சமையல் குறிப்புகள்! கறி வடை--மிளகு கறி

கறி வடை தேவையான பொருட்கள் கீமா(கொத்திய கறி ) - நூரு கிராம் பூண்டு - நான்கு பல்லு காஞ்சமிளகாய் - இரண்டு பச்ச மிளகாய் - ஒன்று கரம் மசாலா தூள...

கறி வடை
தேவையான பொருட்கள் கீமா(கொத்திய கறி ) - நூரு கிராம் பூண்டு - நான்கு பல்லு காஞ்சமிளகாய் - இரண்டு பச்ச மிளகாய் - ஒன்று கரம் மசாலா தூள் - கால் தேக்கரன்டி (பட்டைம்கிராம்பு,ஏலம்) தேங்காய் - இரண்டு பத்தை வெங்காயம் - ஒன்று கொத்து மல்லி கீரை - கால் கட்டு கடலை பருப்பு - கால் கப் மைதா,கார்ன்பிளர் பவுடர் - தலா ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் - ஒரு தேக்கரண்டி எண்ணை - பொரிக்க தேவயான அளவு செய்முறை கடலை பருப்பை அரைமணி நேரம் ஊறவைகவும். அதற்குள் கொத்திய கறியை கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி அதைல் காஞ்சமிளகய்,பூண்டு, பச்ச மிளகாய், உப்பு போட்டு சுர்ட்டி வேக வைத்து தண்ணிரை வற்ற விடவும். வற்றியதும் அதில் ஆலிவ் ஆயில்,வெங்காயம் போட்டு மேலும் ஒரு முறை பிறட்டி, கொத்து மல்லியும், தேங்காயை பொடியாக அரிந்து அல்லது துருவி சேர்த்து ஊறவைத்த கடலை பருப்பையும் சேர்த்து சுருட்டி கரம் மசாலா பொடி சேர்த்து ஆறவக்கவும். ஆறியது மிக்சியில் முதலில் மைதா, கார்ன்பிளார் மாவை போட்டு பிறகு ஆறிய கலவையை போட்டு நல்ல அரைத்து ஒரு தவ்வாவில் வேண்டிய வடிவில் தட்டி பொரிதெடுக்கவும். உதிர்ந்து போனால் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து பிசறிக்கொள்ளவும் அனைத்தையும் போட்டு நன்றாக கலந்து, வடை போன்று தட்டிகொள்ளவும். வாணலியில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு தட்டிய வடைகளைப் போட்டு, இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.. குறிப்பு:
இதை சீக்கன் மீனுலும் செய்யலாம். -----------------------------------------------------------------------------------
கறி வடை -2
இது சாதத்துடன் சாப்பிடும் கறி வகை. தனியாக மாலை நேர சிற்றுண்டியாக, லெமன் சாறு கலந்த வெங்காயத்தோடு சாப்பிடுவதற்கும் சுவையாக இருக்கும்! தேவையான பொருட்கள் மட்டன் அல்லது பீஃப்(எலும்பு நீக்கியது) - 1/4 கிலோ தேங்காய் (அரைத்தது) - 2 ஸ்பூன் வெங்காயம் - பாதி பச்சை மிளகாய் - 3 மல்லி கீரை - பாதி கட்டு மசாலாத்தூள் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் முட்டை - 1 உப்பு - தேவைக்கு செய்முறை முதலில் எலும்பு நீக்கிய கறியை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,அரைத்த தேங்காய், உப்பு, மசாலாத்தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது,நைஸாக அரிந்த மல்லி கீரை, கலக்கிய முட்டை அனைத்தையும் போட்டு நன்றாக கலந்து, வடை போன்று தட்டிகொள்ளவும். வாணலியில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு தட்டிய வடைகளைப் போட்டு, இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். ----------------------------------------------------------------------
இறைச்சிவடை -3
தேவையான பொருட்கள் ஆட்டு இறைச்சி(அ)மாட்டு இறைச்சி அரைத்தது- 400 கிராம் இஞ்சி,பூண்டுவிழுது- 1தேக்கரண்டி முட்டை - 1 நாட்டு வெங்காயம்- 50 கிராம் அரைத்த தேங்காய் விழுது- 1மேஜைக்கரண்டி பச்சை மிளகாய் - 2 மல்லி இலை அரிந்தது- 1 மேஜைக்கரன்டி கரம் மசாலாப்பொடி- 1 தேக்கரண்டி மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி மஞ்சள் பொடி- 1/2 தேக்கரண்டி மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி இனிப்பில்லாத ப்ரட் துண்டு - 1 சோள மாவு - 1 மேஜைக்கரண்டி சமையல் எண்ணை- 2 மேஜைக்கரண்டி உப்பு- தேவையான அளவு செய்முறை முதலில் அரைத்த இறைச்சியுடன் ப்ரட் துண்டைப்போட்டு மிக்ஸியில் அரைக்கவும்,மேலும் அதில் அரைத்த இஞ்சி பூண்டு விழுது மசாலா பவுடர்,அரிந்த வெங்காயம்,பொடிதாக நருக்கிய பச்சை மிளகாய், மஞ்சள் பொடி,மிளகாய்ப்பொடி உப்பு அணைத்தயும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்,மேலும் அதில் அரைத்த தேங்காய் விழுது,சோள மாவு முட்டை ஆகிய பொருட்க்களை சேர்த்து நன்ங்கு பிசந்து வைக்கவும் பிறகு ஒரு நான்ஸ்டிக் தவாவில் எண்ணை விட்டு காய்ந்ததும் அதில் இறைச்சிக்கலவையை பருப்பு வடைப்போல் தட்டி போடவும்,இனி மிதமான தீயில் வெந்ததும் திருப்பி போட்டு சிவந்த பின்பு எடுத்து சூடாக பறிமாறவும் குறிப்பு: காரம் அவரவர்களுக்கு ஏற்றார்ப்போல் கூட்டவோ குறைத்தோ சேர்த்துக்கொள்ளலாம் ------------------------------------------------------------------------------------------------
மிளகு கறி
குளிர் காலங்களில் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம் தேவையான பொருட்கள் மட்டன் - அரை கிலோ காஞ்ச மிளகாய் - முன்று பூண்டு - ஒரு முழு பூண்டு மிளகு தூள் - ஒரு மேசை கரண்டி சீரகதூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவைக்கு எண்ணை - ஐந்து தேக்கரண்டி வெங்காயம் - நான்கு கருவேப்பிலை - ஐந்து ஆர்க் செய்முறை எண்ணையை காய வைத்து அதில் காஞ்ச மிளகாய், கருவேப்பிலை, வெங்காயம் போட்டு நன்கு வதக்க வேண்டும். பிறகு வூண்டை பொடியாகா அரிந்து போட்டு வதக்கி கறியை சேர்த்து கிளறி உப்பும் சேர்த்து தீயை சிம்மில் வைத்து வேக வைக்க வேண்டும். கடைசியில் மிளகு சீரக தூள் தூவி மீண்டும் கிளறி ஐந்து நிமிடம் தீயை சிம்மில் வைத்து இறக்க வேண்டும். -------------------------------------------------------------------------------------------

Related

சமையல் குறிப்புகள் 5673314660159400684

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item