அப்படி என்ன இருக்கிறது இந்த மஞ்சளிலே? சொல்லுகிறேன் கேட்டுக்கங்க. கபத்துக்கும், வாதத்துக்கும் இது ரொம்ப ரொம்ப நல்லதுங்க. பையன் விளையாடும்போ...

அப்படி என்ன இருக்கிறது இந்த மஞ்சளிலே? சொல்லுகிறேன் கேட்டுக்கங்க. கபத்துக்கும், வாதத்துக்கும் இது ரொம்ப ரொம்ப நல்லதுங்க. பையன் விளையாடும்போது அடிபட் டுட்டான். இரத்தக்கட்டு வேற. என்ன செய்யலாம்? மஞ்சளை அரைத்துப் போடுங்க. இரண்டு அல்லது மூன்று முறை போட்டதுமே குணம் தெரியுமே? புண், சிரங்கு, வேனில் கட்டிக்கு, மஞ்சளோட கொஞ்சம் வேப்பிலையும் சேர்த்து, நீர்விட்டு மைபோல் குழைய அரைத்துப் போட்டுவர விரைவில் ஆறிவிடும். பழுத்தும் உடையாத வேனில் கட்டியை உடையவைக்க மஞ்சளையும், கார சோப்பையும் (துணிக்குப் போடும் சோப்பு) இழைத்துப் போட்டால் உடைந்து விடும். குழந்தைகளின் தொடர்ந்த இருமலுக்கு மஞ்சள் கைகண்ட மருந்து. வெந்நீரில் சிறிது பெருங்காயம், மஞ்சள் தூள் கலந்து பருகக் கொடுத்தால் இருமல் நின்றுவிடும். மூக்கடைப்பு ஏற் பட்டால் மஞ்சளைச் சுட்டு அந்தப் புகையை முகர்ந்தால் சரியாகி விடும். விரளி மஞ்சள் தூளை நல்ல எண்ணெயில் இட்டுக் காய்ச்சவும். இதைத் தேய்த்துக் குளித்தால், மூக்கில் நீர்வடிவது நின்று விடும். வயிற்றில் இருக்கும் கிருமிகளைப் போக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. பச்சை மஞ்சளை அரைத்து சில நாட்கள் வெறும் வயிற்றில் காலை சாப்பிட்டு வந்தால் குடல் பிணிகள் தீரும். பூச்சித் தொல்லை நீங்கும். தொண்டைப்புண்ணுக்கு மஞ்சள் தூளை பாலில் கலந்து சாப்பிட்டு வர, விரைவில் குணமாகும். சிறுநீரகத்தில் கற் கள் இருக்கிறதோ? கவலைப் படாதீங்க, காய்ந்த மஞ்சள், வெல்லம் இரண்டையும் சமமா எடுத்துக்குங்க. அரிசி களைந்த நீர்விட்டு அரைத்து வடிகட்டி சாப்பிட்டு வந்தால், சீறுநீரகக் கற்கள் கரைந்து சிறுநீரில் வெளியேறி விடும். நகச்சுற்றுக்கு மஞ்சள் நல்ல மருந்து. சிறிது மஞ்சள்பொடி, சுண்ணாம்பு இரண்டையும் குழைத்துப் போட்டு வந்தால் விரைவில் குணம் தெரியுமே. கண் உஷ்ணத்தினால் எரிச்சல் உண்டாகி அவதிப்பட்டால் மஞ்சள் கஷாயம் போட்டு, ஆறிய பின் அதனால் கண்களைக் கழுவி வர வேண்டும். மஞ்சள் நீரில் நனைத்த துணியால் கண்களை ஒற்றி எடுத்தாலும் நல்லது. உஷ்ணம் மற்றும் கண் சிவப்பும் கூட மாறி குணமாகி விடும். மஞ்சள், மிளகு இரண்டையும் சம அளவு எடுத்து விழுதாக அரைக்க வேண்டும். இந்த விழுதை மோரில் கலக்கி இளம் பெண்கள் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய்க் காலங்களில் வரும் வயிற்று உபாதை, தலைவலி எல்லாம் காணாமற் போய் விடும். சமையலில் மஞ்சள் எவ்வளவுக்கு எவ்வளவு சேர்க்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டென்றால், இதன் மகிமை சொல்லவும் இயலுமோ? அடிபட்ட இடத்தில் இரத்தக்கட்டுடன், வீக்கமாய் இருப்பின், அரிசிமாவு, மஞ்சள், விளக்கெண்ணெய் கலந்து இரும்புக் கரண்டியிலிட்டுக் கிண்டினால் திரண்டு வரும். சூட்டுடனே, மெல்லிய துணியில் அதனை