சமையல் குறிப்புகள்! மூலிகை குழம்பு

மூலிகை குழம்பு தேவையானப் பொருட்கள் சின்ன வெங்காயம் - 8 தக்காளி - 2 வடகம் - அரை மேசைக்கரண்டி புளி - சிறிய நெல்லிக்காய் அளவு பச்சை மிளகாய் -...

மூலிகை குழம்பு தேவையானப் பொருட்கள் சின்ன வெங்காயம் - 8 தக்காளி - 2 வடகம் - அரை மேசைக்கரண்டி புளி - சிறிய நெல்லிக்காய் அளவு பச்சை மிளகாய் - 3 பூண்டு - 13 பல் சீரகம் - ஒன்றரை தேக்கரண்டி மிளகு - ஒரு தேக்கரண்டி தேங்காய் துருவல் - ஒரு கப் மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி மல்லி தூள் - 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி மா இலை கொழுந்து - 7 வெற்றிலை - 5 மனத்ததக்காளி இலை - 25 நம்பர் உப்பு - அரை தேக்கரண்டி சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். புளியுடன் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் ஊற வைத்து கரைத்து கால் கப் அளவு திக்கான புளி கரைசல் எடுத்துக் கொள்ளவும். மா இலை, வெற்றிலை மற்றும் மணத்ததக்காளி இலை மூன்றையும் சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொடி வகைகளை தயாராக எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், மிளகு போட்டு வதக்கி விட்டு நறுக்கின சின்ன வெங்காயத்தை போட்டு 3 நிமிடம் வதக்கவும். அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி துண்டுகள் மற்றும் பூண்டு சேர்த்து 3 நிமிடம் வதக்கி எடுத்து ஆற வைக்கவும். முதலில் ஆற வைத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் மா இலையும், வெற்றிலையும் சேர்த்து மிக்ஸியில் அல்லது அம்மியில் வைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலையும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, வடகம், பச்சை மிளகாய், மணத்ததக்காளி இலை போட்டு வதக்கவும். அதில் அரைத்த வெங்காய தக்காளி விழுதை போடவும். பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் போட்டு புளி கரைசலை ஊற்றவும். புளி கரைசல் ஊற்றிய பிறகு 3 நிமிடம் நன்கு கெட்டியாகும் வரை கிளறவும். அதன் பின்னர் 4 நிமிடம் மூடி வைக்கவும். 4 நிமிடம் கொதித்ததும் தேங்காய் விழுது சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கலக்கி மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும். அரைத்து வைத்திருக்கும் மா இலை, வெற்றிலை விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 10 நிமிடம் கழித்து இறக்குவதற்கு முன் மா இலை சாறை ஊற்றி கலக்கி விட்டு மூடி வைத்து 3 நிமிடம் கழித்து இறக்கவும். சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த மூலிகை குழம்பு தயார். வாரத்தில் ஒரு முறை இந்த மூலிகை குழம்பை செய்து சாப்பிட்டால் நம் உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Related

சமையல் குறிப்புகள் 5484556194046629245

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item