங்காய பகோடா தேவையானவை: கடலை மாவு 1 கப் அரிசி மாவு 1/2 கப் வெங்காயம் 2 மிளகாய் பொடி 1 தேக்கரண்டி பச்சைமிளகாய் 2 இஞ்சி 1 துண்டு பெ...

வெங்காய பகோடா
தேவையானவை:
கடலை மாவு 1 கப்
அரிசி மாவு 1/2 கப்
வெங்காயம் 2
மிளகாய் பொடி 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
பெருங்காயத்தூள் 1 சிட்டிகை
கொத்தமல்லி,கறிவேப்பிலை சிறிதளவு
ஆப்ப சோடா 1 சிட்டிகை
உப்பு,எண்ணெய் தேவையானது
------------------
செய்முறை:
வெங்காயத்தை நீட்ட வாக்கில் மெல்லிய slice களாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கடலைமாவு அரிசி மாவு,பொடியாக நறுக்கிய வெங்காயம்,இஞ்சி,பச்சைமிளகாய்,கொத்தமல்லித்தழை,கறிவேப்பிலை ஆப்ப சோடா,பெருங்காயத்தூள்,தேவையான உப்பு,காய வைத்த எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிசையவேண்டும்.
அடுப்பில் கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் பிசைந்துவைத்துள்ள மாவை பக்கோடாவுக்கு போடுவதுபோல் கிள்ளி போட்டு சிவந்ததும் எடுக்கவேண்டும்.
மொறு மொறு வெங்காய பகோடா ரெடி
Post a Comment