சப்பாத்தி - சில குறிப்புக்கள்--வீட்டுக்குறிப்புக்கள்,
1. முழு கோதுமையை (சம்பா) அரைத்து சலிக்கப் படாத மாவே உடலுக்கு நல்லது. 2. மைதா கலந்த மாவை முற்றிலும் தவிர்க்கவும். 3. எவ்வளவு த...

2. மைதா கலந்த மாவை முற்றிலும் தவிர்க்கவும்.
3. எவ்வளவு தண்ணீர் விடுகிறோம் என்பது சப்பாத்தியின் மிருதுத்தன்மையை நிர்ணயிக்கிறது. அதிக தண்ணீர் விட்டால் மாவு தளர்ந்து தடித் தடியான சப்பாத்தி ஆகிவிடும். அதே போல, ரொம்பவும் இறுக்கமாக பிசைந்திருந்தால் இட முடியாமல் கஷ்டப் படும், மேலும் சப்பாத்தி மொருமொருவென்றாகிவிடும்.
4. பிசைந்த மாவை குறைந்தது பதினைந்து நிமிஷம் ஊற விடுங்கள். உருண்டைகள் பிரிக்கும் முன், மாவை சிறிது refined oil விட்டுப் பிசைத்து கொள்ளுங்கள். நல்லெண்ணெய் விட்டால் (கோதுமையும் நல்லெண்ணையும் சேர்ந்து )அஜீரணம் உண்டாகி நெஞ்செரிச்சல் வரும்.
5. ஒரு அளவுக் கரண்டி / கப் வைத்துக் கொண்டு நான்கு சப்பாத்திக்கு இவ்வளவு மாவு என்று வைத்துக் கொண்டால், மாவு மிஞ்சாமல் இருக்கும். மிச்சம் வைத்துஉபயோகிப்பது அத்தனை சுவையாக இருப்பதில்லை.
6. சப்பாத்திகள் மென்மையாக இருக்க மாவை வெது வெதுவெதுவென்றிருக்கும் வென்னீரில் பிசையவும்.
7. சப்பாத்தி சாப்பிடப் பிடிக்காத குழந்தைகளுக்கு சப்பாத்தி செய்து அதன் மீது சர்க்கரை, ஏலக்காய் கலந்த தேங்காய் பாலை ஊற்றி சிறிது நேரம் ஊறவைத்து பின்னர் கொடுத்துப் பாருங்கள்.
8. எப்படி பிசைந்தாலும் சப்பாத்தி இறுக்கமாக இருக்கிறதா, சப்பாத்தி மாவுடன் பாதிவாழைப்பழத்தை சேர்த்து பிசைந்து பாருங்கள்.
9. குழந்தைகளுக்கு தயாரிக்கும் சப்பாத்தியை மூடிப் போட்டு மூடி வைத்து வேக வைத்தால் பூரி போல் உப்பி வரும். மிருதுவாகவும் இருக்கும்.
10. பூரிக்கு மாவு பிசையும்போது மாவுடன் சிறிது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பூரி வெகு நேரம் மொரு மொருப்பாக இருக்கும்.
11. பூரி, சப்பாத்திக்கு மாவுப் பிசையும்போது அதனுடன் இரண்டு கைப்பிடி அளவு கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி நிறமாகவும், மணமாகவும் இருக்கும்.
12. சப்பாத்தி மாவை முன் தினமே பிசைந்து வைத்தாலோ அல்லது கொஞ்சம் மீதமிருந்தாலோ, மாவின் மீது எண்ணெய் தடவி எடுத்து வையுங்கள். கருப்பாக காய்ந்து போகாது.
13. சப்பாத்தி செய்யும் போது கல் சூடானதும் ஒரு முறை எண்ணெய் விடாமல் இருபுறமும் போட்டு எடுத்து பின்னர் எண்ணெய் ஊற்றி சப்பாத்தி செய்தால் மெத்தென வரும்.
14. சப்பாத்தி மாவுடன் வெண்ணெய் சேர்த்து பிசைந்தால் வடநாட்டுக்காரர்கள் செய்யும் சப்பாத்தியின் அதே சுவை கிட்டும்.
15. சப்பாத்தி இடும் போது (திரட்டுவது) மாவை தொட்டு சப்பாத்தி இடும்போது, உருண்டைக்குள் சிறிது எண்ணெய் தடவி இட்டால் சப்பாத்தி வேகும்போது அதிக எண்ணெய் ஊற்றத் தேவையில்லை.
16. சப்பாத்தியை நன்கு பேப்பர் போல் இட்டு அதன் மேல் எண்ணெய் உற்றி அதனை நான்காக மூடி மீண்டும் ஒரு முறை இட்டு எடுத்து கல்லில் போட்டால் உப்பிக் கொண்டுவரும்.
17. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிது பாலையும் ஊற்றினால் சுவை அதிகரிக்கும்.
18. கீரை வெந்ததும் மசித்து, எலுமிச்சம் பழம் பிழிந்தால் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்.
19. முடிந்த வரை எண்ணையில்லாமல் சப்பாத்தி செய்து பழகிக் கொள்ளவும். அப்படியும் மீறினால், சூடாகத் திருப்பி எடுக்கும் போது, தவாவிலிருந்து எடுத்ததும் ஒரு சொட்டு நெய் விட்டு அதன் மேலே இன்னொரு சப்பாத்தியை போட்டால், சுக்கா சப்பாத்தியே சுவையாக இருக்கும்.
20. மாவு பிசையும் போது பால் / தயிர் அரை கப் விட்டுப் பிசைந்தால் மெத்தென்ற சப்பாத்தி மிகவும் அருமையாக இருக்கும்.
சப்பாத்தி மீந்துவிட்டால் அதை ஃப்ரிஜில் வைத்திருந்து அடுத்தநாள் சிறு சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் தூளாகிவிடும். பின் வாணலியில் எண்ணெய் விட்டு பொடியாய் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, கறி வேப்பிலை சேர்த்து வதக்கி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், துளி உப்பு சேர்த்து பின் தூளாக்கிய சப்பாத்தியும் சேர்த்து நன்கு வதக்கி சுடசுடக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர்.
சப்பாத்தி மீந்துவிட்டால், அடுத்த நாள், அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, பருப்பை வேகவைத்து, அதற்கு பிறகு பச்சைமிளகாய், கடுகு உளுத்தம்பருப்பு கல்லப்பருப்பு போட்டு அதில் இந்த சப்பாத்தி துண்டுகளைப் போட்டு சிறிது தண்ணீர் அளவு குறையும் வரை கொதிக்க வைத்து பிறகு அப்படியே சாப்பிடலாம்.
சப்பாத்தி சாப்பிடாதவரும் இதனை சாப்பிடவிரும்புவர்.
ஃபூல்கா சப்பாத்திக்கு இன்னும் சுலபம்.
வட்டமாக தேய்த்த சப்பாத்தி மாவை, சூடான தோசைக்கல்லியில் இருபுறமும் அரை நிமிடம் வாட்டி ,பின் நேரடியாக தணலில் காட்ட வேண்டியது தான்,பூரி போல உப்பி வரும்,சாஃப்டாகவும் இருக்கும்.
Post a Comment