வைத்து, முடிச்சிட்டு, ஒத்தடம் கொடுத்தால், வீக்கம் குறைந்து, இரத்தக் கட்டும் குறைந்து விடும். வலிக்கு இதமாக இருக்கும். இருமல் தொடர்ந்து தொல்லை செய்கிறதா? கவலை வேண்டாம். மஞ்சள் தூளை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் குணம் ஆகிவிடும். மஞ்சள் தேய்த்துக் குளிப்பது பெண் களுக்கு மங்கலம். தோல்நோய்கள் அண்டாது. இப்போது ஒரு அழகுசாதனக் குறிப்பு சொல்லட்டுமா? மஞ்சள், வேப்பம்பூ, வெள்ளரிக்காய் மூன் றையும் அரைத்து உட லில் பூசிக் குளித்து வந்தால் நாளடைவில் சருமம் நல்லநிறம் பெறும். அதுமட்டுமின்றி இரவு தூங்கப் போவதற்கு முன்னால் காய்ச்சிய பசும்பாலில், தேன், மஞ்சள் பொடி, சிறிது குங்குமப்பூ சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடம்பும், முகமும் பளபள என்றாகி விடுமே! அட எங்கே போறீங்க? சமையலறையில் மஞ்சள் இருக்கான்னு பார்க்கக் கிளம்பிட் டீங்களா? தனியா தனியான்னு ஒரு சாமான். அட அதுதாங்க கொத்துமல்லி விதை. அது இல்லாம சமையலா? சரிதான் சமையலுக்கு மட்டுமா அது பயன்படுது? இதோ இப்ப பார்க்கலாமா அது இன்னும் எதுக்கெல்லாம் பயன்படுதுங்கிறத? காலைல படுக்கைய விட்டு எழுந்ததும் இலேசாய்த் தலை சுத்துது. நெற்றிப்பொட்டு இரண்டும் விண் விண்ணுனு தெறிக்குது. பித்தமா இருக்குமோ? வாந்தி வேற வரமாதிரி இருக்கா? கவலையே படாதீங்க! ஒரு டேபிள் ஸ்பூன் தனியா, சிறு இஞ்சித் துண்டு, கிஸ்மிஸ் (அதுதாங்க உலர்ந்த திராட்சை) பழம் ஐந்து எல்லாத்தையும் அம்மியில வெந்நீர் விட்டு அரைக்கணும். பிறகு வடிகட்டி, தேன் கலந்து அரை டம்ளர் குடிங்க. புத்துணர்ச்சியோட வேலைகளைப் பார்க்கத் துவங்குவீங்களே. இதை `மல்லி சொரஸம்' அப்படீன்னு சொல்வாங்க. இது அந்தக் காலத்துல பெரியவங்க கையாண்ட முறை. உஷ்ணத்தால் சில பேருக்கு பேதியாகும். கடுப்பா இருக்கும். ஏன் எரிச்சல் கூட ஏற்படும். இதுக்கு மருந்து இதோ. தனியாவைச் சிறிது எடுத்து வாணலியில் வறுத்து தூள் செய்துக்கணும். அதோட சமஅளவு சர்க்கரை கலந்து 1 ஸ்பூன் எடுத்து வாயில் போட்டு, கொஞ்சம் நீர் சேர்த்து சாப்பிடவும். இப்படி 3 வேளை சாப்பிட்டா பேதியும் குணமாகும். வயிற்றுவலி, எரிச்சல் எல்லாம் நீங்கி விடும். சுக்குமல்லிகாபி. இப்பவெல்லாம் இது ரொம்பப் பேசப்படற ஒரு பானம். சுக்கைப் பொடி செய்துக்கவேணும். தனியாவை லேசா வறுத்துப் பொடி செய்து சமஅளவு இரண்டையும் கலந்து, இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் பொடியோட ஒரு டம்ளர் நீர் விட்டுக் கொதிக்க வைங்க. பிறகு இறக்கி வடிகட்டி பால் சேர்த்து, வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்துக் குடிச்சா, ஆஹா என்ன சுவை! உடம்பிற்கும் ரொம்ப நல்லது. தாகம், நாவறட்சி தீரும். உடம்பு சூட்டுக்கு, அதாவது உஷ்ண உடல்வாகு கொண்டவங்க, வெறும் தனியா கஷாயம், பால், சிறிது சீனி சேர்த்து அருந்தலாம்.

Related

மூலிகைகள் கீரைகள் 2548630977999590668

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item