உங்கள் பாதங்களை பராமரிக்க எளிய வழிகள்--ஹெல்த் ஸ்பெஷல்,

நாம் அழகாக இருக்க வேண்டும் என்று முக அழகிற்கு தனி கவனம் செலுத்துகிறோம். ஆனால் நாம் நம் பாதங்களை மறந்து விடுகிறோம்.   கால்களுக்கு அதிக வ...


நாம் அழகாக இருக்க வேண்டும் என்று முக அழகிற்கு தனி கவனம் செலுத்துகிறோம். ஆனால் நாம் நம் பாதங்களை மறந்து விடுகிறோம்.   கால்களுக்கு அதிக வேலை கொடுப்பதாலும் அதை சீராக பராமரிக்கவில்லை என்றாலும் அங்குள்ள தோல் பாகம் வறண்டு தடித்து வெடித்து விடுகின்றன. இதைத்தடுக்க நம் வீட்டிலேயே தடுப்பு முறைகளைக் கையாளலாம்.  
• தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு சுடுதண்ணீரில், உப்பு, சிறிதளவு எலுமிச்சைச்சாறு,  கலந்து பாதங்களை அதில் 10 முதல் 15  நிமிடம் வைத்து பிறகு பிரஷ்சினால் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு பாதங்களை மெல்லிய டவலால் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம். இதை வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம்.  
• வெடிப்பு பாதம் உள்ளவர்கள் வீட்டில் உள்ள மருதாணி தூள் அல்லது மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும். 
• பாதவிரல்கள் அழுக்காக இருந்தால் எலுமிச்சை பழச்சாறு தடவி வரலாம். 
• நம் நகத்தில் டார்க் கலர் பாலிஷ் போடுவதால் நம் நகங்கள் மஞ்சளாக மாறி விடும். அதனால் பாலிஷ் போடுவதற்கு முன் நெயில் பேஸ் போட்டு பாலிஷ் போட வேண்டும். இப்படி செய்து வந்தால் நம் நகங்களை அழகாக பராமரித்துக் கொள்ளலாம்.
• பாதம் வீங்கி வலி இருந்தால் ஒரு முழு செங்கல்லை அடுப்பில் சூடு செய்து அதன் மேல் எருக்கு இலைகளை வைத்து இதமான சூட்டில் பாதங்களை வைத்து எடுக்க வேண்டும். இதை தொடர்ந்து 2  அல்லது 3  நிமிடத்திற்கு செய்து வந்தால் பாதத்தின் வலி நீங்கும்.  
• கல் உப்பு, இடித்த மிளகு இரண்டையும் சிறு மூட்டைகளாகக்கட்டி சூடாக்க வேண்டும். பாதத்தில் எங்கு வலி இருக்கிறதோ அங்கு வைத்து எடுக்க வேண்டும். இதன்படி செய்து வந்தால் கால்வலி நீங்கும்.  
• பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.  
• கால் விரல்களில் நகச்சுத்தி வந்தால் இதை சரியாக்க எலுமிச்சைப்பழத்துடன், மஞ்சள் தேய்த்து பத்துப்போட்டு வந்தால் நகச்சுத்தி போய் விடும்.
• கால் விரல் நகத்தின் ஓரத்தில் மண் சேர்ந்து விட்டால் நல்லெண்ணையை ஒரு விளக்கில் ஏற்றி வைத்து ஒரு தீக்குச்சியை அந்த நல்லெண்ணெயில் வைத்து அந்த விளக்கின் திரியில் சூடு செய்து அந்த விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும். 1  அல்லது 2 முறை செய்தபின் அதில் உள்ள அழுக்கு எல்லாம் வந்து விடும்.
• நகத்தின் ஓரங்களில் பின் வைத்து சுத்தம் செய்ய கூடாது.இவ்வாறு செய்து வந்தால் பாதத்தின் அழகு குறையும். இது போன்ற பிரச்சினைகளை வராமல் தடுக்க பாதங்களை சரியாக பராமரிக்க வேண்டும்.

Related

வெள்ளைப்படுதல், ரத்தப்போக்கு---இயற்கை மருத்துவம

இயற்கை மருத்துவம வெள்ளைப்படுதல், ரத்தப்போக்கு 1. தினமும் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நீங்கும். கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது. 2. பப்பாளிக் காயை இடித்து சாறு ...

நன்றி சொல்ல வேண்டும் உங்கள் கண்களுக்கு….ஹெல்த் ஸ்பெஷல்

அதிகமாக வேலை செய்த பின், கண்ணில் அயர்ச்சி ஏற்பட்டாலோ, வலி ஏற்பட்டாலோ, கண்டிப்பாக வேலையை நிறுத்தி விட்டு, கண்ணுக்கு, ஓய்வு கொடுக்க வேண்டும். கண் கூசும் வெளிச்சத்திலும், மங்கலான வெளிச்சத்திலும், ப...

எளிய அழகுக் குறிப்புகள்--ஹெல்த் ஸ்பெஷல்

எளிய அழகுக் குறிப்புகள் சந்தனம், முல்தானிமட்டி க...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Nov 27, 2024 11:28:19 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,378

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item