முத்து பக்கோடா---சமையல் குறிப்புகள்,
முத்து பக்கோடா பயப்படாதீர்கள் - ஜவ்வரிசியில் செய்யும் பக்கோடா தான், வேறொன்றுமில்லை.... தேவையான பொருட்கள் : சற்றுப் பெரிய ஜவ்வரிசி - 1...

பயப்படாதீர்கள் - ஜவ்வரிசியில் செய்யும் பக்கோடா தான், வேறொன்றுமில்லை....
தேவையான பொருட்கள் :
சற்றுப் பெரிய ஜவ்வரிசி - 1 கப்
புளித்த தயிர் - 1/2 அல்லது 3/4 கப்
கடலை மாவு - 1/2 கப்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - தேவைக்கேற்ப
மிளகாய்ப் பொடி, அல்லது பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை,
கொத்தமல்லித்தழை - அவரவர் தேவைகேற்ப
செய்முறை :
ஜவ்வரிசியை நன்றாக அலம்பிக் களைந்துவிட்டு, புளித்த தயிரில், மூழ்கும் அளவுக்கு, 1/2 மணி ஊற வைக்கவும்.
தயிரையெல்லாம் உறிஞ்சிக்கொண்டு ஜவ்வரிசி, முத்து முத்தாக [ அப்பாடா, தலைப்பைக் கொண்டுவந்துவிட்டேன் !] வந்திருக்கும்.
அதில், கடலை மாவு, அரிசிமாவு, சோளமாவு, உப்பு, மிளகாய்ப்பொடி, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை எல்லாம் போட்டுப் பிசிறிவைத்துக் கொள்ளவும் - குணுக்கு மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
வாணலியில் ரிபைன்டு எண்ணை விட்டு, அது காய்ந்ததும், அதில் 1 ஸ்பூன் எடுத்து , ஜவ்வரிசிக் கலவையில் விட்டுக் கொள்ளவும்.
எண்ணையில் பொரிக்கும் பதார்த்தங்கள் எல்லாவற்றுக்கும் இப்படிச் செய்தால், மொறு மொறுவென்று வரும்.
காய்ந்த எண்ணையில், ஜவ்வரிசிக் கலவையை, சிறிது சிறிதாக குணுக்கு மாதிரிப் போட்டு, நன்கு வெந்து சிவந்தபின் எடுத்துப் பறிமாறவும்; எண்ணையை நிதானமான சூட்டிலேயே வைத்திருக்கவும்.
Post a Comment