மிளகாய் சட்னி--சட்னிகள்,
இட்லி தோசைக்கு சுள்ளுன்னு ஒரு சைடு டிஷ். தேவையான பொருட்கள்: அரைக்க: பெரிய வெங்காயம் - 2 ( சின்ன வெங்காயம் கிடைத்தால் மிக்க நன்று. சட்னி ...
தேவையான பொருட்கள்:
அரைக்க:
பெரிய வெங்காயம் - 2 ( சின்ன வெங்காயம் கிடைத்தால் மிக்க நன்று. சட்னி சுவை கூடும்)
தக்காளி - 2
பூண்டு - 4 பல்
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
வரமிளகாய் - 8
உப்பு
தாளிக்க:
நல்லெண்ணெய் - 6 ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை - கொஞ்சம்
மஞ்சள் தூள் , பெருங்காயம் - சிட்டிகை
செய்முறை:
- அரைக்க கொடுத்திருக்கும் பொருட்களை மிக்ஸில் இட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்திருக்கும் பொருட்களை சேர்க்கவும் (என் கணவருக்கு கடுகு பிடிக்காது. ஸோ நான் கடுகு சேர்க்கவில்லை). அரைத்த விழுதையும் இத்துடன் சேர்த்து வதக்கவும்.
- எண்ணெய் தனியாக, சட்னி தனியாக பிரியும் வரை மிதமான சூட்டில் சட்னி கொதிக்க வேண்டும்.
Post a Comment