சுலைமானி வித் சாப்ரான் (சளிக்கு)
இது சளி தொல்லைக்கு அனைவருக்கும் ஒரு அரு மருந்து, அரேபியர்கள் பெரும்பாலும் விரும்பி குடிப்பது சுலைமானி டீ தான். தேவையான பொருட்கள் தண்ணீர் - ...
https://pettagum.blogspot.com/2011/01/blog-post_3882.html
இது சளி தொல்லைக்கு அனைவருக்கும் ஒரு அரு மருந்து, அரேபியர்கள் பெரும்பாலும் விரும்பி குடிப்பது சுலைமானி டீ தான்.
தேவையான பொருட்கள்
தண்ணீர் - நாலு டம்ளர்
சர்க்கரை - ஐந்து டீஸ்பூன்
டீ தூள் - ஒரு டீஸ்பூன்
சாப்ரான்(குங்கும பூ) - எட்டு இதழ்
செய்முறை
தண்ணீரைகொதிக்க வைத்து அதில் டீ தூளை போடவும்.
கொதிவந்து டீ ரங்கு இரங்கியதும் வடிகட்டி சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
பிறகு நாலு கப்பில் டீயை ஊற்றி விட்டு ஒவ்வொரு கப்பிலும் இரண்டு இரண்டு இதழ் சாப்ரானை போட்டு குடிக்கவும்.
குறிப்பு:
வெளி நாடுகளில் டீ பேக் தான் உபயோகப்படுத்துவார்கள். நாலு கப் சுலைமாணிக்கு இரண்டு டீ பேக்குகள் போதுமானது. இது கொஞ்சம் லைட்டாக இருந்தால் தான் நல்ல இருக்கும்
Post a Comment