ஆஹா.. அறுசுவை! உணவே மருந்து!!

சமைப்பது, ஒரு வகையில் தவம். மாங்காய்க் குழம்பு, பாயசம், பாகற்காய் பொரியல், வாழைப்பூ கூட்டு, கார வறுவல், ...

சமைப்பது, ஒரு வகையில் தவம். மாங்காய்க் குழம்பு, பாயசம், பாகற்காய் பொரியல், வாழைப்பூ கூட்டு, கார வறுவல், வடுமாங்காய் என அன்றாட உணவில் அறுசுவையையும் படைத்து, ருசித்து மகிழ்ந்த காலம் ஒன்று உண்டு. 
''நாம் உண்ணும் உணவில் தினசரி அறுசுவைகளும் சரியான அளவில் இருந்தாலே, எந்த நோயும் கிட்ட நெருங்காது!'' என்று கூறும் சித்த மருத்துவர் வீரபாபு, அறுசுவையின் அருமை பெருமைகளை விளக்குகிறார்.    
''சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கைப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு என்ற இந்த ஆறு சுவைகள்தான் உணவுக்கு அடிப்படை. நம் உடலில் உள்ள தாதுக்கள் சரிவர இயங்க இந்த அறுசுவையும் சரியாக இருக்க வேண்டும். இன்றோ, நம்மில் பலர், குறிப்பிட்ட சில சுவைகளைத் தொட்டுக்கூடப் பார்ப்பது இல்லை. தொடர்ந்து ஒரேவிதமான சுவையுடைய உணவை அதிகம் உண்பதும், ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடும்'' என்கிற வீரபாபு, எந்தச் சுவையை, எப்படிச் சாப்பிடலாம் என்பது குறித்து விவரிக்கிறார்.
இனிப்பு
மனதுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய சுவை, இனிப்பு. இந்தச் சுவையை நாம் மிதமான அளவு உண்ணும்போது, அது உடலுக்குப் பலத்தைத் தரும். இன்று நாம் சாப்பிடும் உணவிலேயே இனிப்புச் சுவை அதிகம். தவிர, செயற்கை இனிப்பு சேர்த்த ஸ்வீட்ஸ் வகைகளை உண்ணும்போது, உடலில் தேவைக்கு அதிகமாக சர்க்கரை சேர்ந்துவிடும்.  இது போதாதா ஆரோக்கியம் குறைய?
இனிப்பை அதிகம் சாப்பிட்டால், தொப்பை, உடல் பருமன், பித்தம், வாயுத் தொல்லை போன்ற பிரச்னைகள் ஏற்படும். அடிக்கடி சளி பிடிக்கும் உடல்வாகுகொண்டவர்கள் இனிப்புச் சுவையைக் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரைக்குப் பதிலாக பனங்கற்கண்டு, கருப்பட்டி, வெல்லம், இனிப்பு நிறைந்த பழ வகைகள் சாப்பிடலாம்.
புளிப்பு
சாப்பிட்ட உணவு செரிக்க உதவும் சுவை இது. நல்ல ஜீரண சக்தியைத் தந்து, வயிற்றைச் சுத்தப்படுத்தும் பணியையும் செய்கிறது. பசியைத் தூண்டும், நரம்புகளை வலுவாக்கும். ஆனால், புளிப்பு அதிகம் சாப்பிட்டால், வயிறு கோளாறு, பற்கள் வலுவிழத்தல், ரத்த அழுத்தம், உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு.  
எலுமிச்சை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் உள்ள புளிப்பைச் சேர்த்துக்கொள்ளலாம்.
உவர்ப்பு
மற்ற சுவைகளைச் சமன்படுத்தி நாவுக்குச் சுவையைத் தரக்கூடியது இது. உடல்  சூட்டை அதிகப்படுத்தும் என்பதால், மிதமான அளவு உண்ணலாம்.  இதனால், உடல் வியர்வை பெருகி ரத்தம் சுத்தமடையும். அதிகமானால் வாதம், உடலின் உள் உறுப்புகள் பாதிப்பு அடைதல், முடி நரைத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
கடுக்காய், கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உள்ள உவர்ப்புச் சுவை உடலுக்கு மிகவும் நல்லது.
கைப்பு (கசப்பு)  
உடலுக்கு அதிக நன்மையைத் தரக்கூடியது. பலரும் வெறுத்து ஒதுக்கக்கூடிய சுவை இது. வயிற்றில் உள்ள கிருமிகளை அழிக்கும் சிறந்த கிருமிநாசினி.  தோல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தரும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். இந்தச் சுவை அதிகமானால், உடல் உறுப்புகள் சோர்வடைந்துவிடும்.
பாகற்காய், சுண்டைக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ போன்றவற்றில் உள்ள கசப்பு, உணவில் சேர்க்கத் தகுந்தவை.
கார்ப்பு (உறைப்பு)
இந்தச் சுவை நுனி நாக்கில் எரிச்சலை உண்டாக்கும். கண், வாய் போன்றவற்றில் நீர் வரச்செய்யும். மிதமாகப் பயன்படுத்துவது ஜீரணத்துக்கு உதவும். அதிகமானால் வயிறு மற்றும் குடல் பகுதியில் புண்களை உண்டாக்கும்.
வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு ஆகியவற்றின் காரச் சுவையை அளவோடு சேர்த்துக் கொள்ளலாம்.
துவர்ப்பு
மெதுவாக ஜீரணமாகக்கூடிய இந்தச் சுவை, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. கல்லீரல், கணையம், சிறுநீரகத்துக்கு சிறந்தது. பித்தத்தைச் சமன்படுத்தக்கூடியது. அதிகமானால் நாக்கு  தடிக்கும். வாயுவை அதிகப்படுத்தும். வாதம் ஏற்படும் வாய்ப்பும் அதிகம்.
வாழைக்காய், மாதுளை, மாவடு, அத்திக்காய் போன்ற காய் வகைகள் அனைத்திலும் இயற்கையாகவே உள்ள துவர்ப்புச் சுவை, உடலுக்கு நல்லது. 

Related

ஹெல்த் ஸ்பெஷல் 6674518919924212873

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item