என்ன சேவைகளை இணையம் வழி பெறலாம்?

- மா.பாரி, முன்னாள் உதவிப் பொது மேலாளர், லஷ்மி விலாஸ் வங்கி வங்கிகள் இணையதளம் வழி சேவைகளைத் தொடங்கி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. ...

- மா.பாரி, முன்னாள் உதவிப் பொது மேலாளர், லஷ்மி விலாஸ் வங்கி

வங்கிகள் இணையதளம் வழி சேவைகளைத் தொடங்கி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.  வங்கிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தே இன்டர்நெட் மூலம் வங்கி மற்றும் நுகர்வோர் துறைகள் சார்ந்த பலவகைப் பரிமாற்றங்களைச் செய்ய இயலும். அனைத்து வங்கிகளும் இன்றைக்குப் பல்வேறு வகையான இணைய தளச் சேவைகளை அளிக்கின்றன.

ஆனாலும்கூட, டிராக்டர் வந்தாலும் உழுவதற்கு எருதுகளையே பயன்படுத்துவேன் என்று அடம் பிடிக்கும் விவசாயிகளைப் போல பல வாடிக்கையாளர்கள் அதிலும் குறிப்பாக நடுத்தர மற்றும் முதியவர்கள் சிறு தொகைக்கான பரிமாற்றங்களுக்கும் வங்கிக்குச் செல்வதற்கே விரும்புகிறார்கள். ஒருபுறம் வங்கிக்குச் செல்வதையே பழக்கமாக்கிக் கொண்ட மனம்.  மற்றொருபுறம் அறிவியல் சார்ந்த புதிய உத்திகளைக் கையாளுவதில் உள்ள பயம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில விவரங்களும் பாதுகாப்புக் கவசங்களும் உங்கள் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தும்.

என்ன சேவைகளை இணையம் வழி பெறலாம்?

வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் இன்றைய இணையதளச் சேவைகளைப் பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை விவரம் பெறுவதற்கான சேவைகள் மற்றும் பணப் பரிமாற்றச் சேவைகள்.

 Ø    தனது கணக்கிலுள்ள இருப்புத் தொகைகள், வைப்பு நிதிகளின் முதிர்வு தேதிகள், கடன் கணக்குகளில் உள்ள நிலுவைத் தொகைகள், கணக்கு விவரங்கள் (Account Statement), காசோலைப் புத்தகம் பெறுவதற்கான விண்ணப்பம், காசோலைத் தடுப்பிற்கான விண்ணப்பம் (Cheque Stop Payment Request), பல்வேறு வங்கிச் சேவைகளுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் போன்றவை முதல் வகைச் சேவையிலே அடங்கும்.
 Ø    தனது கணக்கிலிருந்து அதே வங்கியில் தான் அல்லது மற்றவர்கள் வைத்திருக்கும் கணக்கில் செலுத்துவதற்கான                                                                                                                              
பணப் பரிமாற்றம்; மற்ற வங்கிகளில் உள்ள கணக்குகளில் வரவு வைப்பதற்கான பரிமாற்றங்கள்; ரயில் முன்பதிவு, மின்வணிகம், தொலைபேசி, மின்கட்டணம், சொத்துவரி போன்றவற்றிற்கான தொகைகளைச் செலுத்துதல் போன்றவற்றிற்கு இன்டர்நெட் பேங்கிங் பேருதவியாக அமைகிறது.  வங்கிக்குச் செல்ல வேண்டாம், எங்கும் வரிசையில் நிற்க வேண்டாம், பணத்தைப் பாதுகாக்க வேண்டாம். அனைத்துச் சேவைகளும் 24 மணி நேரமும் கிடைக்கும். (வங்கிகளுக்கிடையிலான பணப் பரிமாற்றத்திற்கு (NEFT அல்லது RTGS) மட்டும் குறிப்பிட்ட கால வரையறை உண்டு).
ரயில் முன்பதிவு, மின்வணிகம் மற்றும் நுகர்வோர் கட்டணங்களை ஏடிஎம் அட்டை மற்றும் கிரெடிட் கார்டு மூலமும் செலுத்த இயலும்


முதலாவதாக நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலே விண்ணப்பத்தைக் கொடுத்து  இன்டர்நெட் பேங்கிங் வசதியைப் பெற வேண்டும்.  விண்ணப்பத்திலேயே மேற்கண்ட வசதி, விவரம் பெறுவதற்கு மட்டுமா அல்லது பணப்  பரிமாற்றத்திற்கும் தேவையா என்பதைக் குறிப்பிட வேண்டும். தங்கள் விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டபின்னர் வங்கியானது அந்த வசதிக்கான கடவுச் சொல்லை (Pass Word) தங்கள் முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தங்களது வங்கிக் கிளையின் மூலமாகவோ அனுப்பி வைக்கும். குறிப்பிட்ட வங்கியின் இணைய தளத்தில் நுழைந்து வங்கியால் கொடுக்கப்பட்ட தங்கள் நுகர்வோர் அடையாளச் சொல்லையும் (User ID) மற்றும் கடவுச் சொல்லையும் உபயோகித்து தாங்கள் விண்ணப்பித்திருந்த சேவைகளைப் பெறலாம்.

பெரும்பாலானவர்கள் இன்டர்நெட் பேங்கிங் வசதியைச் சொந்தக் கம்ப்யூட்டர் மூலமே அணுகுகின்றார்கள். அதுவே நல்லதும் கூட. அதனோடு பி.எஸ்.என்.எல், டாடா, ஏர்டெல், ரிலையன்ஸ், வோடபோன் போன்ற இன்டர்நெட் சேவை தருவோரின் மூலம் பெறப்பட்ட இன்டர்நெட் வசதியும் (Internet Connection) தேவை. 

