மார்பக ஆரோக்கியம் - ஒரு செக் லிஸ்ட்!

மார்பக ஆரோக்கியம் - ஒரு செக் லிஸ்ட்! ஜெயராணி, மகப்பேறு மருத்துவர் மா ர்பகங்கள் அழகுக்கான அடையாளம் மட்டும் கிடையாது. அவை ஆரோக்கியத் ...

மார்பக ஆரோக்கியம் - ஒரு செக் லிஸ்ட்!

ஜெயராணி, மகப்பேறு மருத்துவர்
மார்பகங்கள் அழகுக்கான அடையாளம் மட்டும் கிடையாது. அவை ஆரோக்கியத் துக்கான காரணியும்கூட. கடந்த சில வருடங்களாக, ‘குழந்தைக்குப் பால் கொடுக்கலைன்னா மார்பகப் புற்றுநோய் வரும்’, ‘கால தாமதமா குழந்தை பெத்துக்கிட்டா மார்பகப் புற்றுநோய் வந்துடும்’, ‘கருத்தடை மாத்திரை சாப்பிட்டா கேன்சர் வந்துடும்’ என்று ஏகப்பட்ட அச்சுறுத்தல்களைக் கடக்கிறோம். மார்பகங்களின் ஆரோக்கியத்துக்கு எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று மகப்பேறு மருத்துவர் ஜெயராணியிடம் கேட்டோம்.

கருத்தடை மாத்திரை மார்பகப்புற்றுக்கான வாய்ப்பை ஏற்படுத்துமா?

‘‘அந்த அபாயம் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். குடும்ப வரலாற்றில் ஏற்கெனவே ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பிருந்தால், அப்படிப்பட்ட பெண்களுக்குக் கருத்தடை மாத்திரை களை மருத்துவர்கள் பரிந்துரைப்பதைத் தவிர்ப்பார்கள். இந்த மாத்திரைகளில் இருக்கிற ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் மார்பகப் புற்றுக்கான வாய்ப்பை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அதிகப்படுத்திவிடலாம். இவர்கள் மாத்திரைகளைத் தவிர்த்துவிட்டு, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, மற்ற கருத்தடை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இறுக்கமான பிரா மார்பகப் புற்றை ஏற்படுத்துமா?

இறுக்கமான பிரா மற்றும் அண்டர் வொயர் பிராவால் மார்பகப் புற்று வர வாய்ப்பிருக்கிறதா என்று நிறைய பெண்கள் கேட்கிறார்கள். இறுக்கமான பிராக்களைத் தொடர்ந்து அணிந்தால், மார்பகங்களில் ரத்த ஓட்டம் தடைப்படுகிற பிரச்னை வரும். இதனால் மார்பகங்களில் புற்றுநோய் ஏற்படும் என்பது இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. பொதுவாக, சீரான ரத்த ஓட்டம் தடைப்படும் வகையிலான பிரா அணிவதைத் தவிர்ப்பது நல்லது.



மார்பகங்களை அழகுபடுத்தும் சிகிச்சைகளால் ஆபத்தா?

மார்பகங்களைப் பெரியதாக்கும் என்று விளம்பரம் செய்யப்படுகிற மசாஜ் க்ரீம், மாத்திரைகளில் ஆரம்பித்து மார்பகங்களுக்குள் சிலிக்கான்வைத்துப் பெரியதாக்கும் அறுவை சிகிச்சைவரை எல்லாமே பெண்களுக்கு ஆபத்தான விஷயங்கள்தாம். இவற்றால், மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

ஹார்மோன் தெரபி சிக்கலை ஏற்படுத்துமா?

மெனோபாஸ் நேரத்தில் சில பெண்களுக்கு ஹார்மோன் தெரபி சிகிச்சை செய்யவேண்டி வரலாம். அப்போது, சம்பந்தப்பட்ட பெண்களின் உடல்நிலைக்கு ஏற்ப, பாதுகாப்பான அளவில்தான் மருத்துவர்கள் இந்த ஹார்மோன் சிகிச்சையை மேற்கொள்வார்கள். அதையும் மீறி அளவு அதிகமாகி விட்டால், ஹார்மோன் தெரபியே மார்பக கேன்சரை ஏற்படுத்திவிடலாம்.

அடிக்கடி மேமோகிராம் பரிசோதனை மேற்கொள்ளலாமா?

மார்பகப் புற்றைக் கண்டறியும் மேமோகிராம் பரிசோதனையை மேற்கொள்ளும்போது, மார்பகங் களுக்குள் பாய்கிற கதிர்வீச்சுகளால்கூட புற்றுநோய் வரலாம். அதற்குப் பதிலாக அல்ட்ரா சவுண்ட் முறையிலான சோனார் மேமோகிராம் செய்துகொள்வது நல்லது. 

மார்பக மசாஜ் நல்லதா?

சில துளிகள் ஆலிவ் ஆயிலை மார்பகங்களில் தடவி, தினமும் 10 நிமிடங்கள் மட்டும் மென்மையாகக் கடிகார சுழற்சியில் மசாஜ் செய்து வருவது மார்பகங்களுக்கு நல்லது. இதனால், மார்பகங்களில் ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு,  மார்பகங்களுக்குள்ளே உருவாகும் சிறு சிறு நார்க்கட்டிகள் வராமல் தடுக்கலாம்.

உடல் எடையும் உணவுப் பழக்கமும் மார்பகங்களைப் பாதிக்குமா?

உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு, உடலில் ஈஸ்ட்ரோஜெனின் சுரப்பும் அதிகமாக இருக்கும். அளவுக்கு அதிகமான ஈஸ்ட்ரோஜென் மார்பகங்களுக்கு ஆபத்தான விஷயம். அதனால், பருமன் பிரச்னை இருப்பவர்கள் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி என்று செய்து எடையைக் கட்டுக்குள் கொண்டுவருவதுதான் மார்பகங்களுக்கு நல்லது.

உணவுப் பழக்கத்தைப் பொறுத்தவரை, ஹார்மோன் ஊசி போடப்பட்ட இறைச்சி வகைகளை அதிகம் சாப்பிட்டாலும் மார்பகப் புற்று வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். ஹார்மோன் ஊசி போட்டு வளர்க்காத நாட்டுக்கோழி, வீட்டில் வளர்த்த ஆடு என கவனமாகப் பார்த்து வாங்கிச் சாப்பிட  வேண்டும். பச்சைக் காய்கறிகள், இயற்கைப் புரதம் நிறைந்த சுண்டல் வகைகள், தாவரக் கொழுப்பு ஆகியவை மார்பக ஆரோக்கியத்துக்கான உணவுகள்.

மற்றபடி, காலதாமதத் திருமணம், 35 வயதுக்கு மேல் முதல் குழந்தையைப் பெற்றுக்கொள்வது,  குழந்தைக்குப் பாலூட்ட முடியாமல் போவது என இவையெல்லாம் பல நேரங்களில் நம் கைகளில் இல்லை. அவற்றைப் பற்றி கவலைப்படாமல், மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி மார்பக ஆரோக்கியத்தை உறுதி செய்துகொள்ளுங்கள்.’’

Related

பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் 7790773604039072079

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Tuesday - Nov 26, 2024 10:31:55 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,118

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item