பாதுகாப்பு அடுக்குகள்
இன்டர்நெட் சேவைக்கென உள்ள கடவுச் சொல்லைத் தவிர, பணப் பரிமாற்றத்திற்கெனத் தனியாக ஒரு கடவுச் சொல்லும் தரப்படும். பணப் பரிமாற்றத்திற்கு அந்தக் கடவுச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.  பரிமாற்றத்தின் போது பெரும்பாலான வங்கிகள் ஒருமுறைக் கடவுச் சொல்லாகக் (One time Pass Word) குறிப்பிட்ட எண்ணை முன்னரே பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளரின் அலைபேசிக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பும்.  பணப்பரிமாற்றத்திற்கு அந்தக் கடவுச் சொல்லும் பயன்படுத்தப்பட வேண்டும். இது ஒருவகையிலே வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள மூன்றடுக்குப் பாதுகாப்பாகும்.

இணையதளம் மூலமாகக் கோடிக்கணக்கான ரூபாய்கள் வங்கிக் கணக்குகளிலிருந்து திருடப்படுவதும், பொய்யான இணைய தளங்களை உருவாக்கிக் கணக்கு விவரங்கள் பெறப்படுவதும் பாதுகாப்பு அடுக்குகளை மேலும் மேலும் வலுப்படுத்துவதற்கான காரணங்களாக அமைகின்றன.

கடைப்பிடிக்க வேண்டிய எச்சரிக்கைகள்.

வங்கியிலிருந்து பெறப்பட்ட கடவுச் சொல்லை உபயோகித்து உடனடியாக வேறு கடவுச் சொல்லைத் தேர்ந்தெடுங்கள். புதிய கடவுச் சொல் எண், எழுத்து மற்றும் குறியீடுகளை உள்ளடக்கியதாக இருக்கட்டும்.            (Ex.: LTvn#45a) அவ்வப்பொழுது கடவுச் சொல்லை மாற்றிக் கொள்ளுங்கள்.

குறிப்பிட்ட வங்கியின் இணையதளத்தில் நுழைவதற்குத் தங்களுக்கு வந்த மின்னஞ்சலை உபயோகித்தோ அல்லது தங்கள் செயல்பாடின்றித் தாமாகவே உதயமான இணையதளங்கள் வழியோ முயல வேண்டாம்.

வங்கியின் இணையதள முகவரியை நேரடியாக டைப் செய்தல் நலம். தங்கள் வங்கியின் இணைய தள முகவரி “https://” என்று துவங்க வேண்டும் (“http://” என்று அல்ல), முன்குறிப்பிட்ட முகவரித் துவக்கத்தில் உள்ள ‘s’ இணையதளம் பாதுகாப்பானது (secured) என்பதைக் குறிப்பிடுகிறது. முகவரிப் பட்டை (Address Bar) பூட்டுக் குறியுடன் துவங்கிப் பச்சை நிறமாக மாறினால் குறிப்பிட்ட இணையதளம் பாதுகாப்புச் சான்று உடையது என்று பொருள்.

எந்த வங்கியும் இணைய தளம் அல்லது தொலைபேசி மூலமாக உங்கள் தனிப்பட்ட மற்றும் கணக்கு விவரங்களைக் கேட்பதில்லை. ஆகவே தங்கள் கணக்கு விவரங்களைப் புதுப்பிக்கச் சொல்லிக் கேட்கும் யாருக்கும் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் வழி பதில் கொடுக்க வேண்டாம். அத்தகைய மின்னஞ்சல்களின் இணைப்புகளையும் திறக்க வேண்டாம். தேவைப்பட்டால் குறிப்பிட்ட வங்கியின் கிளைக்கு நேரடியாகச் சென்று விவரங்கள் கேட்கலாம்.

இன்டர்நெட் சென்டர் மற்றும் நெட்ஒர்க் மூலம் இணைந்துள்ள கம்ப்யூட்டர்களை உபயோகப் படுத்திப் பணமாற்றம் செய்தல் தவிர்க்கப்பட வேண்டும்.  கம்ப்யூட்டர் மூலம் தாங்கள் செய்த நடவடிக்கைகள் மற்றும் தாங்கள் தட்டச்சு செய்த எண்களையும் எழுத்துக்களையும் அப்படியே மீட்டெடுப்பதற்குச் சில மென்பொருள்கள் (Key Logger) உதவிபுரியும். ஆகவே பொது இடங்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ள நெட்வொர்க்கில் இணைக்கப்பட்ட  கம்ப்யூட்டர்கள் மூலம் பணமாற்றம் செய்தல் கூடாது.

அறிவியல் வழங்கிய கொடைகளான மின்சாரம், போக்குவரத்து வாகனங்கள் போன்றவற்றால் விபத்துக்களும் நிகழ்கின்றனதான். ஆனாலும் அவற்றின் உபயோகம் ஒவ்வொருநாளும் அதிகரிக்கின்றனவே. தக்க பாதுகாப்புக் கவசங்களும் முன்னெச்சரிக்கைகளும் இணைந்தால் இன்டர்நெட் பேங்கிங் வங்கிச் சேவையை லகுவாக்கித் தரும்.  அது இன்றைக்கு மனிதனுக்குக் கிடைத்த சாபமல்ல வரம்தான் என்பதும் உணரப்படும்.

Related

உபயோகமான தகவல்கள் 3458762512011474549

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item